2 டிவி வாங்குவீங்க.. மிரளுது ஆர்டர்.. ரூ.25,999 போதும்.. 4K கூகுள் டிவி.. 16GB மெமரி.. டால்பி ஆடியோ!
அமேசான் ஃபேப் டிவி ஃபெஸ்ட் விற்பனையை (Amazon Fab TV Fest Sale) முன்னிட்டு 50 இன்ச் அல்ட்ரா எச்டி டிவியானது, வெறும் ரூ.25,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. அதேபோல 50 இன்ச் கியூஎல்இடி டிவியானது, ரூ.26,499 பட்ஜெட்டில் விற்பனையாகிறது. விவரம் இதோ.
50 இன்ச் ஐஃபால்கன் டிவி அம்சங்கள் (50 inch iFFALCON TV Specifications): இதுவொரு யு62 சீரிஸ் (U62 Series) மாடல் டிவியாகும். இந்த டிவியில் 50 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) 4K அல்ட்ரா எச்டி (Ultra HD) எல்இடி (LED) டிஸ்பிளே வருகிறது. 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 178 வியூ ஆங்கிள், டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் வருகிறது.

அதுமட்டுமல்லாமல், எச்டிஆர் 10 ( HDR 10), ஏஐ பிக்சர் என்ஜின் 2.0 (AI Picture Engine 2.0) மற்றும் 4K அப்ஸ்கேலிங் (4K Upscaling) சப்போர்ட் கொண்டிருக்கிறது. டால்பி ஆடியோ (Dolby Audio) கொண்ட 24W சவுண்ட் அவுட்புட் வருகிறது. 3 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Ports), 1 யுஎஸ்பி போர்ட் (USB Port), 1 ஹெட்போன் அவுட்புட் (Headphone Output) வருகிறது.
அதோடு கேமிங் கன்சோல் (Gaming Console) கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) சப்போர்ட் வருகிறது. 64 பிட் குவாட் கோர் சிப்செட் கொண்டுள்ளது. 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி வருகிறது. இன்பில்ட் வை-பை, ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது.
நெட்ஃபிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar) போன்ற இன்-பில்ட் ஆப்கள் வருகின்றன. 1 வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது. இவ்வளவு பீச்சர்களை கொண்டிருந்தும், அமேசான் ஃபேப் டிவி ஃபெஸ்ட் விற்பனையை முன்னிட்டு வெறும் ரூ.25,999 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
50 இன்ச் ஹைசென்ஸ் டிவி அம்சங்கள் (50 inch Hisense TV Specifications): இந்த டிவி ஈ7கே சீரிஸ் (E7K Series) மாடலாகும். 50 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) 4K அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வருகிறது. இதுவொரு கியூஎல்இடி (QLED) டிஸ்பிளே டிவியாகும். இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் சப்போர்ட் உள்ளது.

பெசல் லெஸ் ஃப்ளோட்டிங் டிஸ்பிளே டிசைன் (Bezel-less Floating Display Design) கொண்டிருக்கிறது. விஆர்ஆர்&ஏஎல்எல்எம் (VRR& ALLM), டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர்10 மற்றும் 1 பில்லியன் கலர் சப்போர்ட் கொண்டுள்ளது. டால்பி அட்மோஸ் சப்போர்ட் கொண்ட 24W அவுட்புட் ஸ்பீக்கர்கள் (Output Speakers) வருகின்றன.
3 எச்டிஎம்ஐ, கேமிங் கன்சோல், 2 யுஎஸ்பி போர்ட் மற்றும் டூயல் பேண்ட் வை-பை (Dual-band Wi-Fi) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டி வருகிறது. ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode) வருகிறது. குவாட் கோர் சிப்செட் கொண்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ், யூடியூப், ஜியோசினிமா மற்றும் பிரைம் வீடியோ ஆப்கள் உள்ளன.
இந்த 50 இன்ச் ஹைசென்ஸ் டிவிக்கு 4 வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது. இந்த டிவியின் விலையானது, அமேசான் ஃபேப் டிவி ஃபெஸ்ட் விற்பனையை முன்னிட்டு ரூ.28,999ஆக இருக்கிறது. இந்த விலையிலும், எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு ரூ.2,500 உடனடி டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த டிவியை வெறும் ரூ.26,499 பட்ஜெட்டில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications