கிடைக்காத டிஸ்கவுண்ட்.. ரூ.27,000 பட்ஜெட்ல 55 இன்ச் டிவி.. டால்பி ஆடியோ.. 4K வீடியோ.. 16GB மெமரி.. எந்த மாடல்?
இவ்வளவு மலிவான விலைக்கு 55 இன்ச் டிவி வாங்க முடியாமா? என்று ஆண்ட்ராய்டு டிவி பிரியர்களே மூக்கில் விரல் வைக்கும்படியான டிஸ்கவுண்ட் விலையில் 55 இன்ச் டிசிஎல் டிவி (55 inch TLC TV) கிடைக்கிறது. 4K வீடியோ மட்டுமல்லாமல், டால்பி ஆடியோ, டைனாமிக் கலர் என்ஹான்மெண்ட் போன்ற பீச்சர்கள் மட்டுல்லாமல் மெட்டாலிக் பெசல்-லெஸ் டிசைனில் பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த 55 இன்ச் டிசிஎல் டிவியின் முழு பீச்சர்கள், விலை, விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்
32 இன்ச், 43 இன்ச் டிவிகள் விற்கும் விலைக்கு இப்போது 50 இன்ச் மற்றும் 55 இன்ச் டிவிகள் வந்துவிட்டன. ஏனென்றால், ஸ்மார்டிவி தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிப் போட்டு கொண்டு புதுப்புது மாடல்களை களமிறங்கி வருகின்றன. இதில் டிசிஎல் நிறுவனம், நம்ப முடியாத விலைக்கு டிவிகளை கொடுக்கிறது. இப்போது, 55 இன்ச் டிவியை மலிவு விலைக்கு களமிறக்கி இருக்கிறது.

55 இன்ச் டிசிஎல் டிவி அம்சங்கள் (55 inch TLC TV Specifications): இந்த டிசிஎல் டிவியானது 55P655 மாடலாகும். இந்த மாடலில் 4K அல்ட்ரா எச்டி (Ultra HD) ரெசொலூஷன் மற்றும் 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த பெரிய டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 270 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் மெட்டாலிக் பெசல்-லெஸ் டிசைன் கிடைக்கிறது.
பிரீமியம் டிஸ்பிளே கலர் எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்க டைனாமிக் கலர் என்ஹான்ஸ்மெண்ட் (Dynamic Colour Enhancement) சப்போர்ட் கிடைக்கிறது. இதுபோக கண்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க ஃபிளிக்கர்-ஃப்ரீ அனுபவம் கொடுக்கும் மல்டிபிள் ஐ கேர் (Multiple Eye Care) மோட்கள் உள்ளன. டி-ஸ்கிரீன் (T-Screen) சப்போர்ட் கிடைக்கிறது. 4K கன்டென்ட்களை என்ஹான்ஸ் செய்து கொடுக்கும்படி ஏஐபிகியூ (AiPQ) ப்ராசஸர் கிடைக்கிறது.
இதற்கு ஏற்ப ஆடியோ அவுட்புட் கொடுக்கும்படி டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ஆடியோவுக்கு இன்டலிஜென்ட் சவுண்ட் மோட்கள் (Intelligent Sound Modes) சப்போர்ட் கிடைக்கிறது. 2 பாக்ஸ் ஸ்பீக்கர்களில் 24W ஆடியோ அவுட் எதிர்பார்க்கலாம். இதில் சப்வூப்பர் அவுட்புட் கிடைக்காது. இருப்பினும், பாக்ஸ் ஸ்பீக்கர்களிலேயே பக்கா அவுட்புட் கிடைக்கும்.
55 இன்ச் டிசிஎல் டிவியில் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் 2 ஜிபி ரேம் கிடைக்கிறது. இதுபோக 16 ஜிபி மெமரிக்கான ஸ்டோரேஜ் கிடைக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் மட்டுமல்லாமல், ஓகே கூகுள் (Ok Google) அசிஸ்டன்ட், கூகுள் கிட்ஸ் (Google Kids), கூகுள் டியோ (Google Duo) மற்றும் குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast Built-in) போன்ற பீச்சர்கள் கிடைக்கிறது.
மேலும், வழக்கமாக கிடைக்கும் பிளே ஸ்டோர் மற்றும் அதன் மூலம் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ போன்ற ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. ப்ளூடூத் (Bluetooth), பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi) போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டி மற்றும் எச்டிஎம்ஐ, யுஎஸ்பி, ஏவி, ஹெட்போன், டிஜிட்டல் ஆடியோ போன்ற போர்ட் கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன.
இவ்வளவு பீச்சர்களை கொண்ட இந்த 55 இன்ச் டிசிஎல் டிவியின் விலை 62 சதவீத டிஸ்கவுண்ட் போக ரூ.29,590ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்தால், ரூ.2,375 மதிப்பில் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.27,215 மதிப்பில் இப்போது ஆர்டர் செய்து கொள்ளலாம். பட்ஜெட்டில் பெரிய டிஸ்பிளே கொண்ட மாடலுக்கு இது நல்ல ஆப்ஷனாகும்.


Click it and Unblock the Notifications








