இதுக்கு மேல விலையை குறைக்க முடியாது.. ரூ.6,499 பட்ஜெட்ல 105 இன்ச்.. ஆட்டோ கீஸ்டோன்.. OTT.. எந்த மாடல்?
அமேசான் (amazon) தளத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 520 ப்ரொஜெக்டர் (Portronics Beem 520) ஆனது தள்ளுபடி விலையில் வாங்கக் கிடைக்கிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த ப்ரொஜெக்டர் அறிமுகம் செய்யப்பட்டது. அதுவும் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்தது. இப்போது இந்த போர்ட்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 520 ப்ரொஜெக்டர் மாடலுக்கு 68 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.6,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது, எனவே இந்த ப்ரொஜெக்டர் மாடலை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 520 ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Portronics Beem 520 Specifications): இது ஒரு எல்இடி (LED) ப்ரொஜெக்டர் ஆகும். அதுவும் 62 இன்ச் முதல் 105 இன்ச் வரையில் புரொஜெக்சன் செய்ய கொள்ளலாம். எனவே பெரிய 100 இன்ச் டிவியே வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. குறிப்பாக இது பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல்1024 x 720 பிக்சல்ஸ், 720p எச்டி நேட்டிவ் ரெசல்யூஷன் (720p native resolution), 4K அல்ட்ரா எச்டி (Ultra HD) சப்போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 520 ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளது. எனவே இதன் மூலம் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும்.
இந்த ப்ரொஜெக்டர் உடன் பில்ட்-இன் டெலஸ்கோபிக் ஸ்டாண்ட் (Built-in Telescopic Stand) வருகிறது. இதை சீலிங் அல்லது டேபிள் என அனைத்து இடங்களிலும் வைத்துப் பயன்படுத்த முடியும். குறிப்பாக 2200 Lumens (2200 லூமென்ஸ்), ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (Auto Keystone Correction) உள்ளிட்ட ஆதரவுகளுடன் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர ஆட்டோமேட்டிக் வெர்டிகல் ஸ்கிரீன் கரெக்சன் (Automatic Vertical Screen Correction) ஆதரவும் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 520 ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளது. அதேபோல் இந்த சாதனத்தில் 3W ஸ்பீக்கர் வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த ப்ரொஜெக்டர் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், ஏயூஎக்ஸ் (AUX) போர்ட், ப்ளூடூத் (Bluetooth), வைஃபை (Wi-Fi) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 520 ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளன. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (YouTube), பிரைம் வீடியோ (Prime Video) போன்ற ஓடிடி ஆப்களை இதன் மூலம் பயன்படுத்த முடியும்.
வெள்ளை நிறத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 520 ப்ரொஜெக்டர் வாங்க கிடைக்கிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 520 ப்ரொஜெக்டர் ஆனது கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ப்ரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








