Subscribe to Gizbot

'சாகடிக்கும்' சம்மர் : காதுல இருந்து 'புகை' வாராமல் எஸ்கேப் ஆகணுமா..?

Written By:

இயக்குனர் ஷங்கர் ரேஞ்சுக்கு பட்ஜெட் இருந்தா.. சிவாஜி படத்தில் ரஜினி சார் போட்டுக்கிட்டு வந்த மாதிரி ஏசி டிரஸ் ஒன்னு போடலாம், இல்லனா.. முப்பதுக்கு இருபது என்ற அளவில் ஸ்விம்மிங் பூல் ஒன்னு கட்டி அதுக்குள்ளயே எருமை மாடு போல நாள் முழுக்க மிதக்கலாம் - இப்படி ஒவ்வொருவரின் மண்டைக்குள்ளும் 'கோக்கு மாக்கான' பிளான்களை ஓட விட்டுக்கொண்டிருக்கிறது - சாகடிக்கும் சம்மர்..!

"வெயில் சூடு கிளப்புதோ.. இல்லையோ, நீங்க நல்லா கிளப்புறீங்கப்பா. ஏதோ என்னால முடிஞ்ச மாதிரி சிம்பிளான பட்ஜெட்டில் எதாச்சும் நல்ல ஐடியா இருந்தா சொல்லு.. இல்லனா அப்பிடியே ஓடிப்போய்டு..!" - என்பது தான் உங்கள் மைண்ட் வாய்ஸ் என்றால்..

இதோ எங்களின் (சிம்பிள் பட்ஜெட்) கூல் ஐடியாக்கள்..!!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கூல் ஐடியா 01 :

#1

ஸ்கைலியோ யூஎஸ்பி பேன் - ஆண்ராய்டு (Skyleo USB fan for android phones)

விலை : ரூ.324/-

எளிமை :

#2

ப்ளேட்கள் இல்லாத எளிமையாக உங்கள் ஸ்மார்ட் போன் களுடன் இணைத்துகொள்ளும் வசதி கொண்ட இது யூஎஸ்பி மற்றும் மைக்ரோ யூஎஸ்பி வசதி கொண்டதாகும். கருப்பு, வெள்ளை, பச்சை, ஆரஞ்சு, பிங்க் மற்றும் நீல நிறங்களில் கிடைக்கிறது.

 கூல் ஐடியா 02 :

#3

ஜெனிரிக் மினி பிசி யூஎஸ்பி ரெப்ரிஜிரேட்டர் (Generic Mini PC USB refrigerator)

விலை : ரூ.1,840

 குளிர்ச்சி :

#4

உங்கள் பானங்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் இந்த மினி ப்ரிட்ஜ் ஆனது யூஎஸ்பி மூலம் இணைக்கப்பட்டு மின்சாரம் மூலம் இயங்கும் கருவியாகும். இதில் சூடுபடுத்திக் கொள்ளும் வசதியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

கூல் ஐடியா 03 :

#5

யூஎஸ்பி எல்இடி கிளாக் பேன் (USB LED clock fan)
விலை : ரூ.543

விசிறி :

#6

வளைந்து கொடுக்கும் தன்மையுடைய மெட்டல் கழுத்தை கொண்ட இந்த எல்இடி கிளாக் விசிறியில் மிக எளிமையாக நேரத்தை செட் செய்து கொள்ளலாம். இது ஒரு அற்புதமான ஆபீஸ் கிப்ட் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது..!

கூல் ஐடியா 04 :

#7

சோலார் பவர்டு பேன் கேப் (Solar Powered Fan Cap)
விலை : ரூ.399

காப்பாற்றும் :

#8

இந்த கேப்பில் சூரியசக்தி மூலம் இயங்கும் மினி விசிறிகள் உள்ளடக்கம். கோடை வெயிலில் உலா வர வேண்டிய நிலை வந்தால் இது நிச்சயம் உங்களை காப்பாற்றும்.

கூல் ஐடியா 05 :

#9

சாநிக்ஸ் சாவ்னா பாய் போர்டபில் ஹுமிடிபையர் (Cyanics Sauna Boy portable humidifier)
விலை : ரூ.1,404

ஈரப்பதமூட்டும் :

#10

உலர் குளிரூட்டப்பட்ட காற்று உங்கள் உடலுக்கு சரிபட்டு வரவில்லை என்றால் இது உங்களுக்கு ஈரப்பதமூட்டும், 60 மில்லி லிட்டர் வரையிலாக கொள் திறன் கொண்ட இது எளிமையாக எங்கும் கொண்டு செல்ல முடியும்.

கூல் ஐடியா 06 :

#11

ஹெல்த்ப்ரோ ரீயூசபில் சில்வர் ஸ்டைன்லஸ் ஸ்டீல் ஐஸ் க்யூப்ஸ் (HealthPro Reusable Silver Stainless Steel Ice Cubes)
விலை : ரூ.2, 299

குளிர் :

#12

திரவம் நிரப்பப்பட்ட இந்த க்யூப்ஸ்கள் உங்கள் பானத்தை குளிர்விக்க ஒரு சில நிமிடங்கள் மட்டுமே எடுத்து கொள்ளும். ஒரு ஆர்டரில் 8 முதல் 12 க்யூப்ஸ் வரை கிடைக்கின்றன.

கூல் ஐடியா 07 :

#13

ட்ரூ வினோ மொட் அக்கோர்டியன் கூலிங் கேரியர் (True Vino Mod Accordion Cooling Carrier)
விலை : ரூ.3,303

குளுமை :

#14

மிகவும் எடை குறைவான, காப்பிடப்பட்ட வெளிப்புறம் கொண்ட இந்த பையானது உள்ளிருக்கும் பொருட்களை குளுமையாக வைத்துக்கொள்ளும், எளிமையாக மடித்து கொள்ளும் படி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பையானது பல வகையான வண்ணங்களில் கிடைகிறது.

மேலும் படிக்க :

#15

மேசை மின்விசிறி மூலம் வீட்டிலேயே ஏசி செய்வது எப்படி.??


மின்வெட்டை சமாளிக்க வீட்டிலேயே இன்வெர்ட்டர் செய்வது எப்படி.??

தமிழ் கிஸ்பாட் :

#16

மேலும் பல அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
7 cool gadgets you should not miss this summer. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot