Home
Gadgets

கோடை வெயிலை சமாளிக்க தயாரா? பட்ஜெட் விலையில் பிராண்டட் 7 ஏர் கூலர் ரெடி.. பட்டியல் இதோ..

தமிழகத்தில் கோடை வெயில் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுவும் பகல் நேரங்களில் சாலைகளில் அனல் காற்று வீசுவதுடன், கானல் நீர் தோன்றும் அளவுக்கு வெப்பம் உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதியைச் சந்தித்து வருகின்றனர். பகலில் மட்டுமல்லாமல், இரவு நேரங்களிலும் வெப்பம் குறையாமல் நீடிப்பதால் மக்களின் தினசரி வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல்வேறு மக்கள் ஏசி, ஏர் கூலர் மற்றும் மினி ஏர் கூலர் மாடல்களை வாங்கத் தொடங்கியுள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம் அதாவது கம்மி பட்ஜெட்டில் கிடைக்கும் தரமான ஏர் கூலர் (Air Coolers) மாடல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

கோடை வெயிலை சமாளிக்க தயாரா?  பட்ஜெட் விலையில் பிராண்டட் 7 ஏர் கூலர்.

1.கென்ஸ்டார் 27 எல் ரூம்/ பெர்சனல் ஏர் கூலர் (Kenstar 27 L Room/Personal Air Cooler) மாடல் ஆனது தற்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.4,499 விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் 5 BEE ஸ்டார் ரேட்டிங் கொண்டுள்ளது இந்த சாதனம். 27 லிட்டர் வாட்டர் டேங்க், ஹனிகோம்ப் கூல் பேட், 3 ஸ்பீடு கண்ட்ரோல், 12 இன்ச் ஃபேன் போன்ற பல அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளன.

2.சிம்பொனி ஐஸ் கியூப் 40XL (Symphony Ice Cube 40XL) ரூம் ஏர் கூலர் ஆனது அமேசான் தளத்தில் ரூ.5991 விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த சாதனத்தில் மூன்று பக்கமும் ஹனிகோம்ப் கூல் பேட் உள்ளது. 37 லிட்டர் வாட்டர் டேங்க், இன்வெர்ட்டர் இணக்கமானது, சிஎப்டி டெக்னாலஜி உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இதில் உள்ளன.

3.கிராம்ப்டன் ஓசோன் பெர்சனல் ஏர் கூலர் (Crompton Ozone Personal Air Cooler) மாடல் ஆனது அமேசான் தளத்தில் ரூ.5999 விலையில் வாங்க கிடைக்கிறது. 45 லிட்டர் வாட்டர் டேங்க், இன்வெர்ட்டர் இணக்கமானது, 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection), ஐஸ் சேம்பர் (Ice Chamber), 2050 m³/hr ஏர் டெலிவரி உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த சாதனத்தில் உள்ளன.

4.RR 40 எல் ரூம்/ பெர்சனல் ஏர் கூலர் மாடல் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.4906 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த ஏர் கூலர் மாடலில் 1400 cfm ஏர் டெலிவரி, 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection), ஐஸ் சேம்பர் (Ice Chamber),
40 லிட்டர் வாட்டர் டேங்க், ஹனிகோம்ப் கூல் பேட் போன்ற வசதிகள் உள்ளன.

5.வி-கார்டு 22 எல் ரூம்/பெர்சனல் ஏர் கூலர் (V-Guard 22 L Room/Personal Air Cooler) மாடல் பிளிப்கார்ட் தளத்தில் ரூ.6,373 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 3 ஸ்பீடு கண்ட்ரோல், 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection), ஹனிகோம்ப் கூல் பேட், ஐஸ் சேம்பர், 1100 m³/hr ஏர் டெலிவரி போன்ற பல அம்சங்கள் இந்த வி-கார்டு ஏர் கூலர் மாடலில் உள்ளன.

கோடை வெயிலை சமாளிக்க தயாரா?  பட்ஜெட் விலையில் பிராண்டட் 7 ஏர் கூலர்.

6.வோல்டாஸ் 36 எல் ரூம்/பெர்சனல் ஏர் கூலர் (Voltas 36 L Room/Personal Air Cooler) பிளிப்கார்ட் தளத்தில் ரூ.5,299 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 36 லிட்டர் கெப்பாசிட்டி கொண்டுள்ளது வோல்டாஸ் ஏர் கூலர். இதற்கு ஒரு வருட வாரண்டி கூட உள்ளது. மேலும் இந்த ஏர் கூலர் 1350 RPM ஏர் டெலிவரி கொடுக்கும். அதேபோல் இந்த ஏர் கூலர் 4 திசைகளிலும் காற்றை வீசக்கூடியது (4-Way Air Deflection).

7.ஓரியண்ட் எலக்ட்ரிக் 46 எல் ரூம்/பெர்சனல் ஏர் கூலர் (Orient Electric 46 L Room/Personal Air Cooler) மாடல் ரூ.5,799 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 2100 cfm ஏர் டெலிவரி, 3 ஸ்பீடு கண்ட்ரோல், 46 லிட்டர் வாட்டர் டேங்க், ஹனிகோம்ப் கூல் பேட் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
7 Pocket-Friendly Branded Air Coolers to Help You Tackle the Summer Heat
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X