Home
Gadgets

முடிச்சு விட்ட பிளிப்கார்ட்.. டால்பி ஆடியோ.. எச்டிஆர் 10.. 8ஜிபி மெமரி.. ஆஃபரில் Hisense டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் தரமான ஹைசென்ஸ் 43 இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த டிவி 30W ஸ்பீக்கர்கள், எச்டிஆர் 10 ஆதரவு, டால்பி ஆடியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த ஹைசென்ஸ் 43 இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களைப் பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் ஹைசென்ஸ் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2024 எடிஷன் (Hisense 43 inch Full HD LED Smart Google TV 2024 Edition) மாடலுக்கு 42 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.18499 விலையில் வாங்கிவிட முடியும்.

முடிச்சு விட்ட பிளிப்கார்ட்.. ஆஃபரில் Hisense டிவி.. எந்த மாடல்?

ஹைசென்ஸ் ஸ்மார்ட் கூகுள் டிவி 2024 எடிஷன் அம்சங்கள் (Hisense Smart Google TV 2024 Edition 43 Specifications): ஃபுல் எச்டி டிஸ்பிளே உடன் இந்த ஹைசென்ஸ் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2024 எடிஷன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1920 x 1080 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 (HDR 10) ஆதரவு, 300 நிட்ஸ் ப்ரைட்னஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இதன் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

டால்பி அட்மாஸ் (Dolby Audio) ஆதரவு கொண்ட 30W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த ஹைசென்ஸ் 43 இன்ச் டிவி ஸ்மார்ட் டிவி. குறிப்பாக ஸ்டான்டர்ட், மியூசிக். சினிமா, பர்சனல் உள்ளிட்ட பல்வேறு சவுண்ட் மோட்கள் இந்த டிவியில் உள்ளன. எனவே இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம். அதுவும் டிவியின் ஆடியோ பகுதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹைசென்ஸ் நிறுவனம்.

அதேபோல் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த டிவி இயங்குகிறது. ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.

1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஹைசென்ஸ் 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2024 எடிஷன் ஆனது சிறந்த கேமிங் அனுபவத்தை கொடுக்கும். குறிப்பாக மேம்பட்ட 3D டைனமிக் மற்றும் 2D அல்காரிதம்களைப் பயன்படுத்துகிறது இந்த அசத்தலான டிவி.

முடிச்சு விட்ட பிளிப்கார்ட்.. ஆஃபரில் Hisense டிவி.. எந்த மாடல்?

மேலும் 3 யுஎஸ்பி போர்ட் (USB Port), மினி ஏவி (Mini AV) மற்றும் எல்ஏஎன் போர்ட் (LAN Port) வருகிறது. மேலும் ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளது. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி கொண்டுள்ளது இந்த ஹைசென்ஸ் 43 இன்ச் டிவி.

வாய்ஸ் கண்ட்ரோல் உடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஹைசென்ஸ் 43 இன்ச் டிவி. அதேபோல் இந்த ஸ்மார்ட் ரிமோட்டில் ஓடிடி தளங்களில் ஷார்ட்கட் பட்டன்கள் கூட உள்ளது. மேலும் பெசல்-லெஸ் டிசைன் (Bezel Less Design) உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி குறைந்த விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
65 percent discount on 43 inch Hisense Smart Google TV 2024 Edition in Flipkart sale: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X