Home
Gadgets

ஆபர்னா இப்படி இருக்கணும்.. 55% டிஸ்கவுண்ட்.. ரூ.22999 க்கு 55-இன்ச் Google TV.. 20W ஸ்பீக்கர், டால்பி ஆடியோ!

பல வகையான ஸ்மார்ட் டிவிகளின் விலைகள் சரிந்து விட்டாலும் கூட.. உங்கள் பட்ஜெட்டின் அளவுக்கு அவைகள் இறங்கி வரசிலை என்றால்.. ஒருவேளை நீங்கள் 55-இன்ச் கூகுள் ஸ்மார்ட் டிவி மாடலை வாங்க வேண்டும் என்கிற யோசனையில் இருந்தால்.. உங்கள் பட்ஜெட் ரூ.25,000 என்றால்.. நேராக பிளிப்கார்ட் வலைத்தளத்திற்கு செல்லவும்.

ஏனென்றால் பிளிப்கார்ட் வலைதளத்தில் தற்போது 55-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலொன்று 55% நேரடி தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. அது கூகா (Coocaa) நிறுவனத்தின் ஒய்74 பிளஸ் 55-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (Y74 Plus 55 inch Ultra HD 4K LED Smart Google TV) மாடல் ஆகும்.

55% டிஸ்கவுண்ட்.. ரூ.22999 க்கு 55-இன்ச் Google TV.. 20W ஸ்பீக்கர்!

டால்பி ஆடியோ உடனான 20W சவுண்ட் அவுட்புட் உடன் வரும் இந்த கூகா 55-இன்ச் ஸ்மார்ட்போன் ஆனது HDR10 & HLG ஆதரவு மற்றும் கண் பாதுகாப்பு தொழில்நுட்பதையும் கூட கொண்டுள்ளது. 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஸ்க்ரீன் உடன் வரும் இந்த மாடல் பில்ட்-இன் வைஃபை (Built in WiFi) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) ஆதரவையும் கொண்டுள்ளது.

என்ன விலை? கூகா ஒய்74 பிளஸ் 55-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடலின் எம்ஆர்பி விலை ரூ.54,999 ஆகும். ஆனால் தற்போது பிளிப்கார்ட்டில் 55% நேரடி தள்ளுபடியின் கீழ், அதாவது ரூ.30,000 விலை குறைப்பின் கீழ் ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது.

கூடுதலாக பிளிப்கார்ட் ஆக்சிஸ் மற்றும் பிளிப்கார்ட் எஸ்பிஐ கிரெடிட் கார்டு சலுகையாக ரூ.2000 கேஷ்பேக் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூகா ஒய்74 பிளஸ் 55-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடலின் பைனல் ஆபர் ப்ரைஸ்-ஐ ரூ.22,999 க்கு கொண்டு வர முடியும்

65-இன்ச் வாங்கனுமா? ஒருவேளை நீங்கள் 55-இன்ச் மாடலுக்கு பதிலாக 65-இன்ச் டிவி மாடலை வாங்க விரும்பினால். அதே பிளிப்கார்ட்டில் 65-இன்ச் கூகுள் ஸ்மார்ட் டிவி மாடல் ஒன்றும் ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. ஆனால் உங்கள் பட்ஜெட் ரூ.40000 ஆக இருக்க வேண்டும்.

எந்த மாடல்? அது டால்பி ஆடியோ (Dolby Audio) மற்றும் 30வாட் டவுன்ஃபயரிங் ஸ்பீக்கர் (30W downfiring speaker) உடன் வரும் ரியல்மி 65-இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (Realme 65 inch Ultra HD 4K LED Smart Google TV 2025 Edition) ஆகும்.

தற்போது இந்த 65-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலானது, அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.80,199 க்கு பதிலாக ரூ.37,700 நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.42,499 க்கு வாங்க கிடைக்கிறது. கூடுதலாக ரூ.2875 பேங்க் கிரெடிட் கார்டு கேஷ்பேக் ஆபரும் கிடைக்கிறது. இதன்கீழ் இறுதி விலையை ரூ.40000 க்கும் குறைவாக கொண்டுவர முடியும்.

இந்த ரியல்மி 65-இன்ச் டிவியின் முக்கிய அம்சங்கள்: இது 60 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் உடனான 65 இன்ச் எல்இடி டிஸ்பிளே, 2 ஸ்பீக்கர்கள், 30 வாட் ஸ்பீக்கர் அவுட்புட், கூகுள் டிவி ஓஎஸ், 2ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ், 3 எச்டிஎம்ஐ போர்ட்கள், 2 யுஎஸ்பி போர்ட்கள், பில்ட்-இன் வைஃபை மற்றும் ப்ளூடூத் ஆதரவு ஆகியவைகளை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
55 inch Coocaa Smart Google TV gets 55 Percent Discount Selling At Offer Price Rs 22999 in Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X