வீட்டுக்கு 1 தூக்குவீங்க.. டால்பி ஆடியோ.. எச்டிஆர் 10.. 8ஜிபி மெமரி.. ஆஃபரில் Reliance 4கே டிவி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் ரிலையன்ஸ் (Reliance) 4கே டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 24W ஸ்பீக்கர்கள், குவாட் கோர் பிராசஸர், 8ஜிபி மெமரி மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. இப்போது இந்த ரிலையன்ஸ் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் ரிலையன்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவிக்கு (Reliance 43 inch QLED Ultra HD 4K Smart TV) 57 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.21,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.20490 விலையில் இந்த டிவியை வாங்கிவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் 43 இன்ச் 4கே டிவி அம்சங்கள்: அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே உடன் இந்த ரிலையன்ஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் 1920 X 1080 பிக்சல்ஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி.
குவாட்-கோர் பிராசஸர் (Quad-Core Processor) உடன் இந்த ரிலையன்ஸ் 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களுக்குத் தகுந்தபடி மாலி ஜிபியு (Mali GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி.
டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவு கொண்ட 24W ஸ்பீக்கர்கள் உடன் இந்த ரிலையன்ஸ் 43 இன்ச் 4கே டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் ஸ்டான்டர்ட் சவுண்ட் மோட், சினிமா சவுண்ட் மோட் ( Cinema Sound Mode) உள்ளிட்ட பல்வேறு ஆடியோ அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.
1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த 43 இன்ச் கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் வெப்ஒஎஸ் (WebOS) மூலம் இந்த டிவி இயங்குகிறது. குறிப்பாக மேலும் நெநெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.

வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவுடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் இந்த 43 இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட் ரிமோட் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 2 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Ports), 2 யுஎஸ்பி போர்ட் மற்றும் லேன் போர்ட் (LAN Port) வருகிறது. மேலும் ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இடம்பெற்றுள்ளது. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி ஆதரவுகளும் இந்த டிவியில் உள்ளன. குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications