Home
Gadgets

பழைய டிவிக்கு கும்பிடு.. வெறும் ரூ.15000-க்கு 40 இன்ச்.. டால்பி ஆடியோ.. FHD வீடியோ.. எந்த மாடல்?

டிவி வாங்க திட்டமிட்ட ஒட்டுமொத்த கஸ்டமர்களும் அவர்களது பழைய டிவியை தூக்கிப்போடும்படியான டிஸ்கவுண்ட் 40 இன்ச் டிவிகளுக்கு கிடைக்கிறது. டால்பி ஆடியோ, ஃபுல்எச்டி வீடியோ, கூகுள் டிவி ஓஎஸ், 30W ஆடியோ அவுட் போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்களும் பட்ஜெட்டில் கிடைக்கின்றன. அமேசான் விற்பனையில் (Amazon Sale) கிடைக்கும் இந்த டிவியில் ஏசர் (Acer) நிறுவனத்தின் 2024ஆம் ஆண்டு மாடல் இருக்கிறது. இந்த டிவிக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் மற்றும் பீச்சர்கள் குறித்த முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

32 இன்ச் டிவிகள் கிடைத்த விலைக்கு இப்போது 40 இன்ச் டிவிகள் வந்துவிட்டன. இதனால், எந்த டிவியை தேர்ந்தெடுத்து வாங்குவது என்பதில் குழப்பமே ஏற்படுகிறது. ஏனென்றால், பீச்சர்கள் அப்படி இருக்கின்றன. இருப்பினும், பிராண்ட் மற்றும் டிஸ்பிளே பீச்சர்களின் அடிப்படையில் 40 இன்ச் டிவிகளை வாங்கி கொள்ளலாம். இது பட்ஜெட்டுக்கு மாறுபடும்.

பழைய டிவிக்கு கும்பிடு.. வெறும் ரூ.15000-க்கு 40 இன்ச்.. டால்பி ஆடியோ!

40 இன்ச் ஏசர் டிவி அம்சங்கள், விலை (40 inch Acer TV Specifications Price): இந்த ஏசர் டிவி ஐ ப்ரோ சீரிஸ் (I PRO Series) மடலாகும். ஃபுல்எச்டி (FHD) ரெசொலூஷன் கொண்ட 40 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10 (HDR10), ஐஎப்எஸ்சி (IFSC) மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் சப்போர்ட் வருகிறது.

ஆகவே, வீடியோ குவாலிட்டியில் கலர் அக்கியூரசி மற்றும் ரிச் கான்ட்ராஸ்ட் கிடைக்கும். சூப்பர் காஸ்ட்ராஸ்ட் (Super Contrast) மற்றும் இன்டலிஜென்ட் ஃபிரேம் ஸ்டெபிலைசேஷன் என்ஜின் (Intelligent Frame Stabilization Engine) போன்ற ஸ்மார்ட் டிஸ்பிளே பீச்சர்களும் கிடைக்கிறது. டிஸ்பிளேவை போல ஆடியோவிலும் ஸ்மார்ட் பீச்சர்கள் பேக் செய்யப்பட்டுள்ளன.

ஆகவே, டால்பி ஆடியோ (Dolby Audio) மற்றும் ஹை ஃபைடெலிட்டி (High Fidelity) ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. 30W ஆடியோ அவுட் மற்றும் 5 சவுண்ட் மோட்களை (Sound Mode) பெற்று கொள்ளலாம். இந்த ஏசர் டிவியில் கூகுள் டிவி (Google TV) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. ஆகவே, கூகுள் ஆப்களுக்கு எந்தவித குறையும் இருக்காது.

பில்ட்-இன் கூகுள்காஸ்ட் (Built-in Googlecast), ஃபாஸ்ட்காஸ்ட் (Fastcast) வருகிறது. கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) மூலம் நெட்பிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) போன்ற ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 40 இன்ச் ஏசர் 1.5 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி கொடுக்கிறது.

மேலும், வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant), ஸ்மார்ட் ரிமோட் (Smart Remote) கிடைக்கிறது. டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wifi), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) போன்ற வயர்லெஸ் கனெக்டிவிட்டி மற்றும் ஆடியோ/வீடியோ, ஈதர்நெட் (Ethernet), ஹெட்போன் ஜாக் (Headphone Jack), எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி (USB) போர்ட், கேமிங் கன்சோல் போன்ற கனெக்டிவிட்டியும் இருக்கிறது.

இந்த 40 இன்ச் ஏசர் டிவிக்கு 1 வருட வாரண்டி பெறலாம். இப்போது, அமேசான் விற்பனையில் 57 சதவீத டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.16,499 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த கம்மி பட்ஜெட்டிலும் பேங்க் ஆப் பரோடா கிரெடிட் கார்டுக்கு ரூ.1,250 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.15,249 பட்ஜெட்டில் இந்த 40 இன்ச் ஏசர் டிவியை வாங்கு கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
57 Discount on 40 inch Acer TV in Amazon Sale With Dolby Audio Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X