அள்ளி வீசுது அமேசான்.. 200 இன்ச்.. டால்பி ஆடியோ.. ஆஃபரில் 4K ஸ்மார்ட் புரொஜெக்டர்.. எந்த மாடல்?
போர்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் போர்ட்ரானிக்ஸ் பீம் 430 ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடலுக்கு அமேசான் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. 200 இன்ச் கஸ்டமைசபிள் புரொஜெக்சன் சைஸ், டால்பி ஆடியோ, 4கே ஆதரவு எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.
அதாவது அமேசான் தளத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 430 புரொஜெக்டர் மாடலுக்கு 57 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த புரொஜெக்டர் ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த புரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.2500 தள்ளுபடி கிடைக்கும்.

எனவே போர்ட்ரானிக்ஸ் பீம் 430 புரொஜெக்டர் மாடலை ரூ.27499 இருந்தால் வாங்கிவிட முடியும். மேலும் இப்போது போர்ட்ரானிக்ஸ் பீம் 430 ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
போர்ட்ரானிக்ஸ் பீம் 430 ஸ்மார்ட் புரொஜெக்டர் அம்சங்கள் (Portronics Beem 430 Smart Projector Specification): அதாவது 4K டிஸ்ப்ளே ரெசல்யூஷன் மற்றும் 1080 பிக்சல்ஸ் ஃபுல் எச்டி நேட்டிவ் ரெசல்யூனை ஆதரிக்கிறது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 430 ஸ்மார்ட் புரொஜெக்டர். எனவே இதில் சிறந்த திரை அனுபவத்தைப் பெறமுடியும்.
குறிப்பாக இதில் ஆட்டோ கீஸ்டோன் கரெக்சன் (Auto Keystone Correction) மற்றும் ஆட்டோஃபோகஸ் (Auto Focus) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புரொஜெக்டரில் 45 இன்ச் முதல் 200 இன்ச் வரையிலான கஸ்டமைசபிள் புரொஜெக்சன் சைஸ் (Customizable Projection Size) கிடைக்கிறது. எனவே பெரிய திரையில் நீங்கள் படம் பார்க்க முடியும்.

10000 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) வசதி கொண்டுள்ளது போர்ட்ரானிக்ஸ் பீம் 430 ஸ்மார்ட் புரொஜெக்டர். மேலும் இதன் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போர்ட்ரானிக்ஸ் நிறுவனம். குறிப்பாக டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புரொஜெக்டர். பின்பு ஆடியோவிற்கான புளூடூத் கனெக்டிவிட்டி ஆதரவும் இதில் உள்ளது.
இதுதவிர பில்ட்-இன் 14 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான போர்ட்ரானிக்ஸ் பீம் 430 ஸ்மார்ட் புரொஜெக்டர். எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவத்தைப் பெறமுடியும். மேலும் ஸ்கிரீன் மிரரிங் (Screen mirror) அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போர்ட்ரானிக்ஸ் பீம் 430 ஸ்மார்ட் எல்இடி புரொஜெக்டர்.
அதேபோல் போர்ட்ரானிக்ஸ் பீம் 430 ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடலை ஸ்மார்ட்போன்,லேப்டாப், டேப்லெட், ஸ்பீக்கர்கள், யுஎஸ்பி டிரைவ், செட்-டாப் பாக்ஸ், மல்டிபிள் போர்ட் போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ளலாம். நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்கள் இந்த புரொஜெக்டர் மாடலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் மற்றும் Aux கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போர்ட்ரானிக்ஸ் பீம் 430 ஸ்மார்ட் புரொஜெக்டர். குறிப்பாக இந்த சாதனம் கருப்பு நிறத்தில் வாங்க கிடைக்கும். அதேபோல் போர்ட்ரானிக்ஸ் பீம் 430 ஸ்மார்ட் புரொஜெக்டர் மாடலுக்கு 1 வருடம் வாரண்ட்டி வழங்கப்படுகிறது.
விரைவில் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் பல அசத்தலான புரொஜெக்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications