வீட்டுக்கு 2 ஆர்டர்.. வெறும் ரூ.16000 பட்ஜெட்ல 43 இன்ச் QLED டிவி.. டால்பி ஆடியோ.. 20W ஆடியோ.. எந்த மாடல்?
43 இன்ச் டிவி வாங்கனும், அதுவும் தீபாவளி டிஸ்கவுண்ட்டில் அடிமட்ட விலைக்கு வாங்கனும் என்று காத்திருந்த கஸ்டமர்களுக்கு பிளிப்கார்ட் தீபாவளி விற்பனையில் (Flipkart Diwali Sale) பக்காவான நேரம் வந்துவிட்டது. 60 சதவீதத்துக்கும் மேலான டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.16000 பட்ஜெட்டில் கியூஎல்இடி டிவி கிடைக்கிறது. 4K ரெசொலூஷன், டால்பி அட்மோஸ் போன்ற மற்ற பீச்சர்களும் பட்ஜெட்டைவிட கூடுதலாகவே இருக்கின்றன. இப்படி அடிமட்ட விலைக்கு கிடைக்கும் இரண்டு 4K டிவிகளின் முழு விவரங்கள் இதோ.
43 இன்ச் அசர்ப்யூர் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (43 inch acerpure QLED TV Specifications): இந்த அசர்ப்யூர் டிவியில் 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி (QLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 (HDR 10), 4K ரெசொலூஷன் மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. கலர் அக்கியூரசி பட்டையை கிளப்பும்படி இருக்கும்.

மேலும், கிரிஸ்டல் கிளியர் அவுட்புட் கொடுக்க குவாண்டம் டாட் டெக்னாலஜி (Quantum Dot Technology) கிடைக்கிறது. இந்த டிவியில் 20W ஆடியோ அவுட் கொண்ட 2 ஸ்பீக்கர்கள் வருகின்றன. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உள்ளது. கூகுள் ஆப் ஸ்டோர் உள்ளது. 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ, யூடியூப் உள்ளிட்ட இன்-பில்ட் ஆப்கள் கிடைக்கின்றன. ஸ்க்ரீன் மிரரிங் (Screen Mirroring) செய்து கொள்ளலாம். 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports) மற்றும் 2 யுஎஸ்பி போர்ட்கள் (USB Ports) வருகின்றன. ப்ளூடூத், வை-பை போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ஆர்எப் ரிமோட் கன்ட்ரோல் (RF Remote Control) உள்ளது.
43 இன்ச் ஐபால்கன் டிவி அம்சங்கள் (43 inch iFFALCON TV Specifications): இந்த டிவியானது U64 சீரிஸ் மாடலாகும். 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேலும் 4K ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர்10 கிடைக்கிறது. மேலும், டைனாமிக் கலர் என்ஹான்ஸ்மெண்ட் (Dynamic Colour Enhancement) கிடைக்கிறது.

ஐ கேர் மோட்கள் வருகின்றன. கூகுள் டிவி ஓஎஸ் கிடைப்பதால், கூகுள் ஆப் ஸ்டோர் மட்டுமல்லாமல், இன்-பில்ட் குரோம்காஸ்ட், கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் இருக்கிறது. டால்பி ஆடியோ மற்றும் அட்மோஸ் கொண்ட 24W ஸ்பீக்கர்கள் வருகின்றன. 2 பாக்ஸ் ஸ்பீக்கர்கள் பேக் செய்யப்பட்டுள்ளன. இந்த டிவியிலும் நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் இருக்கின்றன.
3 எச்டிஎம்ஐ போர்ட் மற்றும் 1 யுஎஸ்பி போர்ட் சப்போர்ட் உள்ளது. முந்தைய மாடலை போலவே ப்ளூடூத் மற்றும் வை-பை கனெக்டிவிட்டி உள்ளது. வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் கிடைக்கிறது. மெட்டாலிக் பெசல்லெஸ் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. இப்போது, இந்த 2 டிவிகளின் விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
43 இன்ச் அசர்ப்யூர் கியூஎல்இடி டிவியின் விலையானது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிளிப்கார்ட் தளத்தில் 63 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.17,999ஆக இருக்கிறது. மேலும், எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.1,500 டிஸ்கவுண்ட் போக ரூ.16,499 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. ரூ.3000 மதிப்பில் நோ காஸ்ட் இஎம்ஐ சலுகை கிடைக்கிறது.
43 இன்ச் ஐபால்கன் டிவியின் விலையானது, பிளிப்கார்ட் தளத்தில் 62 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.18,999ஆக இருக்கிறது. இந்த டிவிக்கும் ரூ.1,500 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி இந்த டிஸ்கவுண்ட்டை பெறலாம். ஆகவே, இந்த 43 இன்ச் டிவியை வெறும் ரூ.17,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








