கூவி, கூவி விற்கும் பிளிப்கார்ட்.. 200 இன்ச்.. 8GB மெமரி.. ஆஃபரில் ஆண்ட்ராய்டு LED புரொஜெக்டர்.. முந்துங்க!
பிளிப்கார்ட் தளத்தில் Big upgrade sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் சாதனங்களுக்குத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் போர்ட்ரானிக்ஸ் புரொஜெக்டர் மாடலுக்கு தற்போது தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர் மாடலுக்கு தான் தற்போது 60 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த புரொஜெக்டர் மாடலை ரூ13,999 விலையில் வாங்கலாம். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்த இந்த புரொஜெக்டர் மாடலை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே குறைந்த விலையில் போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர் மாடலை வாங்க முடியும்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர் அம்சங்கள் (Portronics Beem 410 Specifications): இது எல்இடி (LED) ஸ்மார்ட் புரொஜெக்டர் ஆகும். அதேபோல் 1920 x 1080 பிக்சல்ஸ் எச்டி ரெசல்யூஷன் கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர். மேலும் இந்த புரொஜெக்டரில் 3600 லுமன்ஸ் பிரைட்னஸ் (250 ஏஎன்எஸ்ஐ), 2000:1 கான்ட்ராஸ்ட் சப்போர்ட் (Contrast Support) உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 16:9 சினிமாட்டிக் ரேஷியோ (Cinematic Ratio) ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர் மாடல். பின்பு இதில் 4டி கீஸ்டோன் கரெக்ஷன் (Keystone Correction) கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இதில் தெளிவான வீடியோக்களை பார்க்க முடியும்.
குறிப்பாக 6W ஹை - பை ஸ்பீக்கர்கள் சப்போர்ட் ஆதரவு கொண்டு இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர் வெளிவந்தது. எனவே இது சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குறிப்பாக இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். மேலும் இதில் அதிகபட்சமாக 200 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டரில் மூவி நைட்ஸ் (Movie Nights), கேம் நைட்ஸ் (Game Nights), ஆபீஸ் மற்றும் ஸ்கூல் (Office/Schools), மீட்டிங் பிரசென்டேஷன் (Meeting Presentations) போன்ற பல்வேறு மோட்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த புரொஜெக்டர் மாடலை அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியும்.

1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி மெமரி வசதியுடன் போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர் வெளிவந்துள்ளது. அதேபோல் ஏயூஎக்ஸ் (AUX), யூஎஸ்பி (USB) போர்ட், டூயல் பேண்ட் வை - பை மற்றும் பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர் வெளிவந்துள்ளது. மேலும் இதில் ஸ்கிரீன் மிரர்ரிங் சப்போர்ட் (Screen Mirroring Support) கூட உள்ளது.
போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர் பிளாக் (Black) கலரில் வாங்கக் கிடைக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர் வெளிவந்துள்ளது. எனவே இந்த புரொஜெக்டர் மாடலை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
கம்மி விலையில் போர்ட்ரானிக்ஸ் பீம் 410 புரொஜெக்டர் கிடைப்பதால் நம்பி வாங்கலாம். அதேபோல் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் விரைவில் பல அசத்தலான புரொஜெக்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications








