அமேசான் அதிருது.. 59 சதவீத டிஸ்கவுண்ட்.. 65 இன்ச் டிசிஎல் டிவி.. 4K வீடியோ.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?
அமேசான் விற்பனையில் (Amazon) 65 இன்ச் டிவிகள் அதிகபட்சம் 59 சதவீத டிஸ்கவுண்ட்டில் ஆர்டருக்கு வந்துள்ளன. 4K ரெசொலூஷன், டால்பி ஆடியோ, கூகுள் டிவி ஓஎஸ், 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி, எச்டிஆர்10 போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், மெட்டாலிக் பாடியில் பெசல்-லெஸ் டிசைன் கொண்ட 65 இன்ச் டிசிஎல் டிவியானது (65 inch TCL TV) இதுவரையில் கிடைக்காத தள்ளுபடியில் கிடைக்கிறது. அதேபோல தோஷிபா நிறுவனத்தின் 65 இன்ச் கியூஎல்இடி டிவிக்கும் தள்ளுபடி கிடைக்கிறது.
ஹோம் தியேட்டர் லெவலுக்கு டிவி இருக்கனும், ஆனால் பட்ஜெட் கம்மியா இருக்கனும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இந்த 65 இன்ச் டிவிகள் பக்காவான ஆப்ஷனாக இருக்கும். ஏனென்றால், ரூ.50000 பட்ஜெட்டில் டிஸ்பிளே, ஆடியோ, சிப் போன்றவற்றில் மிட்-பிரீமியம் பீச்சர்களை பேக் செய்துள்ளது. முதலில் டிசிஎல் டிவியின் பீச்சர்கள் மற்றும் விலையை பார்ப்போம்.

65 இன்ச் டிசிஎல் டிவி அம்சங்கள் (65 inch TCL TV Specifications): இந்த டிவி வி6பி சீரிஸ் (V6B Series) மாடலாகும். 65 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 4K அல்ட்ரா எச்டி (Ultra HD) ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. மெட்டாலிக் பாடி (Metallic Body) வருகிறது. பெசல்-லெஸ் டிசைன் (Bezel-Less Design) டிசைன் உள்ளது.
மேலும், டைனாமிக் கலர் என்ஹான்ஸ்மெண்ட் (Dynamic Color Enhancement), எச்டிஆர்10 (HDR 10) மற்றும் டி-ஸ்கிரீன் (T-Screen) சப்போர்ட் உள்ளது. டிஸ்பிளேவுக்காக ஏஐபிகியூ (AiPQ) சிப் வருகிறது. மைக்ரோ டிம்மிங் (Micro Dimming) வருகிறது. மல்டிபிள் ஐ கேர் (Multiple Eye Care) வருகிறது. இந்த டிசிஎல் டிவியில் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) வருகிறது.
ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மூலம் பிரைம் வீடியோ (Prime Video), நெட்பிளிக்ஸ் (Netflix), ஹாட்ஸ்டார் (Hotstar), ஜீ5 (Zee5) போன்ற ஆப்கள் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant), வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் (Voice Active Remote) வருகிறது. 64 பிட் குவாட் கோர் (Quad Core) சிப்செட் வருகிறது.

இந்த 65 இன்ச் டிசிஎல் டிவியில் 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி வருகிறது. 24W ஆடியோ அவுட்புட் உள்ளது. டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் வருகிறது. 3 எச்டிஎம்ஐ போர்ட், 1 யுஎஸ்பி போர்ட், கேமிங் கன்சோல் மற்றும் செட்-டாப் பாக்ஸ் கனெக்டிவிட்டி வருகிறது. ஈதர்நெட் (Ethernet), வை-பை (Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth) மற்றும் 1 ஹெட்போன் அவுட் உள்ளது.
2 வருட வாரண்டி கிடைக்கிறது. இந்த டிவியின் விலை 59 சதவீத டிஸ்கவுண்ட் உடன் ரூ.50,990ஆக இருக்கிறது. இந்த விலையிலும் ரூ.3000 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.3000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு பேங்க் டிஸ்கவுண்ட் பொருந்தும். ஆகவே, இந்த இந்த 65 இன்ச் டிசிஎல் டிவியை ரூ.44,990 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.
65 இன்ச் தோஷிபா டிவி அம்சங்கள் (65 inch TOSHIBA TV Specifications): இந்த டிவியில் 65 இன்ச் கிஎல்இடி டிஸ்பிளே வருகிறது. டால்பி விஷன் சப்போர்ட் உள்ளது. 4K ரெசொலூஷன், எச்டிஆர்10பிளஸ் பீச்சர்கள் உள்ளன. டால்பி அட்மோஸ் ஆடியோ வருகிறது. இந்த டிவியில் 49W ஆடியோ அவுட்புட் வருகிறது. மேலும், 2.1 சேனலுடன் சப்வூப்பர் வருகிறது.
மற்ற பீச்சர்கள் முந்தைய மாடலில் வந்ததை போலவே இருக்கின்றன. இந்த 65 இன்ச் தோஷிபா டிவியின் விலை 43 சதவீத டிஸ்கவுண்ட் உடன் ரூ.56,999ஆக இருக்கிறது. எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.3000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.53,999 பட்ஜெட்டில் இந்த டிவியை வாங்கி கொள்ளலாம். கியூஎல்இடி டிஸ்பிளே இந்த டிவிக்கு கூடுதல் பீச்சராகும்.


Click it and Unblock the Notifications








