இதுக்கு மேல குறைக்க முடியாது.. LED சப்போர்ட்.. 1080p ரெசல்யூஷன்.. ஆஃபரில் புரொஜெக்டர்.. எந்த மாடல்?
போர்ட்ரானிக்ஸ் பீம் 400 என்ற எல்இடி சப்போர்ட் கொண்ட புரொஜெக்டர் மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த புரொஜெக்டர் மாடல் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது போர்ட்ரானிக்ஸ் பீம் 400 மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.
பிளிப்கார்ட் தளத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 400 மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 61 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த புரொஜெக்டர் மாடலை ரூ.11,499 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 மாடலை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே குறைந்த விலையில் இந்த அட்டகாசமான சாதனத்தை வாங்க முடியும்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 400 அம்சங்கள்(Portronics Beem 400 Specifications): 1080p எச்டி (HD) ரெசல்யூஷன் மற்றும் 3600 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) ஆதரவு கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டர். குறிப்பாக இந்த புரொஜெக்டர் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
அதேபோல் போர்ட்ரானிக்ஸ் பீம் 400 ஆனது போர்ட்டபிள் டிசைனில் உருவாக்கப்பட்ட எல்இடி (LED) ஆதரவு கொண்ட புரொஜெக்டர் ஆகும். மற்ற புரொஜெக்டர் மாடல்களை விட மேம்பட்ட பிக்சர் குவாலிட்டி கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 மாடல். இதன் உதவியுடன் துல்லியமான வீடியோக்களை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அசத்தலான புரொஜெக்டரில் 30,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது 16:9 அஸ்பெக்ட் ரேசியோ (Aspect Ratio) வழங்குகிறது. குறிப்பாக இதில் அதிகபட்சமாக 165 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டர் உடன் ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ், மைக்ரோ எஸ்டி கார்டுகள், மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம். மேலும் மற்ற புரொஜெக்டர்களை விட அதிக கனெக்டிவிட்டி அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போர்ட்ரானிக்ஸ் பீம் 420 புரொஜெக்டர்.
அதாவது ஹெட்போன் (Head phone), எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், ஒரு யுஎஸ்பி (USB) போர்ட், ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், ஏவி இன்புட் (AV Input) போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் தான் இதில் உள்ளது. இது போன்ற கம்மி விலை பட்ஜெட் கொண்ட புரொஜெக்டர் மாடல்களில் இவ்வளவு கனெக்டிவிட்டி அம்சங்கள் கிடைப்பது அதிசயம் தான்.

குறிப்பாக இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டர் மாடல் வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் (Wireless Screen Mirroring) மற்றும் வெர்டிகல் கீஸ்டோன் (Vertical Keystone) ஆதரவுகளை கொண்டுள்ளது. வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் இருப்பதால் கண்டிப்பாக இதை நம்பி வாங்கலாம்.
அதேபோல் வைஃபை வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் 6 வாட்ஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (6W Stereo Speakers) கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டர் மாடல். எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு இந்த புரொஜெக்டர் எடை 195 கிராம் ஆகும். ஒரு வருட வாரண்ட்டி உடன் இந்த சாதனம் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டர் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








