Home
Gadgets

இந்த TV-ஐ வாங்கிட்டா.. தியேட்டர் பக்கமே போக வேணாம்.. 55-இன்ச், 65-இன்ச் டிஸ்பிளே, 50W ஸ்பீக்கர்னு அதிர விடுது!

இதென்ன ஸ்மார்ட் டிவியா இல்ல.. ஒரு சின்ன தியேட்டரா என்று கேட்க தூண்டும்படியான ஒரு ஸ்மார்ட் டிவி இந்திய சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இது எந்த நிறுவனத்தின் டிவி? என்னென்ன அளவுகளில் என்ன விலைக்கு வாங்க கிடைக்கிறது? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

நாம் இங்கே பேசுவது ஹேயர் நிறுவனத்தின் சி11 4கே 120ஹெர்ட்ஸ் ஓஎல்இடி டிவி (Haier C11 4K 120Hz OLED TV) மாடலை பற்றித்தான். இந்த ஸ்மார்ட் டிவி ஆல்-ஸ்கிரீன் டிசைன் உடன் வருகிறது அதாவது பெஸல்கள் இல்லாமல் மிகவும் மெலிதான வடிவமைப்பை பெற்றுள்ளது. கூடவே இது ஸ்டைலான பிரீமியம் மெட்டல் ஸ்டாண்ட்டையும் கொண்டுள்ளது.

இந்த TV-ஐ வாங்கிட்டா.. தியேட்டர் பக்கமே போக வேணாம்! என்ன மாடல்?

அதாவது இதை உங்கள் வீட்டின் டிவி யூனிட்டிலும் வைக்கலாம் அல்லது வீட்டின் சுவரிலும் ஏற்றலாம் அல்லது எந்தவொரு மேற்பரப்பிலும் வைத்து இடத்தை மிச்சப்படுத்தலாம். 65-இன்ச் மற்றும் 55-இன்ச் என்கிற இரண்டு அளவுகளில் வரும் இந்த ஸ்மார்ட் டிவிகள் 120ஹெர்ட்ஸ் ஓஎல்இடி பேனலுடன் வருகிறது.

ஹேயர் சி11 4கே 120ஹெர்ட்ஸ் ஓஎல்இடி ஸ்மார்ட் டிவியின் டிஸ்பிளேவானது சிறந்த பிக்சர் குவாலிட்டியை (Picture Quality) வழங்குகிறது, கூடவே ட்ரூ பிளாக்ஸ் (True Blacks), துடிப்பான கலர்ஸ் (Vibrant colors) மற்றும் எல்லையற்ற காண்ட்ராஸ்ட்டை (Infinite contrast) உறுதி செய்கிறது.

வைட் கலர் கேமட் (Wide Color Gamut), ஹை கான்ட்ராஸ்ட் ரேஷியோ (High contrast ratio) மற்றும் பெர்ஃபெக்ட் பிளாக் டிஸ்ப்ளே (Perfect black display) ஆகிய அனைத்தும் சேர்ந்து இந்த டிவியின் வியூயிங் எக்ஸ்பீரியன்ஸை (Viewing Experience) "வேற லெவலுக்கு" கொண்டு செல்கிறது.

இந்த TV-ஐ வாங்கிட்டா.. தியேட்டர் பக்கமே போக வேணாம்! என்ன மாடல்?

மேலும் ஹேயர் சி11 4கே 120ஹெர்ட்ஸ் ஓஎல்இடி ஸ்மார்ட் டிவியின் ஓஎல்இடி பேனலின் ரிச் கலர்ஸ் (Rich Colors) ஆனது 4கே ரெசல்யூஷனின் ஷார்ப்னஸ் (4K Resolution Sharpness) உடன் ஒருங்கிணைந்து, எச்டிஆர் 10 (HDR 10) மற்றும் டால்பி விஷன் ஐக்யூ (Dolby Vision IQ) உடன் சேர்ந்து சினிமா தரத்திலான அனுபவத்தை வழங்குகிறது.

இது கூகுள் டிவி (Google TV) மூலம் இயங்குகிறது. ஆக வாய்ஸ் கண்ட்ரோல்கள் (Voice Contorls) மூலம் உங்களால் இந்த ஸ்மார்ட் டிவியை கட்டுப்படுத்த முடியும் மற்றும் டிவியில் உள்ள பல்வேறு வகையான பொழுதுபோக்கு கன்டென்ட்களை ஆராய முடியும். மேலும் இந்த ஸ்மார்ட் டிவி வைஃபை (Wi-Fi), க்ரோம்காஸ்ட் (Chromecast), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) மற்றும் யூஎஸ்பி 2.0 (USB 2.0) ஆகியவற்றுடனும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

கேமர்களுக்கான சிறப்பம்சங்களை பொறுத்தவரை, ஹேயர் சி11 4கே 120ஹெர்ட்ஸ் ஓஎல்இடி ஸ்மார்ட் டிவியில் மோஷன் காம்பென்சேஷன் டெக்னாலஜி (Motion Compensation Technology), வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (Variable refresh rate), டபுள்-லைன் கேட் (Double-Line Gate), விஆர்ஆர் / ஏஎல்எல்எம் கேமிங் மோட் (VRR/ALLM Gaming mode) மற்றும் எச்டிஎம்ஐ 2.1 (HDMI 2.1) ஆகியவற்றை கொண்டுள்ளது.

பில்ட்-இன் சவுண்ட் பார் (Built-in Sound Bar) மற்றும் 50வாட் ஹர்மன் கர்டான் ஸ்பீக்கர்களுடன் (50W Harman Kardon speakers), ஹேயர் சி11 4கே 120ஹெர்ட்ஸ் ஓஎல்இடி ஸ்மார்ட் டிவியானது சிறந்த ஆடியோ அவுட்புட்டையும் வழங்குகிறது.மேலும் இது தெளிவான உரையாடல், டைனமிக் சவுண்ட் (Dynamic Sound) மற்றும் ஆழமான பாஸ் (Deep Bass) ஆகியவற்றையும் உறுதி செய்கிறது. இதில் உள்ள டால்பி அட்மோஸ் (Dolby Atmos) அதிவேக ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.

இந்த TV-ஐ வாங்கிட்டா.. தியேட்டர் பக்கமே போக வேணாம்! என்ன மாடல்?

ஹேயர் சி11 ஓஎல்இடி 4கே டிவியின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்த லேட்டஸ்ட் ஹேயர் ஸ்மார்ட் டிவியின் 55-இன்ச் மாடல் ரூ.1,58,990 க்கும், 65-இன்ச் மாடல் ரூ.2,15,990 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்விரு மாடல்களுமே ஹேயர் இ-காமர்ஸ் ஸ்டோர் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பிற ரீடெயில் ஸ்டோர்களில் ஏற்கனவே வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
55 inch and 65 inch Haier C11 4K 120Hz OLED Google Smart TV Launched in India Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X