Home
Gadgets

தெறிக்கவிட்ட பிளிப்கார்ட்.. ரூ.15749 பட்ஜெட்ல டால்பி அட்மாஸ்.. 16ஜிபி மெமரி.. ஆஃபரில் 4K டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் இப்போது பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2024 (Flipkart Big Billion Days Sale) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிக எதிர்பார்க்கப்பட்ட ஏசர் 4கே ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது ஏசர் நிறுவனத்தின் 43 இன்ச் கொண்ட ஏசர்பியூர் ஆஸ்பியர் டிவி 4கே (acerpure Aspire TV 4K 43) மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 64 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1750 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.15749 விலையில் இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவியியை வாங்கவிட முடியும்.

தெறிக்கவிட்ட பிளிப்கார்ட்.. ஆஃபரில் 4Kடிவி.. எந்த மாடல்?

ஏசர்பியூர் ஆஸ்பியர் டிவி 4கே அம்சங்கள் (acerpure Aspire TV 4K 43 Specifications): அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே உடன் இந்த 43 இன்ச் ஏசர்பியூர் ஆஸ்பியர் டிவி 4கே மாடல் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் , 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன. இதுதவிர பல்வேறு சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன.

அதாவது 1.07 பில்லியன் கலர்ஸ் ஆதரவை வழங்குகிறது இந்த அசத்தலான 43 இன்ச் ஏசர்பியூர் ஆஸ்பியர் டிவி 4கே மாடல். மேலும் இந்த இந்த டிவியில் கிரிஸ்டல் கிளியர் பிக்சர் குவாலிட்டி (crystal-clear picture quality) கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த டிவி ஒரு சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட 20W ஸ்பீக்கர்கள் உடன் இந்த 43 இன்ச் ஏசர்பியூர் ஆஸ்பியர் டிவி 4கே மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த அடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் ஏசர்பியூர் ஆஸ்பியர் டிவி 4கே மாடலின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம்.

அதன்படி ரியல்டெக் ஏஆர்எம் பிராசஸர் (RealTek ARM processor) வசதியைக் கொண்டுள்ளது இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி. அதுவும் இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் மாலி ஜி31 எம்பி2 ஜிபியு (Mali G31 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த டிவி மாடல். எனவே கேமிங் பயனர்கள் இந்த புதிய டிவியை நம்பி வாங்கலாம்.

தெறிக்கவிட்ட பிளிப்கார்ட்.. ஆஃபரில் 4Kடிவி.. எந்த மாடல்?

மேலும் கூகுள் டிவி இயங்குதளத்தை (Google TV OS) அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஏசர்பியூர் டிவி மாடல். எனவே இந்த டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம். அதேபோல் யூட்யூப் (YouTube), நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video) உள்ளிட்ட பல்வேறு ஓடிடி ஆப்ஸ்களை கொண்டுள்ளது இந்த ஏசர்பியூர் ஆஸ்பியர் டிவி 4கே மாடல்.

2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளன இந்த 43 இன்ச் ஏசர்பியூர் ஆஸ்பியர் டிவி 4கே மாடல். மேலும் எச்டிஎம்ஐ 2.0 போர்ட், யுஎஸ்பி 2.0 போர்ட், ப்ளூடூத் வி5.0, டூயல்-பேண்ட் வைஃபை, ஈதர்நெட் போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஏசரஸ் ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

photo credit: acerpure.com

Best Mobiles in India

English summary
65 percent discount on 43 inch acerpure Aspire TV 4K in Flipkart sale: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X