வாங்குனா இந்த டிவிதான்! 65 இன்ச் கியூ-மினி எல்இடி டிஸ்பிளே.. டால்பி விஷன் வீடியோ.. அட்மோஸ் ஆடியோ.. எந்த மாடல்?
பிரீமியம் டிஸ்பிளே பிரியர்கள் மட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களும் மூக்கில் விரல்வைக்கும்படியான பீச்சர்களுடன் ஹையர் எம்95ஈ சீரிஸ் டிவி (Haier M95E Series TV) இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. கியூடி-மினி எல்இடி டிஸ்பிளே, 4K ரெசொலூஷன், டால்பி விஷன் ஐகியூ, குவாண்டம் டாட் டெக்னாலஜி, டால்பி விஷன், டால்பி அட்மோஸ் ஆடியோ, 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி போன்ற பீச்சர்களில் மிரளவிடும் இந்த ஹையர் எம்95ஈ சீரிஸ் டிவியின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.
ஹையர் எம்95ஈ சீரிஸ் டிவி அம்சங்கள் (Haier M95E Series TV Specifications): இந்த டிவி பிரீமியம் குவாலிட்டியில் பெசல்-லெஸ் டிசைன் (Bezel-less Design) மற்றும் அன்வ்லர் ரன்வே ஸ்டாண்ட் (Annular Runway Stand) கொண்டுள்ளது. 65 இன்ச் மற்றும் 75 இன்ச் மாடல்களில் வெளியாகி இருக்கிறது. கியூடி-மினி எல்இடி (QD-Mini LED) டிஸ்பிளே கொண்டிருக்கிறது.

இந்த டிஸ்பிளேவில் 4K (3840 x 2160 பிக்சல்கள்) ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. 16-பிட் அல்ட்ரா-பிரீசைஸ் லைட் கன்ட்ரோல் (Ultra-precise Light Control) சப்போர்ட் உள்ளது. மேலும், டால்பி விஷன் ஐகியூ (Dolby Vision IQ), எச்எல்ஜி (HLG) மற்றும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) வருகிறது.
குவாண்டம் டாட் டெக்னாலஜி (Quantum Dot Technology) உள்ளது. இதுபோக விஆர்ஆர் (VRR) மற்றும் ஏஎல்எல்எம் (ALLM) பீச்சர்கள் கேமிங் பிரியர்களுக்காக வருகிறது. ஆகவே, டிஸ்பிளேவில் கலர் அக்கியூரசி, கலர் டெப்த் போன்றவற்றில் கிரிஸ்டல் கிளியர் அவுட்புட் பெறலாம். அதேபோல கேமிங் அனுபவம் கூடுதலாக பட்டையை கிளப்பும்.
ஏனென்றால், இந்த டிவியில் கேம் பிக்சர் மோட் (Game Picture Mode) வருகிறது. இந்த மோட் மூலம் ஏஎல்எல்எம், விஆர்ஆப் மட்டுமல்லாமல், ஷேடோ என்ஹான்ஸ்மெண்ட் (Shadow Enhancement), ஏமிங் ஏய்ட் (Aiming Aid) மற்றும் ஷூட்டர் அசிஸ்டன்ஸ் (Shooting Assistance) பீச்சர்களும் வருகின்றன. ஆகவே, இன்-பில்ட் கேமிங் ஆப்டிமைசேஷன் எதிர்பார்க்கலாம்.
இந்த ஹையர் எம்95ஈ சீரிஸ் டிவியில் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி வருகிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) வருகிறது. ஆகவே, இந்த டிவியில் பர்ஃபாமென்ஸ் பிரீமியமாக இருக்கும். கூகுள் டிவி ஓஎஸ் வருவதால், கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) உள்ளிட்ட சப்போர்ட் கிடைக்கிறது.
நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்கள் இன்-பில்ட் ஆப்களை (in-bulit Apps) வருகின்றன. ஏஎம்டி ப்ரீசின்க் ப்ரீமியம் (AMD FreeSync Premium) சப்போர்ட் உள்ளது. இந்த ஹையர் எம்95ஈ சீரிஸ் டிவியின் ஆடியோவும் பக்கா பிரீமியமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.
60W ஆடியோ அவுட்புட் (Audio Output) வருகிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் உள்ளது. ஹர்மன் கார்டன் 2.1 (Harman Kardon 2.1) சப்வூப்பர் வருகிறது. இதுபோக டைனாமிக் சரவுண்ட் சவுண்ட் (Dynamic Surround Sound) உள்ளது. ஆகவே, ஆடியோவில் ஹோம்-தியோட்டர் லெவல் அவுட்புட் எதிர்பார்க்கலாம்.
இந்த ஹையர் எம்95ஈ சீரிஸ் மாடல்களில் ஹைய்ஸ்மார்ட் ஆப் (HaiSmart App) சப்போர்ட் வருகிறது. இந்த டிவிக்கு 2 வருட வாரண்டி கிடைக்கிறது. அல்ட்ரா பிரீமியம் பீச்சர்கள் மற்றும் குவாலிட்டி கொண்டிருப்பதால் ரூ. 1,35,000 முதல் ஆரம்ப விலை தொடங்குகிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதியில் இருந்தே ரீடெயில் ஸ்டோர்களில் விற்பனை தொடங்கிவிட்டது. பிரீமியம் டிவி பிரியர்களுக்கு பக்கா ஆப்ஷனாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








