அடிதூள்.. 16ஜிபி மெமரி.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி OS.. ஆஃபரில் 4K ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் டைவா (Daiwa) 43 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுவும் இந்த டிவி டால்பி ஆடியோ, பெசல் லெஸ் டிசைன், 16ஜிபி ரேம் உள்ளிட்ட பல அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டைவா ஸ்மார்ட் டிவிக்குவழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் 43G1Q என்கிற மாடல் நம்பர் கொண்ட டைவா 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு (Daiwa 43 inch QLED Ultra HD 4K Smart Google TV) 65 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.16,999 விலையில் வாங்கிவிட முடியும்.

டைவா 43 இன்ச் கியூஎல்இடி 4கே கூகுள் டிவி அம்சங்கள் (Daiwa 43 inch QLED 4K Smart Google TV Specifications): 4கே கியூஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த டைவா 43 இன்ச் டிவி வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 (HDR 10), 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle)உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
ஏஆர்எம் குவாட் கோர் ஏ55 (ARM Quad Core A55) பிராசஸர் உடன் இந்த டைவா 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த டிவிக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த டிவி பெசல் லெஸ் டிசைன் உடன் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த டைவா 43 இன்ச் டிவி இயங்குகிறது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.
டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 24W ஸ்பீக்கர்கள் உடன் இந்த அட்டகாசமான டைவா 43 இன்ச் கியூஎல்இடி 4கே கூகுள் டிவி வெளிவந்தது. குறிப்பாக இந்த டிவி சிறந்த ஆடியா அனுபவத்தை வழங்கும். மேலும் ஸ்டாண்டர்ட் (Standard), சினிமா(Cinema), மியூசிக் உள்ளிட்ட பல ஆடியோ மோட்கள் இந்த டிவியில் உள்ளன.
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதியுடன் இந்த டைவா டிவி வெளிவந்தது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். பின்பு ஐ-கேர் மோட் (Eye-Care Mode) ஆதரவும் இந்த டிவியில் உள்ளது. அதேபோல் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் மற்றும் வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவுடன் கூடிய ரிமோட் ஒன்றும் இந்த டிவியுடன் வருகிறது.
யுஎஸ்பி போர்ட் (USB Port), எச்டிஎம்ஐ போர்ட் (HDMI), ஈதெர்நெட் போர்ட் (Ethernet Port), ஆடியோ ஜாக், ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), வை-பை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டிவியில் உள்ளன. மேலும் ஸ்கிரீன் மிரர்ரிங் ஆதரவும் இந்த டிவியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








