Home
Gadgets

பொசுக்குனு ஆர்டர்.. ரூ.26000 பட்ஜெட்ல 55 இன்ச் 4K டிவி.. 40W ஆடியோ.. 4K வீடியோ.. எந்த மாடல்?

4K அல்ட்ரா எச்டி ரெசொலூஷன் கொண்ட 55 இன்ச் டிவியை கம்மி பட்ஜெட்டில் மட்டுமல்லாமல், பட்டையை கிளப்பும் ஆஃபரில் தேடிக் கொண்டிருக்கும் கஸ்டமர்களுக்கு கோடாக் (KODAK) மற்றும் ஐஃபால்கான் (iFFALCON) நிறுவனங்களின் 55 இன்ச் மாடல்கள் நல்ல தேர்வாக இருக்கும். டால்பி ஆடியோ, எச்டிஆர்10 வீடியோவை ஐஃபால்கான் டிவியும், 40W ஆடியோ, எச்டிஆர்10பிளஸ் வீடியோவை கோடாக் டிவியும் கொண்டிருக்கிறது. இந்த 55 இன்ச் டிவிகளின் முழு பீச்சர்கள், விலை, டிஸ்கவுண்ட் மற்றும் விற்பனை விவரங்களை இப்போது பார்க்கலாம்.

55 இன்ச் கோடாக் டிவி அம்சங்கள் (55 inch KODAK TV Specifications): இதுவொரு 7எக்ஸ்ப்ரோ சீரிஸ் (7XPro Series) மாடலாகும். இந்த டிவியில் 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) 4K அல்ட்ரா எச்டி எல்இடி டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர்10 பிளஸ், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது.

பொசுக்குனு ஆர்டர்.. ரூ.26000 பட்ஜெட்ல 55 இன்ச் 4K டிவி.. 40W ஆடியோ!

குரோம்காஸ்ட், ஸ்ட்ரீம் 4K சப்போர்ட் வருகிறது. 40W ஆடியோ அவுட்புட் கொண்ட 2 பாக்ஸ் டைப் ஸ்பீக்கர்கள் வருகின்றன. 6 சவுண்ட் மோட்கள் உள்ளன. ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ் மற்றும் ஆர்ம் கோர்டெக்ஸ் ஏ53 சிப்செட் வருகிறது. 2 ஜிபி ரேம் + 8 ஜிபி மெமரி சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர் பயன்படுத்தலாம்.

ஓடிடி ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். கூகுள் அசிஸ்டன்ட் சப்போர்ட் உள்ளது. ஏர்பிளே, கன்ட்ரோல் ஸ்மார்ட் ஹோம் பீச்சர்கள் வருகின்றன. டூயல் பேண்ட் வை-பை, ப்ளூடூத், யுஎஸ்பி மற்றும் எச்டிஎம்ஐ கனெக்டிவிட்டி வருகிறது. ஆடியோ ஏஆர்சி சப்போர்ட் உள்ளது. பெசல்-லெஸ் டிசைன் கொண்டிருக்கிறது.

இந்த 55 இன்ச் கோடாக் டிவியின் விலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.27,999ஆக இருக்கிறது. இருப்பினும், ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.1,500 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, இந்த கோடாக் டிவியை வெறும் ரூ.26,499 பட்ஜெட்டில் வாங்கலாம். இதைவிட கம்மியான பட்ஜெட்டில் மற்றொரு 55 இன்ச் 4K டிவி இருக்கிறது.

55 இன்ச் ஐஃபால்கான் டிவி அம்சங்கள் (55 inch iFFALCON TV Specifications): இதுவொரு யு62 சீரிஸ் மாடல் டிவியாகும். 2022 கூகுள் டிவி வெர்ஷனாகும். இந்த டிவியிலும் 55 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) அல்ட்ரா எச்டி 4K ரெசொலூஷன் கொண்ட டிஸ்பிளே வருகிறது. 270 நிட்ஸ் பிரைட்னஸ், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. எச்டிஆர்10 கொண்டிருக்கிறது.

பொசுக்குனு ஆர்டர்.. ரூ.26000 பட்ஜெட்ல 55 இன்ச் 4K டிவி.. 40W ஆடியோ!

24W ஆடியோ அவுட்புட் மற்றும் டால்பி ஆடியோ சப்போர்ட கொண்டுள்ளது. 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி வருகிறது. கூகுள் டிவி ஓஎஸ் வருகிறது. ஆகவே, குரோம்காஸ்ட், கூகுள் பிளே, கூகுள் போட்டோஸ், ஹே கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் கூகுள் கிஸ்ட் சப்போர்ட் வருகிறது. எட்ஜ்லெஸ் டிசைன் கொண்டிருக்கிறது.

இந்த 55 இன்ச் ஐஃபால்கான் டிவியின் விலை ரூ.26,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.1,500 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த டிவியை ரூ.25,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். இதில் எந்த மாடல் டிவியின் பீச்சர்கள் உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறதோ அதை தேர்ந்தெடுங்கள்.

Best Mobiles in India

English summary
55 inch KODAK 4K Android TV Sale With 40 Percent Discount in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X