பெட்ரூமுக்கே 40 இன்ச்.. வெறும் ரூ.12,999 போதும்.. பெசல்-லெஸ் டிவி.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) பெசல்-லெஸ் டிசைன் மட்டுமல்லாமல், எச்டிஆர்10 வீடியோ, டால்பி ஆடியோ, 1 ஜிபி ரேம், 8 ஜிபி மெமரி, ஏஐ பிக்சர் என்ஜின் போன்ற பீச்சர்கள் மற்றும் வை-பை, ப்ளூடூத் போன்ற பக்கா கனெக்டிவிட்டி கொண்ட 40 இன்ச் ஐஃபால்கான் டிவிக்கு (40 inch iFFALCON TV) பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த டிவியின் விலை என்ன, டிஸ்கவுண்ட் எவ்வளவு, முழு பீச்சர்கள் எப்படி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இப்போது பார்க்கலாம்.
40 இன்ச் ஐஃபால்கான் டிவி அம்சங்கள் (40 inch iFFALCON TV Specifications): இதுவொரு எஸ்53 (S53) மாடலாகும். இந்த டிவியில் 40 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே வருகிறது. பெசல்-லெஸ் டிசைனில் (Bezel-Less Design) ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 260 நிட்ஸ் பிரைட்னஸ், எச்டிஆர்10 (HDR10) மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

மேலும், 1.07 பில்லியன் கலர் டெப்த், ஏஐ பிக்சர் என்ஜின் (AI Picture Engine), மைக்ரோ டிம்மிங் டெக்னாலஜி (Micro Dimming Technology) வருகிறது. ஆகவே, கிளியர் மற்றும் ஷார்ப் வீடியோ அவுட்புட் எதிர்பார்க்கலாம். இந்த ஐஃபால்கான் டிவியின் ஆடியோவை பார்க்கையில், டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் வருகிறது. 2 பாக்ஸ் டைப் பாட்டம் ஸ்பீக்கர்கள் வருகின்றன.
இந்த ஸ்பீக்கர்கள் 24W ஆடியோ அவுட்புட் கொடுக்கும். இந்த ஆடியோவில் ஸ்டாண்டர்ட் (Standard), மூவி (Movie), மியூசிக் (Music), வாய்ஸ் (Voice), கேம் (Game), ஸ்டேடியம் (Stadium) மற்றும் பர்சோனல் (Personal) ஆகிய சவுண்ட் மோட்கள் வருகின்றன. இந்த டிவியில் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் (Android 11OS) மற்றும் 64 பிட் குவாட் கோர் (Quad Core) சிப்செட் வருகிறது.
மேலும், ஜி31எம்பி2 ஜிபியு (G31MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இதுபோக 1 ஜிபி ரேம் + 8 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. ஆகவே, பட்ஜெட்டுக்கு ஏற்ப பட்டையை கிளப்பும் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். கூகுள் ஓஎஸ் வருவதால், கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast Built-in), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) வருகின்றன.
ஆகவே, நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், யூடிபூப் உள்ளிட்ட ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல வாய்ஸ் எனபில்ட் ஸ்மார்ட் ரிமோட் (Voice Enabled Smart Remote) கொடுக்கப்படுகிறது. இந்த ரிமோட்டில் இன்டர்நெட் அக்சஸ் கிடைக்கிறது. மேலும், பேரண்டல் கன்ட்ரோல் (Parental Control) சப்போர்ட் உள்ளது.
இந்த 40 இன்ச் ஐஃபால்கான் டிவியின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), 2 எச்டிஎம்ஐ (HDMI), 1 யுஎஸ்பி (USB) மற்றும் 3 பின் போர்ட்கள் வருகின்றன. இந்த டிவிக்கு 1 வருட வாரண்டி வருகிறது. ரூ.13,999ஆக விலை நிர்ணயம் இருக்கிறது. பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.1000 பேங்க் டிஸ்கவுண்ட் உடன் கிடைக்கிறது.
ஆகவே, இந்த டிவியை ரூ.12,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இதுபோக ரூ.3,500 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. டிஸ்கவுண்ட்டை பொறுத்தவரையில் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும். மலிவான பட்ஜெட்டில் பெசல்-லெஸ் டிசைன், ஃபுல்எச்டி வீடியோ, டால்பி ஆடியோ கொண்ட 43 இன்ச் டிவி வேண்டுமானால், இதை ஆப்ஷனில் எடுக்கலாம்.


Click it and Unblock the Notifications








