Home
Gadgets

இதுக்கு மேல விலையை குறைக்க முடியாது.. 16ஜிபி மெமரி.. கூகுள் டிவி OS.. ஆஃபரில் 4K டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் டைவா 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு ( Daiwa 43 inch QLED 4K Smart Google TV) தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. பெசல் லெஸ் டிசைன், டால்பி ஆடியோ, 24W ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி வெளிவந்தது. மேலும் இந்த டைவா 4கே ஸ்மார்ட் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் 43G1Q என்ற மாடல் நம்பர் கொண்ட டைவா 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு 65 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,999 விலையில் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டைவா ஸ்மார்ட் டிவியை குறைந்த விலையில் வாங்க முடியும்.

இதுக்கு மேல விலையை குறைக்க முடியாது.. 16ஜிபி மெமரி.. எந்த மாடல்?

டைவா 43 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள் (Daiwa 43 inch 4K Smart Google TV Specifications): அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே வசதியுடன் டைவா 43 இன்ச் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10, 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), 16:09 அஸ்பெக்ட் ரேசியோ (aspect ratio), உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஏஆர்எம் குவாட் கோர் எ55 (ARM Quad Core A55) பிராசஸர் உடன் டைவா 43 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பெசல் லெஸ் டிசைன் உடன் இந்த டைவா டிவி வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் G31 கிராபிக்ஸ் பிராசரஸர் இந்த டிவியில் உள்ளது.

கூகுள் டிவி ஓஸ் (Google TV OS) மூலம் இந்த டைவா 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி மாடல் இயங்குகிறது. ஆகவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

அதேபோல் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம். அதேபோல் குரோம் காஸ்ட் பில்ட்-இன் ஆதரவும் இந்த டைவா ஸ்மார்ட் டிவியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 24W ஸ்பீக்கர்கள் டைவா 43 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவியில் உள்ளது. எனவே இந்த டிவியில் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். பின்பு 5 சவுண்ட் மோட்கள் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ப்ளூடூத், வைஃபை, ஆர்எப், ஆப்டிக்கல், லேன் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த டிவியில் உள்ளன.

ஸ்மார்ட் ரிமோட் ஆதரவுடன் டைவா 43 இன்ச் கியூஎல்இடி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி வெளிவந்துள்ளது. அதுவும் வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் ஓடிடி தளங்களில் ஷார்ட்கட் பட்டன்கள் இதன் ரிமோட்டில் உள்ளன. 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதியும் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
65 percent discount on Daiwa 43 inch 4K Smart Google TV in Flipkart sale: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X