SALE டிமாண்ட்.. 59 சதவீத தள்ளுபடியில் 55 இன்ச் QLED டிவி.. Google TV ஓஎஸ்.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?
டிசிஎல் நிறுவனத்தின் கியூஎல்டி டிவி மாடல்களுக்கு பிளிப்கார்ட் தளத்தில் நல்ல தள்ளுபடி கிடைக்கிறது. இதில் பாதிக்கும் மேல் தள்ளுபடி விலைக்கு 55 இன்ச் டிசிஎல் டி6சி கியூஎல்இடி டிவி (55 inch TCL T6C QLED TV) கிடைக்கிறது. இந்த 55 இன்ச் டிசிஎல் டி6சி கியூஎல்இடி டிவியின் முழு விவரம் இதோ.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 59 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு 55 இன்ச் டிசிஎல் டி6சி கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (55 inch TCL T6C QLED Ultra HD 4K Smart Google TV) கிடைக்கிறது. ஆகவே, ரூ.34,990 விலைக்கு ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.4,000 தள்ளுபடியை பெற்று கொள்ளலாம்.

ஆகவே, ரூ.30,990 விலைக்கு இந்த 55 இன்ச் டிசிஎல் டி6சி கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவியை வாங்கி கொள்ளலாம். பேடிஎம் வழியாக ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.20,50 தள்ளுபடி கொடுக்கப்பட்டு உள்ளது. ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கும் கஸ்டமர்களுக்கு 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கொடுக்கப்பட்டு உள்ளது.
55 இன்ச் டிசிஎல் டி6சி கியூஎல்இடி டிவி அம்சங்கள் (55 inch TCL T6C QLED TV Specifications): கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, கூகுள் ஹோம் ஆப் (Google Home App), கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), கிட்ஸ் ஃபுரொபைல் (Kids Profile) மற்றும் கூகுள் காஸ்ட் (Google Cast) ஆகியவற்றை இந்த 55 இன்ச் டிசிஎல் டி6சி கியூஎல்இடி டிவி கொடுக்கிறது.
55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளே கிடைக்கிறது. 350 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 60Hz ரெஃப்ரெஷ் ரேட்டை இந்த 55 இன்ச் டிசிஎல் டி6சி கியூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி கொடுக்கிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரியை பெற்று கொள்ளலாம். 24 W ஆடியோ அவுட்புட் கொண்ட 2 ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன.
டிடிஎஸ் விர்ச்சவல்:எக்ஸ் (DTS Virtual:X) கிடைக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொடுக்கப்பட்டுள்ளது. மல்டிபிள் ஐ கேர் (Multiple Eye Care) மோட்கள் கிடைக்கின்றன. மெட்டாலிக் பெசல்-லெஸ் டிசைனில் கிடைக்கிறது. ஏஐபிகியூ ப்ராசஸர் (AiPQ Processer) கிடைக்கிறது. டைனாமிக் கலர் என்ஹான்ஸ்மெண்ட் (Dynamic Color Enhancement) கொடுக்கிறது.
டால்பி விஷன் (Dolby Vision) கிடைக்கிறது. இதுபோக பயோனிக் கலர்ஃபுல் கலர் ஆப்டிமைசேஷன் டெக்னாலஜி (Bionic Color Optimization Technology) கிடைக்கிறது. டிசிஐ பி3 கலர் காமட் உள்ளது. இதுவொரு எச்விஏ பேனல் மாடலாக இருக்கிறது. ஆகவே, 3X கான்ட்ராஸ்டு என்ஹான்ஸ்மெண்ட், 178 டிகிரி வியூ ஆங்கிள் மற்றும் ஆன்டி கிளார் டிஸ்பிளேவை பெற்று கொள்ளலாம்.
ஏஐ கிளாரிட்டி (Ai Clarity), ஏஐ கலர் (Ai Colour), ஏஐ கான்ட்ராஸ்டு (Ai Contrast) மற்றும் ஏஐ எச்டிஆர் (Ai HDR) உள்ளிட்ட பீச்சர்களும் கிடைக்கின்றன. கேமிங் பிரியர்களுக்கு கேம் மாஸ்டர் (Game Master) கிடைக்கிறது. 120Hz கேமிங் ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. விஆர்ஆர் (VRR) வழியாக பயன்படுத்தி கொள்ளலாம். எச்டிஎம்ஐ, யூஎஸ்பி, ப்ளூடூத், வை-பை உள்ளது.


Click it and Unblock the Notifications