Home
Gadgets

செஞ்சிட்டான் SONY.. தியேட்டருக்கு குட்பை சொல்லும் 85-இன்ச் TV.. தெறிக்கும் DTS:X சவுண்ட்.. என்ன விலை?

சோனி (SONY) நிறுவனம், பிராவியா 3 சீரீஸின் ஒரு பகுதியாக, பிராவியா 3II ஸ்மார்ட் டிவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடல்கள், சோனியின் எக்ஸ்ஆர் (XR) பிராசஸரை மலிவு விலை பிரிவுக்கு கொண்டு வருவதுடன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டில் 4கே ரெசல்யூஷனையும் ஆதரிக்கின்றன.

மேலும் இந்த டிவிகள் டால்பி விஷன், டால்பி அட்மாஸ், கூகுள் டிவி மற்றும் வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட், ஆட்டோ லோ லேட்டன்சி மோட் போன்ற கேமிங் அம்சங்களையும் வழங்குகின்றன. சோனி நிறுவனம், பிராவியா 3II-ஐ பல்வேறு ஸ்க்ரீன் சைஸ்களில் அறிமுகம் செய்துள்ளது. அவைகளில், இந்த ஆண்டின் பிற்பகுதியில் வரும் என எதிர்பார்க்கப்படும் 100-இன்ச் மாடலும் அடங்கும்.

செஞ்சிட்டான் SONY.. 85-இன்ச் TV அறிமுகம்.. தெறிக்கும் DTS:X சவுண்ட்!

இந்தியாவில் சோனி பிராவியா 3II விலை மற்றும் விற்பனை: இந்தியாவில் சோனி பிராவியா 3II ஸ்மார்ட் டிவியின் 55-இன்ச் மாடல் ரூ.99,990 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 65-இன்ச் மாடலின் விலை ரூ.1,24,990 ஆகவும், 75-இன்ச் மாடல் ரூ.1,79,990 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடைசியாக உள்ள 85-இன்ச் மாடலின் விலை ரூ.3,05,990 ஆகும் என்று சோனி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

55-இன்ச், 65-இன்ச் மற்றும் 75-இன்ச் மாடல்கள் 2026 மே மாதம் முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்றும், 85-இன்ச் மாடல் 2026 ஆகஸ்ட் மாதம் முதல் விற்பனைக்கு வரும் என்றும் சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது. பிராவியா 3II சீரிஸ், சோனி சென்டர் மற்றும் சோனி எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோர்கள், ஷாப்அட்எஸ்சி இணையதளம், முன்னணி எலக்ட்ரானிக்ஸ் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் முக்கிய இ-காமர்ஸ் தளங்கள் மூலம் வாங்க கிடைக்கும்.

சோனி பிராவியா 3II ஸ்மார்ட் டிவியின் முக்கிய அம்சங்கள்: முன்னரே குறிப்பிட்டபடி சோனி பிராவியா 3II சீரிஸ் 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச் மற்றும் 85-இன்ச் ஸ்க்ரீன் சைஸ்களில் வருகிறது. இது 120Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்களுடன் கூடிய 4கே பேனல்களை பயன்படுத்துகிறது மற்றும் சோனியின் எக்ஸ்ஆர பிராசசரால் இயக்கப்படுகிறது. இந்த டிவியில் வண்ண துல்லியம், தெளிவு மற்றும் மோஷன் ஹேண்ட்லிங்கை மேம்படுத்துவதற்காக எக்ஸ்ஆர் ட்ரைலுமினஸ் ப்ரோ, எக்ஸ்ஆர் கிளியர் இமேஜ் மற்றும் மோஷன்ப்ளோஎக்ஸ்ஆர் ஆகிய அம்சங்களும் உள்ளன.

ஆடியோ மற்றும் வீடியோவை பொறுத்தவரை, பிராவியா 3II ஆனது டால்பி விஷன், டால்பி அட்மாஸ் மற்றும் டிடிஎஸ்:எக்ஸ் ஆகியவற்றை ஆதரிக்கிறது. உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்கள் தெளிவான உரையாடலை வழங்கவும், சிதைவை குறைக்கும் படியும் ட்யூன் செய்யப்பட்டுள்ளதாக சோனி கூறுகிறது. கேமர்களுக்கு 120fps வேகத்தில் 4கே, வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஆட்டோ லோ லேட்டன்சி மோட் போன்ற HDMI 2.1 அம்சங்களுக்கான ஆதரவு கிடைக்கிறது.

இந்த டிவியில் பிரத்யேக கேம் மெனு, டால்பி விஷன் கேமிங் மற்றும் பிஎஸ் ரிமோட் ப்ளே ஆதரவும் உள்ளது. சோனி நிறுவனம், பிராவியா 3II ஸ்மார்ட் டிவிகள் ஆனது பிளேஸ்டேஷன் 5-க்காக மேம்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதில் நான்கு HDMI 2.1 போர்ட்டுகள் உள்ளன என்றும் கூறுகிறது. மேலும் இந்த டிவி - கூகுள் டிவியில் இயங்குகிறது. இது 400,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுடன், ஆயிரக்கணக்கான ஆப்கள் மற்றும் கேம்களுக்கான அணுகலை வழங்குகிறது.

மேலும் இது கூகுள் அசிஸ்டன்ட் மூலம் கைகள் பயன்படுத்த தேவையில்லாத வாய்ஸ் சேர்ச்சை ஆதரிக்கிறது மற்றும் கூகுள் காஸ்ட், ஏர்பிளே 2, ஆப்பிள் ஹோம் கிட், மற்றும் அமேசான் அலெக்ஸா வசதி கொண்ட டிவைஸ்களுடன் இணக்கமாக செயல்படுகிறது. எதிர்கால சாஃப்ட்வேர் அப்டேட் மூலம், 2026-ஆம் ஆண்டின் அனைத்து பிராவியா மாடல்களிலும் கூகுள் ஜெமினி ஆதரவு வரும் என்பதையும் சோனி உறுதிப்படுத்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
55 inch 65 inch 75 inch 85 inch Sony Bravia 3II Smart TV Launched in India Price Features Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X