Home
Gadgets

இனி ஸ்மார்ட் டிவி எதுக்கு? 160 இன்ச்.. 1080p ரெசல்யூஷன்.. ஆஃபரில் LED புரொஜெக்டர்.. எந்த மாடல்?

இந்தியாவில் ஸ்மார்ட் டிவிகளை விட ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடல்களை வாங்கத் தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக பெரிய தெளிவான திரை மற்றும் ஸ்மார்ட் அம்சங்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த புரொஜெக்டரில் இருப்பதால் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் போர்ட்ரானிக்ஸ் பீம் 400 எல்இடி புரொஜெக்டர் மாடலுக்கு 62 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த புரொஜெக்டர் ரூ.11,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த எல்இடி புரொஜெக்டரை வாங்கினால் ரூ.1750 தள்ளுபடியும் உள்ளது.

இனி ஸ்மார்ட் டிவி எதுக்கு? ஆஃபரில் LED புரொஜெக்டர்.. எந்த மாடல்?

எனவே போர்ட்ரானிக்ஸ் பீம் 400 எல்இடி புரொஜெக்டர் மாடலை தற்போது ரூ.9749 விலையில் வாங்கிவிட முடியும். குறிப்பாக இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 எல்இடி புரொஜெக்டர் மாடல் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புரொஜெக்டரின் அம்சங்களைப் பார்க்கலாம்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 400 அம்சங்கள் (Portronics Beem 400 Specifications): இது ஒரு போர்ட்டபிள் டிசைனில் உருவாக்கப்பட்ட எல்இடி (LED) ஆதரவு கொண்ட புரொஜெக்டர் ஆகும். அதேபோல் மற்ற புரொஜெக்டர் மாடல்களை விட மேம்பட்ட பிக்சர் குவாலிட்டி கொண்டுள்ளது. இதன் மூலம் நாம் சிறந்த திரை அனுபவத்தைப் பெறமுடியும்.

குறிப்பாக 1080p எச்டி (HD) ரெசல்யூஷன் மற்றும் 3600 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) ஆதரவுடன் வெளிவந்தது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 மாடல். எனவே இதில் தெளிவான படங்களை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இதன் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போர்ட்ரானிக்ஸ் நிறுவனம்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டரில் 30,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது 16:9 அஸ்பெக்ட் ரேசியோ (Aspect Ratio) வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இதில் 160 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும்.

இந்த எல்இடி புரொஜெக்டர் உடன் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ், மைக்ரோ எஸ்டி கார்டுகள், மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம். மேலும் இந்த புரொஜெக்டரில் மூவி நைட்ஸ் (Movie Nights), கேம் நைட்ஸ் (Game Nights), ஆபீஸ் மற்றும் ஸ்கூல் (Office/Schools), மீட்டிங் பிரசென்டேஷன் (Meeting Presentations) போன்ற பல்வேறு மோட்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இனி ஸ்மார்ட் டிவி எதுக்கு? ஆஃபரில் LED புரொஜெக்டர்.. எந்த மாடல்?

பென்டிரைவ் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 மாடல். மேலும் ஹெட்போன் (Head phone), எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், ஒரு யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், ஏவி இன்புட் (AV Input) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

அதேபோல் வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் (Wireless Screen Mirroring) மற்றும் வெர்டிகல் கீஸ்டோன் (Vertical Keystone) ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டர். குறிப்பாக 6 வாட்ஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (6W Stereo Speakers) கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டர் மாடல். எனவே சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும்.

குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் போர்ட்ரானிக்ஸ் பீம் 400 மாடல் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். மேலும் இந்நிறுவனம் கூடிய விரைவில் பல அசத்தலான புரொஜெக்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
62 Percent Discount on Portronics Beem 400 LED Projector in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X