6 வகையான போர்ட்களும், அவற்றின் செயல்பாடுகளும்.!

|

ஒரு போர்ட் என்பது கணினி மற்றும் வெளிப்புற சாதனங்களுக்கிடையிலான தொடர்பு நடக்க உதவும் ஒரு புள்ளியாகும். பொதுவாக கனெக்டரின் பீமேல் எண்ட் ( Female End) என்று கூறப்படும் போர்ட் மதர்போர்டில் அமர்ந்திருக்கும்.

இந்த போர்ட்கள் கணினிக்கு வெளிப்புறத்தில் உள்ள சாதனத்திற்கு பயணிக்க சமிக்ஞைகளுக்கு உதவுகின்றன, அவற்றை ஒழுங்காக இயங்கச் செய்ய உதவுகின்றன. பிரதானமாக, போர்ட்கள் சீரியல் மற்றும் பேரலல் (serial and parallel) என்று இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. அவைகள் ஆண் மற்றும் பெண் (male and female) போர்ட்கள் என்ற அழைக்கப்படுகின்றன. சரி இங்கே நாம் முக்கிய போர்ட்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் சிலவற்றை விரிவாக பார்க்கலாம்.

யூஎஸ்பி

யூஎஸ்பி

இது கணினி, ஸ்மார்ட்போன்கள், டி.வி போன்ற பல்வேறு வகையான சாதனங்களில் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு போர்ட் ஆகும். இது வெளிப்புற சாதனங்களை இணைக்கப் பயன்படுகிறது மற்றும் இது ஒரு கணினியின் பின் அல்லது முன் பக்கங்களில் அணுக கிடைக்கும்.

இது ஒரு புள்ளியில் இருந்து வேறொரு புள்ளிக்கு வேகமாக தரவு பரிமாற்ற பயன்படுகிறது. மேலும் இவைகள் ஒரிஜினல் யூஎஸ்பி, பேஸிக் யூஎஸ்பி, சூப்பர் ஸ்பீடு யூஎஸ்பி மற்றும் யூஎஸ்பி 3.0 உள்பட பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. இதில், யூஎஸ்பி 3.0 சமீபத்திய மற்றும் மிக வேகமான போர்ட் ஆக உள்ளது.

எச்டிஎம்ஐ

எச்டிஎம்ஐ

எச்எம்டிஐ அதாவது ஹை டெபனிஷன் மல்டிமீடியா இன்டர்பேஸ் சமீபத்தில் தான் கணினிகள், மடிக்கணினிகள் மற்றும் தொலைக்காட்சிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஹை டெபனிஷன் மற்றும் ஆற்றா ஹை டெபனிஷன் போன்றவைகளை அதாவது கேமிங் கன்சோல்ஸ், ப்ளூ ரே பிளேயர்கள் போன்ற சாதனங்களை இணைக்க உதவுகிறது. மேலும் இது அன்கம்பரஸ்டு வீடியோ மற்றும் அன்கம்பரஸ்டு அலல்து கம்பரஸ்டு ஆடியோ சுமந்து செல்ல பயன்படுகிறது.

ஆடியோ

ஆடியோ

இது மற்ற ஆடியோ வெளியீட்டு சாதனங்களை கணினியுடன் இணைக்கப் பயன்படுகின்றன. அனலாக் அல்லது டிஜிட்டல் என்பதை பொறுத்து ஆடியோ போர்ட்கள் வகைப்படும். ஸ்டீரியோ ஹெட்போன்கள் அல்லது சரவுண்ட் சவுண்ட் சேனல்ஸ்களுக்கு பொதுவாக 3.5மிமீ போர்ட் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும், ஒரு 6 கனெக்டர் போர்ட் தான் மைக்ரோபோன்கள் உள்ளிட்ட பல ஆடியோ சாதனங்களை கணினியில் இணைக்கப் பயன்படுகிறது.

வீடியோ போர்ட்

வீடியோ போர்ட்

கணினிகள், ப்ரொஜெக்டர்கள், வீடியோ கார்டுகள் மற்றும் ஹை டெபனிஷன் தொலைக்காட்சி போன்றவைகளை இணைக்க விஜிஏ போர்ட்கள் பல கணினிகளில் காணப்படுகின்றன. எனினும், விஜிஏ போர்ட் மூலமாக சமிக்ஞைகளை பரிமாறுவதின் மூலம் - 648X480 தீர்மானத்திலான அனலாக் வீடியோ சமிக்ஞைகள் கொண்டிருப்பதால் - படத்தின் தரத்தை அது குறைக்கலாம்.

யூஎஸ்பி டைப்-சி போர்ட்

யூஎஸ்பி டைப்-சி போர்ட்

இது சமீபத்திய யூஎஸ்பி மற்றும் இது ஒரு ரீவெர்சபிள் கனெக்டர் ஆகும். யூஎஸ்பி டைப்-சி என்பது டைப் ஏ மற்றும் டைப் பி வகைகளுக்கு பதிலாக மற்றும் எதிர்கால ஆதாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மடிக்கணினி, ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பல சாதனங்களில் இந்த போர்ட் பயன்படுத்துகின்றது. இதில் பாஸ்ட் சார்ஜ் டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த போர்ட் ஆனது அதிக மின்னோட்டத்தைக் கையாளும் மற்றும் அது குறைந்த நேரத்தில் வேகமாக சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது.

ஈதர்நெட் போர்ட்

ஈதர்நெட் போர்ட்

இது மற்ற போர்ட்களை விட நெட்வொர்க்குடன் இணைய பயனருக்கு அதிகம் உதவுகிறது. இது தொலைபேசி ஜாக் போலவே தெரியும் இது இணைக்கப்படும் கணினியில் இணைய உலாவலை அணுக உதவுகிறது. இதன் சமீபத்திய தொழில்நுட்பம் ஆனது கிகாபிட் ஈதர்நெட் என்று அழைக்கப்படுகிறது மற்றும் அது ஒரு விநாடிக்கு 10 ஜிகாபைட்ஸ் அளவிலான தரவு பரிமாற்றத்தை நிகழ்த்துகிறது.

Best Mobiles in India

English summary
6 Important Ports You Should Know About. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X