மிரளுது சேல்.. METAL பாடி.. HD டிஸ்பிளே.. BT காலிங்.. 270mAh பேட்டரி.. எந்த மாடல்?
மெட்டாலிக் பாடி, லக்சரி டிசைன், ப்ளூடூத் காலிங், எச்டி டிஸ்பிளே, 7 நாட்கள் பேட்டரி, ஹெல்த் மானிட்டர்கள் போன்ற ப்ரீமியம் அம்சங்களை கொண்ட போட் எனிக்மா இசட்20 (boAt Enigma Z20) ஸ்மார்ட்வாட்ச் அறிமுக சலுகையில் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.
போட் எனிக்மா இசட்20 அம்சங்கள் (boAt Enigma Z20 Specifications): இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் 1.51 இன்ச் (360 x 360 பிக்சல்கள்) எச்டி (HD) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு டிஎப்டி எல்சிடி (TFT LCD) டிஸ்பிளே மாடலாகும். இந்த டிஸ்பிளேவில் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது.

இந்த போட் வாட்ச் ஃபங்ஷ்னல் கிரவுன் (Functional Crown) கொண்ட ப்ரீமியம் மெட்டல் பாடி (Premium Metal Body) கொண்டிருக்கிறது. அதோடு லெதர் (Leather) மற்றும் மெட்டல் (Metal) ஸ்ட்ராப் வருகிறது. இந்த மாடலில் ப்ளூடூத் காலிங் (Bluetooth Calling) சப்போர்ட் வருகிறது.
ஆகவே, இன்-பில்ட் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் (Microphone/Speaker), குயிக் டயல் பேட் (Quick Dial Pad), 250 கான்டாக்ட்ஸ் (Contacts) சப்போர்ட் கொண்டுள்ளது. அதோடு வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் (Voice Assistant Support) வருகிறது. 100+ மல்டிபிள் ஸ்போர்ட்ஸ் மோட்கள் (Multiple Sports Modes) வருகின்றன.
இதில் ரன்னிங் (Running), ஸ்விம்மிங் (Swimming), சைக்கிளிங் (Cycling) உள்ளிட்ட பல்வேறு மோட்கள் இருக்கிறது. இந்த போட் எனிக்மா இசட்20 வாட்ச்சில் போட் ஹெல்த்/வெல்னஸ் சூட் (Health/Wellness Suite) வருகிறது. ஆகவே, ஹெல்த் மானிட்டர்கள் (Health Monitors) மற்றும் ஹெல்த் டிராக்கர்கள் (Health Trackers) கொண்டிருக்கிறது.

இதில், ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டர் (Blood Oxygen Level Monitor), ஸ்லீப் மானிட்டர் (Sleep Monitor), ப்ரீதிங் மானிட்டர் (Breathing Monitor) மற்றும் டெய்லி ஆக்டிவிட்டி டிராக்கர் (Daily Activity Tracker) ஆகியவை வருகிறது.
இந்த போட் எனிக்மா இசட்20 மாடலில் IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust/Water Resistant) வருகிறது. 270mAh பேட்டரி கொண்டிருக்கிறது. இந்த பேட்டரி தொடர்ந்து 7 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கக்கூடியது. இதை ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்ய 2 மணி நேரங்கள் தேவைப்படுகிறது. இதற்கு டைப்-சி சார்ஜிங் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாடலில் செடண்டரி அலர்ட்ஸ் (Sedentary Alerts), கேமரா கன்ட்ரோல் (Camera Control), மியூசிக் கன்ட்ரோல் (Music Control), வெதர் அப்டேட்ஸ் (Weather Updates), ஸ்டாப்வாட்ச் (Stopwatch), டிஎன்எடி (DND), ஃபைண்ட் மை போன் (Find My Phone) மற்றும் அலாரம் (Alarm) போன்ற பீச்சர்கள் வருகின்றன.
அதேபோல பில்ட்-இன் கேம்ஸ் (Built-in Games), கால், எஸ்எம்எஸ் மற்றும் ஆப் நோட்டிபிகேஷன்களுக்கான ஸ்மார்ட் நோட்டிபிகேஷன் (Smart Notification) சப்போர்ட் வருகிறது. இந்த வாட்ச்சில் ஜெட் பிளாக் (Jet Black), பிரவுண் லெதர் (Brown Leather) மற்றும் மெட்டல் பிளாக் (Metal Black) ஆகிய 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன.
இந்த ஜேட் பிளாக் வேரியண்ட்டின் விலை ரூ.3,299ஆகவும், பிரவுண் லெதர் மற்றும் மெட்டல் பிளாக் வேரியண்ட்டின் விலை ரூ.3,499ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த விலை அறிமுக சலுகை மட்டுமேயாகும். ஆகவே, விரைவில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications