வீட்டுகொரு 55 இன்ச் டிவி.. வெறும் ரூ.28,749 போதும்.. QLED டிஸ்பிளே.. டால்பி ஆடியோ.. 4K வீடியோ.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) 55 இன்ச் கியூஎல்இடி டிஸ்பிளே, டால்பி அட்மோஸ் ஆடியோ, டால்பி விஷன் வீடியோ, 4K ரெசொலூஷன், 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி, 20W ஸ்பீக்கர்கள், கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் போன்ற பிரீமியம் பீச்சர்களை கொண்ட 55 இன்ச் மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் கியூஎல்இடி டிவி (55 inch MOTOROLA EnvisionX TV) நம்ப முடியாத டிஸ்கவுண்ட்டில் கிடைக்கிறது. இந்த மோட்டோரோலா டிவியின் பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண் விவரங்கள் இதோ.
55 இன்ச் மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (55 inch MOTOROLA EnvisionX TV Specifications): இந்த மோட்டோரோலா டிவி என்விஷன்எக்ஸ் சீரிஸ் (EnvisionX Series) மாடலாகும். 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி (QLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் கிடைக்கிறது.

பெசல்-லெஸ் டிஸ்பிளே (Bezel-less Display) டிசைனில் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கொண்டிருக்கிறது. கூடவே, 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன் வருகிறது. மேலும், 1.07 பில்லியன் கலர் டெப்த் மற்றும் எச்டிஆர்10 (HDR10) கிடைக்கிறது. ஆகவே, வீடியோ அவுட்புட் அல்ட்ரா பிரீமியமாக எதிர்பார்க்கலாம். கேமிங் பிரியர்களுக்கும் பக்காவான அவுட்புட் கிடைக்கும்.
இந்த மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் கியூஎல்இடி டிவியின் ஆடியோவை பார்க்கையில், 2 டவுன் ஃபயரிங் (Down Firing) ஸ்பீக்கர்கள் வருகின்றன. டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டால்பி டிஜிட்டல் (Dolby Digital) மற்றும் டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus) சப்போர்ட் கிடைக்கிறது. 20W அவுட்புட் பெற்று கொள்ளலாம். ஸ்டான்டர்ட் (Standard), மியூசிக் (Music) போன்ற மோட்கள் வருகின்றன.
இந்த டிவியில் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் குவாட் கோர் மீடியாடெக் 9602 (Quad Core MediaTek 9602) சிப்செட் வருகிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி வருகிறது. கேமிங் பிரியர்களுக்காக இன்-பில்ட் கிராபிக்ஸ் யூனிட் (In-Built Graphics Unit) வருகிறது. ஆகவே, மாலி ஜி52 எம்சி1 ஜிபியு (Mali G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது. பர்ஃபாமென்ஸ் பிரீமியமாக எதிர்பார்க்கலாம்.
கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) கிடைக்கிறது. ஆகவே, பில்ட்-இன் குரோம்காஸ்ட் (Built-in Chromecast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் கிடைக்கிறது. அதேபோல நெட்பிளிக்ஸ், டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ மற்றும் யூடிபூப் போன்ற இன்-பில்ட் ஓடிடி ஆப்கள் கிடைக்கின்றன. வை-பை (Wi-Fi) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) கனெக்டிவிட்டி உள்ளது.
அதேபோல எல்ஏஎன் (LAN), 2 யுஎஸ்பி போர்ட் (USB Port), 3 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port), மினி ஏவி போர்ட் (Mini AV Port) மற்றும் ஆப்டிகல் போர்ட் (Optical Port) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் கியூஎல்இடி டிவிக்கு 1 வருட வாரண்டி கிடைக்கிறது. இந்த 8 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.30,999ஆக இருக்கிறது.
55 இன்ச் மோட்டோரோலா என்விஷன்எக்ஸ் கியூஎல்இடி டிவி டிஸ்கவுண்ட் (55 inch MOTOROLA EnvisionX TV Discount): பிளிப்கார்ட் தளத்தில் ரூ.2,250 டிஸ்கவுண்ட் போக ரூ.28,749 பட்ஜெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. இதுபோக ரூ.4600 மதிப்பில் பழைய டிவிகளை எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளலாம். இந்த டிஸ்கவுண்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








