Home
Gadgets

50 இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க சரியான நேரம்.. 16ஜிபி மெமரி.. டால்பி அட்மாஸ்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவிக்கு (Acer G plus Series 50 inch 4K TV) தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி டால்பி அட்மாஸ், 16ஜிபி மெமரி மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது. இப்போது இந்த ஸ்மார்ட் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களைப் பார்க்கலாம்.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவிக்கு 57 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.26,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.24999 விலையில் வாங்கிவிட முடியும்.

50 இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க சரியான நேரம்.. எந்த மாடல்?

ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் 50 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (Acer G plus Series 50 inch 4K TV Specifications): கார்டெக்ஸ் ஏ55 பிராஸசர் உடன் இந்த ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

அதேபோல் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) உடன் இந்த ஏசர் டிவி வெளிவந்துள்ளது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம்காஸ்ட் (Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) போன்ற சப்போர்ட் கிடைக்கிறது. மேலும் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar), யூடியூப் (Youtube) போன்ற இன்-பில்ட் ஆப்கள் இந்த டிவியில் உள்ளன.

குறிப்பாக அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே உடன் இந்த ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் 50 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் 3840 x 2160 பிக்சல்ஸ், சூப்பர் பிரைட்னஸ், எச்டிஆர் 10 ஆதரவு, 1.07 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. எனவே இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

தரமான டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட 30W ஸ்பீக்கர்கள் உடன் ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இது ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும். பின்பு இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஏசர் நிறுவனம்.

அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் இந்த ஏசர் ஜி பிளஸ் சீரிஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். பின்பு வாய்ஸ் கண்ட்ரோல் உடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் இந்த ஸ்மார்ட் ரிமோட் ஆனது ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது.

எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் மற்றும் லேன் போர்ட் (LAN Port) வருகிறது. மேலும் ஆப்டிகல் (Optical) மற்றும் ஆர்எப் (RF) இந்த டிவியில் இடம்பெற்றுள்ளது. மொபைல் காஸ்டிங் (Mobile Casting), பில்ட்-இன் வை-பை (Built In Wi-Fi) மற்றும் ப்ளூடூத் போன்ற வயர்லெஸ் கனெக்டிவி்ட்டி ஆதரவுகளும் இந்த ஏசர் டிவியில் உள்ளன.

photo credit: acertvindia

More from GizBot

Best Mobiles in India

English summary
57 percent discount on Acer G plus Series 50 inch 4K TV in Flipkart sale: Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X