Home
Gadgets

ஓல்டு TV கதை முடிந்தது.. 69 சதவீத ஆஃபரில் 200 இன்ச் புரொஜெக்டர்.. கூகுள் டிவி ஓஎஸ்.. ஆட்டோ போகஸ்.. எந்த மாடல்?

இவ்வளவு கம்மியான விலைக்கு 200 இன்ச் புரொஜெக்டர் கிடைத்தால், வீட்டில் இருக்கும் பழைய டிவியை மறந்துவிட வேண்டியதுதான் என்று சொல்லும்படி பாதிக்கும் மேல் தள்ளுபடி விலைக்கு ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 77ஜி (ZEBRONICS PixaPlay 77G) ஸ்மார்ட் புரொஜெக்டர் கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ், ஆட்டோ போகஸ் போன்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்புகிறது.

இந்தியாவில் ஸ்மார்ட் டிவிகளுக்கு நிகராக ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடல்களுக்கும் வரவேற்பு இருக்கிறது. ஏனென்றால், தொடர்ந்து பயன்படுத்தவில்லை என்றாலும் வாரத்துக்கு ஒரு நாள் தியேட்டர் அனுபவத்தில் மூவிக்கள் அல்லது சீரிஸ் பார்க்க பலருக்கும் விருப்பும் இருக்கிறது. இதனாலேயே கம்மியான விலைக்கு அதிக புரொஜெக்சன் கொடுக்கும் மாடல்களின் விற்பனை நன்றாக இருக்கிறது.

ஓல்டு TV கதை முடிந்தது.. 69 சதவீத ஆஃபரில் 200 இன்ச் புரொஜெக்டர்!

இதில் 200 இன்ச் புரொஜெக்சன் கொடுக்கும் மாடலாக வெளியாகிய ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 77ஜி (ZEBRONICS PixaPlay 77G) ஸ்மார்ட்போன் புரொஜெக்டர் மாடலானது, இப்போது பாதிக்கும் மேல் தள்ளுபடி விலையில் பட்டையை கிளப்பி வருகிறது. பிளிப்கார்ட் தளத்தில் நேரடியாக 69 சதவீத தள்ளுபடி விலைக்கு இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 77ஜி வாங்கி கொள்ள கிடைக்கிறது.

ஆகவே, ரூ.16,999 விலைக்கு ஆர்டர் செய்து கொள்ளலாம். இதுபோக தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,250 தள்ளுபடியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, ரூ.15,749 விலைக்கு இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 77ஜி ஸ்மார்ட் புரொஜெக்டரை வாங்கி கொள்ளலாம். மேலும், 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 77ஜி அம்சங்கள் (ZEBRONICS PixaPlay 77G Specifications): கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்ட மாடலாக இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 77ஜி ஸ்மார்ட் புரொஜெக்டர் கிடைக்கிறது. ஆகவே, நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (YouTube), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட பில்ட்-இன் ஓடிடி ஆப்களை அணுக முடியும்.

டிவியை போலவே யுஐ கிடைக்கும். 200 இன்ச் ப்ரொஜெக்சன் வரையில் இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 77ஜி ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடலில் புரொஜெக்சன் செய்து கொள்ளலாம். 1080p (1920 x1080 பிக்சல்கள்) நேட்டிவ் ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷனில் மூவிக்கள் மற்றும் சீரிஸ்களை பார்த்து கொள்ள முடியும்.

இதுபோக 4K சப்போர்ட் கொடுத்து இருக்கிறது. ஆகவே, 4K என்ஹான்ஸ்டு வீடியோ அவுட்புட்டை இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 77ஜி ஸ்மார்ட் புரொஜெக்டர் கொடுத்து இருக்கிறது. 7500 லுமென்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) மற்றும் 30000 மணி நேரங்களுக்கு லாம்ப் லைப் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, இந்த பட்ஜெட்டுக்கு குவாலிட்டி கிடைக்கும்.

270 டிகிரியில் டில்ட் செய்து கொள்ளும்படியான டிசைனில் கிடைக்கிறது. லென்ஸ் ஷீல்டு கொண்ட மாடலாக இந்த ஜெப்ரானிக்ஸ் பிக்சாபிளே 77ஜி ஸ்மார்ட் புரொஜெக்டர் இருக்கிறது. ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் ஆட்டோ ஸ்கீஸ்டோன் கரெக்சன் (Auto Keystone Correction) கிடைக்கிறது. குவாட் கோர் ப்ரொசஸர் (Quad Core Processor) கொடுக்கப்பட்டு உள்ளது.

2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி கிடைக்கிறது. ஆகவே, லேக்-ப்ரீ அனுபவத்தை எதிர்பார்க்கலாம். ஆண்ட்ராய்டு 11 (Android 11) சப்போர்ட் உள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் வருவதால், கூகுள் காஸ்ட் (Google Cast) கிடைக்கிறது. டூயல்-பேண்ட் வை-பை மற்றும் ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) உள்ளது. மேலும், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் மற்றும் ஆடியோ ஜாக் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
69 Percent Discount on 200 inch ZEBRONICS PixaPlay 77G Within Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X