Home
Gadgets

என்ன இப்படி இருக்கு! மொத்த இந்தியாவும் போட்டி போட்டு வாங்க போகும் Mini LED 4K Smart TV.. என்ன சைஸ்? என்ன விலை?

2024 ஆம் ஆண்டில்.. நம் வீட்டிற்கு ஒரு புதிய ஸ்மார்ட் டிவியை வாங்க வேண்டுமென்கிற எண்ணம் கொண்ட ஒவ்வொரு இந்திய குடும்பங்களையும் குறிவைத்து.. டிசிஎல் (TCL) நிறுவனம் வெவ்வேறு ஸ்க்ரீன் சைஸ்களுடன் 5 புதிய ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் டிவி (Google TV) ஆப்ரேட்டிங் சிஸ்டம், மினி எல்இடி (Mini LED) தொழில்நுட்பம், ஸ்லிம் ஆன யூனி-பாடி டிசைன் (Slim Uni-body Design), டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் (DTS Virtual X) ஆதரவு உடனான ஸ்பீக்கர்கள் உட்பட பல முக்கிய அம்சங்களுடன் வரும் இந்த புதிய டிசிஎல் டிவிகளின் விலை என்ன? அம்சங்கள் என்ன? இதோ விவரங்கள்:

TCL-ன் புதிய 4K மினி LED ஸ்மார்ட் TVகள் அறிமுகம்!

டிசிஎல் நிறுவனம் அதன் சி755 சீரீஸின் கீழ் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இதன்கீழ் வரும் அனைத்து மாடல்களுமே 3840 x 2160 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 144ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 550 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 16:09 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 6000:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ உடனான 4கே யுஎச்டி விஏ மினி எல்இடி (4K UHD VA mini LED) பேனலை கொண்டுள்ளன.

மேலும் இந்த டிவிகளின் டிஸ்பிளே எச்எல்ஜி (HLG), எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) மற்றும் டால்பி விஷன் ஐக்யூ (Dolby Vision IQ) தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. மெலிதான மற்றும் யூனி-பாடி டிசைனுடன் வரும் டிசிஎல்-ன் புதிய ஸ்மார்ட் டிவிகள் ஏஐபிக்யூ ப்ராசஸர் 3.0 (AiPQ Processor 3.0) மூலம் இயக்கப்படுகிறது.

TCL-ன் புதிய 4K மினி LED ஸ்மார்ட் TVகள் அறிமுகம்!

டிசிஎல் சி755 சீரிஸின் கீழ் வரும் அனைத்து ஸ்மார்ட் டிவிகளுமே கூகுள் டிவி ஓஎஸ் உடன் இயங்குகிறது. இதில் இன்பில்ட் கூகுள் அசிஸ்டென்ட்டையும் (Inbuilt Google Assistant) கொண்டுள்ளது. ஆடியோவை பொறுத்தவரை, இது டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டிடிஎஸ்-எச்டி (DTS-HD) மற்றும் டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் ஆதரவு உடனான டூயல் 10W மற்றும் ஒரு 20W ஸ்பீக்கர் உடன் வருகிறது.

டிசிஎல் நிறுவனத்தின் கூற்றுப்படி சி755 சீரீஸ் ஸ்மார்ட் டிவிகள் ஆனது ஐமேக்ஸ்-என் ஹான்ஸ்டு எக்ஸ்பீரியன்ஸை ( IMAX-enhanced Experience) வழங்கும். இந்த ஸ்மார்ட் டிவியில் கேம் மாஸ்டர் 2.0 (Game Master 2.0) பொருத்தப்பட்டுள்ளது, இது பயனர்களின் கேமிங் அனுபவத்தை மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.

TCL-ன் புதிய 4K மினி LED ஸ்மார்ட் TVகள் அறிமுகம்!

டிசிஎல்-ன் இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் மிராகேஸ்ட் (Miracast) மற்றும் வீடியோ சாட் (Video chat) அம்சங்களையும் ஆதரிக்கிறது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, டிசிஎல் சி755 சீரீஸ் ஸ்மார்ட் டிவிகள் ஆனது எச்டிஎம்ஐ 1.4, எச்டிஎம்ஐ 2.0 மற்றும் எச்டிஎம்ஐ 2.1 (HDMI2.1) போர்ட்கள், ப்ளூடூத் 5.2 மற்றும் வைஃபை 6 போன்றவைகளை ஆதரிக்கிறது. கடைசியாக இது விசா வால் மவுண்ட்டிங் ( VESA wall mounting) உடன் வருகிறது.

விலை மற்றும் விற்பனை: டிசிஎல் சி755 4கே க்யூடி மினி எல்இடி டிவிகள் 5 வெவ்வேறு ஸ்க்ரீன் அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அனைத்துமே அமேசான் வலைத்தளம் வழியாக பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும். 55 இன்ச் மாடல் ரூ.74,990 க்கு வாங்க கிடைக்கும். இந்த மாடலின் மீது ரூ 2,000 கூப்பன் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது; இந்த சலுகை ஜனவரி 12 வரை கிடைக்கும்.

65 இன்ச், 75 இன்ச் மற்றும் 85 இன்ச் மாடல்கள் முறையே ரூ.99,990, ரூ.1,59,990, மற்றும் ரூ.2,29,990 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. டிசிஎல் சி755 சீரீஸில் 98 இன்ச் மாடலும் உள்ளது. ஆனால் அதன் விலை நிர்ணயம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மற்ற மாடல்கள் எல்லாமே ஜனவரி 13 முதல் ஜனவரி 20 வரை பிரத்யேக வங்கி சலுகைகளின் கீழ் வாங்க கிடைக்கும் என்றும் டிசிஎல் அறிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
55 inch to 98 inch TCL Launched 5 New QD Mini LED 4K TV Models in India Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X