யாருமே எதிர்பார்க்கல.. கூகுள் டிவி OS.. டால்பி அட்மாஸ்.. ஆஃபரில் 50 இன்ச் 4K ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?
இந்தியாவில் 32 இன்ச், 43 இன்ச் ஸ்மார்ட் டிவிகளை விட 50 இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. எனவே தான் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு 50 இன்ச் டிவிகளை அதிகம் அறிமுகம் செய்கின்றன. இந்நிலையில் ஏசர் நிறுவனத்தின் 50 இன்ச் ஸ்மார்ட் டிவி ஒன்று பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் AR50GR2851UDFL என்ற மாடல் நம்பர் கொண்ட ஏசர் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் 50 இன்ச் 4K ஸ்மார்ட் கூகுள் டிவி (Acer Advanced I Series 50 inch 4K Smart Google TV) மாடலுக்கு 56 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.21,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஏசர் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் 50 இன்ச் டிவி அம்சங்கள் ( Acer Advanced I Series 50 inch 4K Google TV Specifications): இந்த டிவி அல்ட்ரா எச்டி 4கே (Ultra HD 4K) டிஸ்பிளே கொண்டுள்ளது .3840 x 2160 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 ஆதரவு (HDR10), 1.07 மில்லியன் கலர்ஸ் (1.07 Million Colours), டால்பி விஷன் (Dolby Vision), வைடு கலர் காமட் (Wide Colour Gamut) உள்ளிட் பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.
குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். அதேபோல் அல்ட்ரா எச்டி அப்ஸ்கேலிங் (UHD Upscaling), மைக்ரோ டிம்மிங் (Micro Dimming) ஆதரவுகளும் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன. மேலும் இந்த டிவியில் சிறந்த பாதுகாப்பு அம்சமும் உள்ளது. அதாவது ப்ளூ லைட் ரெடக்சன் (Blue Light Reduction) ஆதரவுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது, இது கண்களுக்குச் சிறந்த பாதுகாப்பு கொடுக்கும்.
தரமான டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட 36W ஸ்பீக்கர்கள் கொண்டுள்ளது இந்த ஏசர் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் 50 இன்ச் டிவி மாடல். எனவே இந்த டிவியில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். இதுதவிர பல்வேறு சவுண்ட் மோட்கள் இந்த 50 இன்ச் ஸ்மார்ட் டிவியில் உள்ளன.
சக்திவாய்ந்த குவாட் கோர் பிராசஸர் உடன் இந்த ஏசர் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் 50 இன்ச் டிவி மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV) ஓஎஸ் மூலம் இந்த டிவி இயங்குகிறது. எனவே கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast built-in), கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) போன்ற அனைத்தையும் இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.
மேலும் ப்ளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், கேமிங் கன்சோல் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஏசர் அட்வான்ஸ்டு ஐ சீரிஸ் 50 இன்ச் டிவியில் உள்ளன. மேலும் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவுடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. அதாவது வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவுட் ஒடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் ரிமோட்.
அதேபோல் நெட்பிளிக்ஸ் (Netflix), பிரைம் வீடியோ (Prime Video), யூடியூப் (YouTube), ஹாட்ஸ்டார் போன்ற பல்வேறு ஓடிடி ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். மேலும் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி ஆதரவுடன் இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி வெளிவந்தது.


Click it and Unblock the Notifications