Amazon குடியரசு தின விற்பனை.. கிடைக்காத ரேட்டில் Apple Watch SE.. இதுக்கு கம்மி இல்லைங்க.. பீச்சர்கள் எப்படி?
பிரீமியம் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களுக்கு அமேசான் குடியரசு தின விற்பனையில் (Amazon Republic Day Sale) நல்ல நேரம் வந்துவிட்டது. இதுவரையில் கிடைக்காத விலைக்கு ஆப்பிள் வாட்ச் எஸ்இ (Apple Watch SE) கிடைக்கிறது. அலுமினியம் கேஸ், ரெடினா டிஸ்பிளே, டிஜிட்டல் கிரவுண், ஆப்டிகல் ஹார்ட் சென்சார், எஸ்8 சிப் போன்ற பீச்சர்களை கொடுக்கும் இந்த ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஆப்பிள் போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு அமேசான் குடியரசு தின விற்பனையில் நம்ப முடியாத டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே, விலை குறைப்பில் இருக்கும் மாடல்களுக்கு கூடுதலாக பேங்க் டிஸ்கவுண்ட் வருகிறது. இப்போது, ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலுக்கு இதுவரையில் கிடைக்காத தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்திய மார்கெட்டில் ரூ.29,900 பட்ஜெட்டில் இந்த ஆப்பிள் வாட்ச் எஸ்இ வெளியாகியது. ஆனால், நேரடி விலை குறைப்பு காரணமாக ரூ.20,599 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.1,250 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இதே கார்டு மூலம் ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தால் ரூ.1,500 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
ஆகவே, வெறும் ரூ.19,099 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.19,300 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கொடுக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஸ்மார்ட்போன் விலையில் விற்பனைக்கு கிடைக்கும் இந்த ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலில் என்னென்ன பீச்சர்கள் வருகின்றன என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.
ஆப்பிள் வாட்ச் எஸ்இ அம்சங்கள் (Apple Watch SE Specifications): மிட்நைட் (Midnight), ஸ்டார்லைட் (Starlight) மற்றும் சில்வர் (Silver) கலர்கள் மற்றும் அலுமினியம் கேஸ் (Aluminium Case) வருகிறது. ஸ்போர்ட்ஸ் பேண்ட் (Sport Band) கிடைக்கிறது. இதுவொரு 2ஆம் ஜெனரேஷன் வெர்ஷனாகும். 324 x 394 பிக்சல்கள் ரெசொலூஷன் கொண்ட ரெடினா டிஸ்பிளே (Retina Display) வருகிறது.
இந்த டிஸ்பிளேவில் 1,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ஆகவே, அவுட்டோரில் விசிபிலிட்டி பக்காவாக இருக்கும். டிஜிட்டல் கிரவுண் (Digital Crown) மற்றும் சைடு பட்டன் (Side Button) கன்ட்ரோல் கிடைக்கிறது. மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் பேக் செய்யப்பட்டுள்ளது. பேக்கில் ஆப்டிகல் ஹார்ட் சென்சார் (Optical Heart Sensor) கிடைக்கிறது. சிரி (Siri) வாய்ஸ் அசிஸ்டன்ட் உள்ளது.
பர்ஃபாமென்ஸ் பக்கம் பார்க்கையில் டூயல் கோர் எஸ்8 எஐபி (Dual Core S8 SiP) மற்றும் 2 கோர் நியூரல் என்ஜின் (Neural Engine) வருகிறது. இந்த ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலில் 32 ஜிபி மெமரி வருகிறது. ஹார்ட் ரேட் சென்சாருக்கு அடுத்து ஆம்பியன் லைட் சென்சார் (Ambient Light Sensor), அல்டிமீட்டர் (Altimeter), கைரோஸ்கோப் (Gyroscope), ஆக்சிலரோமீட்டர் (Accelerometer) வருகிறது.
ஹெல்த் மற்றும் வெல்னஸ் டேட்டாக்களுக்காக ஹார்ட் ரேட் ஆப், ஹார்ட் ரேட் நோட்டிபிகேஷன், மெடிகேஷன் ஆப், மைண்ட்ஃபுல்னஸ் ஆப், நாய்ஸ் ஆப் மற்றும் ஸ்லீப் ஆப் வருகிறது. இதன் மூலம் ஹெல்த் டேட்டார்களை கண்காணிக்கவும், நோட்டிபிகேஷன்களாக தெரிந்து கொள்ளவும் முடியும். 18 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கும் பேட்டரி கிடைக்கிறது.
ஜிபிஎஸ் டிராக்கிங், ஆட்டோமேட்டிக் ரன்னிங் டிராக், வே-பாய்ன்ட்ஸ் போன்ற சப்போர்ட் கொடுக்கும்படி ரன்னிங், ஹைக்கிங், சைக்கிளிங், ஸ்விம்மிங் வொர்க் அவுட் மோட்கள் உள்ளன. 50 மீட்டர்கள் ஸ்விம்ப்ரூஃப் கிடைக்கிறது. ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS), வை-பை 4 (Wi-Fi 4), எல்டிஇ (LTE) மற்றும் இன்டர்நேஷனல் ரோமிங் கனெக்டிவிட்டி மட்டுமே கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








