Home
Gadgets

கிடுகிடுவென குறைந்த வியூ GloLED 4கே டிவி விலை.. டால்பி அட்மாஸ்.. 16ஜிபி மெமரி.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

வியூ (Vu) நிறுவனம் சமீபத்தில் ஐந்து QLED டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட டிவிகளின் விலையைக் குறைத்துள்ளது இந்த வியூ நிறுவனம். அதாவது தற்போது பிளிப்கார்ட் தளத்தில் வியூ GloLED 43 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவியின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதன்படி இப்போது பிளிப்கார்ட் தளத்தில் வியூ GloLED 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடலுக்கு 57 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.16,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1250 வரை தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

கிடுகிடுவென குறைந்த வியூ GloLED 4கே டிவி விலை.. டால்பி அட்மாஸ்..

வியூ GloLED 43 இன்ச் 4கே டிவி அம்சங்கள் (Vu GloLED 43 inch 4K Smart Google TV Specifications): அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே வசதியுடன் இந்த வியூ ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 400 நிட்ஸ் பிரைட்னஸ், டால்பி விஷன் ஐக்யூ (Dolby Vision IQ), 160 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

Glo AI பிராசஸர் உடன் இந்த அசத்தலான வியூ GloLED 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி வெளிவந்தது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். கிரிக்கெட் மோட், சினிமா மோட் பல பிக்சர் அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தைத் தரும்.

விஆர்ஆர்(VRR), ஆட்டோ லோ லேட்டன்சி மோட் (ALLM), எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த 43 இன்ச் ஸ்மார்ட் டிவியில் உள்ளது. அதேபோல் இந்த டிவியின வடிவமைப்பும் மகிவும் அருமையாக உள்ளது.

குறிப்பாக கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த வியூ 43 இன்ச் 4கே டிவி இயங்குகிறது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.

கிடுகிடுவென குறைந்த வியூ GloLED 4கே டிவி விலை.. டால்பி அட்மாஸ்..

2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதியுடன் இந்த வியூ GloLED 43 இன்ச் 4கே டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். மேலும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட 84W ஸ்பீக்கர்கள் உடன் இந்த அசத்தலான டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இதுதவிர பல்வேறு சவுண்ட் மோட்கள் இந்த டிவியில் உள்ளன.

குரோம்காஸ்ட் ஆதரவும் இந்த டிவியில் உள்ளது. பின்பு மேலும் வைஃபை, ப்ளுடூத், எச்டிஎம்ஐ போரட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த வியூ GloLED 43 இன்ச் 4கே டிவி வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி உடன் ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
57 percent discount on Vu GloLED 43 inch 4K Smart Google TV in Flipkart sale: check new price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X