Home
Gadgets

ப்பா.. 65% டிஸ்கவுண்ட்டில் 55-இன்ச் Google ஸ்மார்ட் டிவி.. பழைய TV-க்கு டாட்டா காட்டும் டால்பி ஆடியோ!

வரப்போகும் பொங்கலுக்கு புதுசா ஒரு 55 இன்ச் டிவி வாங்க வேண்டுமென்று பிளான் பண்ணாலும் சரி.. இல்ல ஏற்கனவே வந்துவிட்ட 2026 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கு பட்ஜெட் விலையில் ஒரு கூகுள் ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டுமென்று பிளான் இருந்தாலும் சரி!

நீங்கள் நேராக செல்ல வேண்டியது பிளிப்கார்ட் வலைத்தளத்திற்கு தான். ஏனென்றால் பெஸ்டன் நிறுவனத்தின் 55 இன்ச் க்யூஎல்இடி அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (BESTON 55 inch QLED Ultra HD 4K Smart Google TV 2025 Edition - BS55UGTV) ஆனது 65% டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கிறது.

ப்பா.. 65% டிஸ்கவுண்ட்டில் 55-இன்ச் Google ஸ்மார்ட் டிவி!

மேற்குறிப்பிட்ட 55-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலின் எம்ஆர்பி ரூ.59,999 ஆகும். இருப்பினும் தற்போது இது 65% நேரடி தள்ளுபடியை பெற்று (அதாவது எந்த பேங்க் கார்டு சலுகையும் இல்லாமல்) நேரடியாகவே ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது. இன்னும் சரியாக சொன்னால் ரூ.39,000 விலை குறைப்பை பெற்றுள்ளது.

55 இன்ச் மாடலுக்கு அதிகம் செலவு செய்ய விரும்பாத, அதே சமயம் பெரிய பிராண்ட் பற்றி கவலைப்படாத வாடிக்கையாளர்களுக்கு இதுவொரு பெஸ்ட் ஆப்ஷன் ஆக இருக்கும். ஏனென்றால் ரூ.20,000 பட்ஜெட்டில் வாங்க கிடைத்தாலும் இது 4கே அல்ட்ரா எச்டி 3840 x 2160 பிக்சல்கள்
ரெசல்யூஷனை கொண்டுள்ளது.

அதாவது இது புல் எச்டி-ஐ விட நான்கு மடங்கு அதிக விவரங்களை வழங்கும். இது தெளிவான காட்சிகள், ரிச் ஆன வண்ணங்கள் மற்றும் அதிக கிளாரிட்டியை வழங்கும்; நல்ல வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை உறுதி செய்யும். கூடவே இந்த ஸ்மார்ட் டிவி டால்பி ஆடியோ ஆதரவையும் கொண்டுள்ளது. இது மேம்பட்ட தெளிவு, சமநிலையான ஒலி அளவுகள் மற்றும் டைனமிக் சரவுண்ட் ஒலியுடன் உயர்தர சவுண்ட் குவாலிட்டியை வழங்குகிறது

மேலும் இந்த ஸ்மார்ட் டிவி குவாண்டம் பிக்சல் கலரையும் (Quantum Pixel Colour) கொண்டுள்ளது. இது விதிவிலக்கான தெளிவு மற்றும் துல்லியமான வண்ணங்களை உருவாக்கும் குவாண்டம் பாயிண்ட்ஸ் மற்றும் சிறிய செமிகண்டெக்டர்களை பயன்படுத்தும் ஒரு மேம்பட்ட டிஸ்பிளே டெக்னாலஜி (advanced display technology) ஆகும்.

இந்த டிஸ்பிளே தொழில்நுட்பம் வண்ண துல்லியத்தை மேம்படுத்துகிறது, பிரகாசத்தை அதிகரிக்கிறது மற்றும் ஆற்றல் செயல்திறனை மேம்படுத்துகிறது, இது உயர் தெளிவுத்திறன் காட்சிகளுக்கு மிகவும் பொருத்தமானதாக அமைகிறது. மேலும் இந்த டிவியில் ஏஎல்எல்எம் (ALLM) என்கிற ஆட்டோ லோ லேடன்சி மோட் (Auto Low Latency Mode) அம்சமும் உள்ளது.

இது ஒரு டிவி அல்லது மானிட்டரை கேமிங் கன்சோல் அல்லது இணக்கமான டிவைஸ்-ஐ கண்டறியும்போது தானாகவே அதன் குறைந்தபட்ச லேன்டன்சி செட்டிங்ஸ்-க்கு மாற்றுகிறது. இது இன்புட் லேக்-ஐ குறைத்து, கைமுறையான சரிசெய்தல் எதுவும் தேவையில்லாமல் மென்மையான மற்றும் மிகவும் ரெஸ்பான்சிவ் ஆன கேமிங்கை வழங்கும்

ஒருவேளை நீங்கள் இன்னும் மலிவான இன்னும் சிறிய டிவி மாடலை வாங்க விரும்பினால்.. பிளிப்கார்ட் வலைத்தளத்தில் பெஸ்டன் 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2025 எடிஷன் (BESTON 32 inch HD Ready LED Smart Android TV 2025 Edition - BS32HD1): இது எம்ஆர்பி விலையான ரூ.17,999 க்கு பதிலாக 58% டிஸ்கவுண்ட் பெற்று ரூ.7,499 க்கு வாங்க கிடைக்கிறது.

இதேபோல ஏசர் அல்ட்ரா ஐ சீரீஸ் 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (Acer Ultra I Series 32 inch HD Ready LED Smart Google TV 2025 Edition - AR32HDJGU2841BD): இது எம்ஆர்பி விலையான ரூ.21,999 க்கு பதிலாக 56% டிஸ்கவுண்ட் பெற்று ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கிறது.

கடைசியாக இன்பினிக்ஸ் 32 இன்ச் க்யூஎல்இடி எச்டி ரெட்மி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷன் (Infinix 32 inch QLED HD Ready Smart Google TV 2025 Edition): இது பெசல்லெஸ் டிசைன், எபிக் எஞ்சின், கூகுள் அஸிஸ்டென்ட், பில்ட்-இன் க்ரோம்காஸ்ட், டூயல் பேண்ட் வைஃபை ஆகிய அம்சங்களுடன் வருகிறது. இது எம்ஆர்பி விலையான ரூ.16,999 க்கு பதிலாக 47% டிஸ்கவுண்ட் பெற்று ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
55 inch BESTON QLED Ultra HD 4K Smart Google TV gets 65 Percentage Discount in Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X