பெட்ரூமுக்கு 1.. ஹாலுக்கு 1.. ரூ.7,499 பட்ஜெட்ல 105 இன்ச்.. 4K வீடியோ.. பில்ட்-இன் ஸ்பீக்கர்.. எந்த மாடல்?
4K ப்ரொஜெக்டர் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களை அப்படியே தட்டித் தூக்கும்படியான பட்ஜெட் மட்டுமல்லாமல், 105 இன்ச் வீடியோ, பில்ட்-இன் ஸ்பீக்கர்கள், பில்ட்-இன் டெலஸ்கோபிக் ஸ்டாண்ட், ஓடிடி ஆப்கள், ஆட்டோ கீஸ்டோன் போன்ற பீச்சர்களுடன் போர்ட்ரானிக்ஸ் பீம் 520 (Portronics Beem 520) மாடல் களமிறக்கப்பட்டுள்ளது. இப்போது, அறிமுக சலுகையில் அடிமட்ட விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 520 எல்இடி ப்ரொஜெக்டர் மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் சலுகை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் பக்காவான பீச்சர்களுடன் புதுப்புது ப்ரொஜெக்டர்களை போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் களமிறங்கி வருகிறது. இவை பெரும்பாலும் போர்ட்பிள் டிசைன் மற்றும் டேபிள் மவுண்டெட் ஸ்டாண்ட்டுடன் மட்டுமே கிடைக்கும். ஆனால், இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 520 எல்இடி ப்ரொஜெக்டரானது சீலிங் மவுண்டபிள் ஸ்டாண்டை கொடுக்கிறது.

இந்த ஸ்டாண்ட் ஆனது டேபிள் அல்லது சீலிங்கில் பயன்படுத்தும்படி இருக்கிறது. ஆகவே, டூ-இன்-ஒன் ஆப்ஷன் கிடைக்கும். ஆட்டோ கீஸ்டோன் கிடைப்பதால், எளிதாக புரொஜெக்சன் செய்து கொள்ள முடிகிறது. ப்ளூடூத். வை-பை ஆகியவற்றுடன் மல்டிபிள் டிவைஸ்கள் கனெக்டிவிட்டியை கொடுக்கிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகும்படி இந்த மாடல் கிடைக்கிறது.
போர்ட்ரானிக்ஸ் பீம் 520 ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Portronics Beem 520 Projector Specifications): இந்த எல்இடி (LED) ப்ரொஜெக்டரில் 62 இன்ச் முதல் 105 இன்ச் வரையில் புரொஜெக்சன் செய்து கொள்ளலாம். 720p எச்டி நேட்டிவ் ரொசொலூஷன் (1024 x 720 பிக்சல்கள்) கொடுக்கிறது. மேலும், 4K அல்ட்ரா எச்டி (Ultra HD) சப்போர்ட் கொடுக்கிறது. ஆகவே, இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப வீடியோ அவுட்புட் எதிர்பார்க்கலாம்.
2200 லூமென்ஸ் கிடைப்பதால், நைட் யூசேஜின் போது விவிட் மற்றும் கிளியர் அவுட்புட் கிடைக்கும். முன்பே சொன்னது போல இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 520 எல்இடி ப்ரொஜெக்டரில் பில்ட்-இன் டெலஸ்கோபிக் ஸ்டாண்ட் (Built-in Telescopic Stand) கிடைக்கிறது. இதை சீலிங் மவுண்ட் செய்து கொள்ளலாம் அல்லது டேபிள் மவுண்ட் செய்து கொள்ளலாம்.
ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (Auto Keystone Correction) கிடைப்பதால், சீலிங் மவுண்ட் செய்யப்பட்டாலும், எளிதாக ஸ்கிரீன் கரெக்சன் செய்து கொள்ளலாம். ஏனென்றால், ஆட்டோமேட்டிக் வெர்டிகல் ஸ்கிரீன் கரெக்சன் (Automatic Vertical Screen Correction) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப 3W ஆடியோ அவுட் கொண்ட பில்ட்-இன் ஸ்பீக்கர் (Built-in Speaker) பேக் செய்யப்பட்டுள்ளது.
ஆடியோ கனெக்டிவிட்டி மற்றும் மல்டிமீடியா கனெக்டிவிட்டிக்காக எச்டிஎம்ஐ (HDMI), யுஎஸ்பி (USB) மற்றும் ஏயூஎக்ஸ் (AUX) போர்ட்கள் கிடைக்கின்றன. இதுபோக ப்ளூடூத் (Bluetooth) மற்றும் வை-பை (Wi-Fi) போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டியும் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (YouTube), பிரைம் வீடியோ (Prime Video) போன்ற ஓடிடி கிடைக்கிறது.
இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 520 எல்இடி ப்ரொஜெக்டருக்கு 1 வருட வாரண்டி கிடைக்கிறது. ஒயிட் கலரில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. ரூ.7,499 பட்ஜெட்டில் களமிறங்கி இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் ரூ.749 டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.6,750 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ரூ.8000 பட்ஜெட்டில் ப்ரொஜெக்டர் தேடிக்கொண்ருப்பவர்களுக்கு இது நல்ல மாடலாகும்.


Click it and Unblock the Notifications








