Home
Gadgets

இனி 100 இன்ச் ஸ்மார்ட் டிவி எல்லாம் வேஸ்ட்.. ஆண்ட்ராய்டு OS.. 200 இன்ச்.. ஆஃபரில் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்..

இந்தியாவில் ஸ்மார்ட் டிவிகளை விட ப்ரொஜெக்டர் மாடல்களுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. எனவே தான் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல்களை அறிமுகம் செய்கின்றன. இந்நிலையில் போர்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஒரு அசத்தலான ப்ரொஜெக்டர் (Portronics) அமேசான் தளத்தில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

தற்போது அமேசான் (amazon) தளத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 410 ப்ரொஜெக்டர் (Portronics Beem 410) மாடலுக்கு 63 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12983 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ப்ரொஜெக்டர் மாடலை ரூ.11733 பட்ஜெட்டில் இந்த சாதனத்தை வாங்கிவிட முடியும்.

200 இன்ச்.. ஆண்ட்ராய்டு OS.. ஆஃபரில் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்

போர்ட்ரானிக்ஸ் பீம் 410 அம்சங்கள் (Portronics Beem 410 Specifications): இது எல்இடி (LED) ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் ஆகும். 1920 x 1080 பிக்சல்ஸ் எச்டி ரெசல்யூஷன் கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 410 ப்ரொஜெக்டர். மேலும் இந்த ப்ரொஜெக்டரில் 3600 லுமன்ஸ் பிரைட்னஸ் (250 ஏஎன்எஸ்ஐ), 2000:1 கான்ட்ராஸ்ட் சப்போர்ட் (Contrast Support) உள்ளது

அதேபோல் 16:9 சினிமாட்டிக் ரேஷியோ (Cinematic Ratio) ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போர்ட்ரானிக்ஸ் பீம் 410 ப்ரொஜெக்டர் மாடல். பின்பு இதில் 4டி கீஸ்டோன் கரெக்ஷன் (Keystone Correction) கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இதில் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும். மேலும் ஒரு மினி தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த சாதனம்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 410 ப்ரொஜெக்டர் 6W ஹை - பை ஸ்பீக்கர்கள் சப்போர்ட் ஆதரவு கொண்டு வெளிவந்தது. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குறிப்பாக இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 410 ப்ரொஜெக்டர் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போர்ட்ரானிக்ஸ் நிறுவனம். மேலும் இதில் அதிகபட்சமாக 200 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

குறிப்பாக மூவி நைட்ஸ் (Movie Nights), கேம் நைட்ஸ் (Game Nights), ஆபீஸ் மற்றும் ஸ்கூல் (Office/Schools), மீட்டிங் பிரசென்டேஷன் (Meeting Presentations) போன்ற பல்வேறு மோட்கள் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 410 ப்ரொஜெக்டரில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் இந்த ப்ரொஜெக்டர் மாடலை அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியும்.

200 இன்ச்.. ஆண்ட்ராய்டு OS.. ஆஃபரில் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்

1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி வசதியுடன் போர்ட்ரானிக்ஸ் பீம் 410 ப்ரொஜெக்டர் வெளிவந்துள்ளது. மேலும் ஏயூஎக்ஸ் (AUX), யூஎஸ்பி (USB) போர்ட், டூயல் பேண்ட் வைஃபை மற்றும் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் போர்ட்ரானிக்ஸ் பீம் 410 ப்ரொஜெக்டர் வெளிவந்துள்ளது. மேலும் இதில் ஸ்கிரீன் மிரர்ரிங் சப்போர்ட் (Screen Mirroring Support) கூட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 410 ப்ரொஜெக்டர் பிளாக் (Black) கலரில் வாங்கக் கிடைக்கும். ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 410 ப்ரொஜெக்டர் வெளிவந்துள்ளது. எனவே இந்த ப்ரொஜெக்டர் மாடலை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இதுதவிர பல அசத்தலான அம்சங்கள் போர்ட்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் மாடலில் உள்ளது.

Best Mobiles in India

English summary
63 Percent Discount on Portronics Beem 410 LED Projector in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X