அள்ளி வீசும் பிளிப்கார்ட்.. டால்பி அட்மாஸ்.. 16ஜிபி மெமரி.. ஆஃபரில் 4K ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் big saving days எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை ஆனது வரும் டிசம்பர் 25-ம் தேதி வரை நடைபெறும். மேலும் பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி (Motorola EnvisionX 43 inch 4K Smart TV) மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி மாடலுக்கு 59 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை விற்பனை செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.18749 விலையில் வாங்கிவிட முடியும்.

மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Motorola EnvisionX 43 inch 4K Smart TV Specifications): இந்த 43 இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது அல்ட்ரா எச்டி 4கே (Ultra HD 4K) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.
இந்த டிவி பெசல்-லெஸ் டிஸ்பிளே (Bezel-less Display) சப்போர்ட் கொண்டிருக்கிறது. கூடவே 1.07 பில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. ஆகவே, வீடியோ அவுட்புட் அல்ட்ரா பிரீமியமாக எதிர்பார்க்கலாம். மேலும் கேமிங் பிரியர்களுக்கும் பக்காவான அவுட்புட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது மோட்டோரோலா நிறுவனம்.
இந்த மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியில் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS)மற்றும் குவாட் கோர் மீடியாடெக் 9602 (Quad Core MediaTek 9602) சிப்செட் வருகிறது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு மாலி ஜி52 எம்சி1 ஜிபியு (Mali G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது. எனவே பர்ஃபாமென்ஸ் பிரீமியமாக எதிர்பார்க்கலாம்.
அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி உடன் இந்த மோட்டோரோலா டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த டிவியில் 6 டிஸ்பிளே மோட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கிடைக்கிறது. ஆகவே, பில்ட்-இன் குரோம்காஸ்ட் (Built-in Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் கிடைக்கிறது. அதேபோல நெட்பிளிக்ஸ், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ மற்றும் யூடிபூப் போன்ற இன்-பில்ட் ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. வை-பை (Wi-Fi) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டி உள்ளது.

டால்பி அட்மாஸ்(Dolby Atmos), டால்பி டிஜிட்டல் (Dolby Digital), டிடிஎஸ் உள்ளிட்ட பல ஆடியோ அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. மேலும் 20W ஸ்பீக்கர்கள் இதில் உள்ளன. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
லேன்(LAN), 2 யுஎஸ்பி போர்ட் (USB Port), 3 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), மினி ஏவி போர்ட் (Mini AV Port) மற்றும் ஆப்டிகல் போர்ட் (Optical Port) சப்போர்ட்கிடைக்கிறது. இந்த மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் கியூஎல்இடி டிவிக்கு 1 வருட வாரண்டி கிடைக்கிறது. குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








