ஆர்டர் தூள் பறக்க போகுது.. 16ஜிபி மெமரி.. டால்பி அட்மாஸ்.. கூகுள் டிவி OS.. ஆஃபரில் Xiaomi 4கே டிவி..
பிளிப்கார்ட் தளத்தில் சியோமி நிறுவனத்தின் 43 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி டால்பி விஷன், டால்பி அட்மாஸ், பெசல் லெஸ் டிசைன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த சியோமி டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் L43M8-5XIN என்ற மாடல் நம்பர் கொண்ட சியோமி எம்ஐ எக்ஸ் ப்ரோ 43 இன்ச் 4கே ஸமார்ட் கூகுள் டிவி (XIAOMI Mi X Pro 43 inch Ultra HD 4K LED Smart Google TV) மாடலுக்கு 54 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது.

சியோமி எம்ஐ எக்ஸ் ப்ரோ 43 இன்ச் 4கே டிவி அம்சங்கள் (Xiaomi Mi X Pro 43 inch 4K Smart Google TV Specifications): 4கே எல்இடி அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வசதியுடன் இந்த சியோமி எம்ஐ எக்ஸ் ப்ரோ 4கே ஸமார்ட் கூகுள் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், டால்பி விஷன் ஐக்யூ (Dolby Vision IQ), எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+), எச்எல்ஜி (HLG), 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle),60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
94 சதவீதம் டிசிஐ-பி3 கலர் காமட், ஏஎல்எல்எம் (ALLM), எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology), விவிட் பிக்சர் என்ஜின் 2 (Vivid Picture Engine 2)உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த சியோமி ஸ்மார்ட் டிவியில் உள்ளது.
மாலி ஜி52 எம்பி3 ஜிபியு (Mali G52 MP2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவுடன் இந்த 43 இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவியை நம்பி வாங்கலாம். அதாவது இந்த ஸ்மார்ட் டிவி ஆனது மேம்பட்ட கேமிங் அனுபவத்தை கொடுக்கும். அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதியும் இந்த சியோமி ஸ்மார்ட் டிவியில் உள்ளது.
பேட்ச்வால் (PatchWall) மற்றும் கூகுள் டிவி ஒஎஸ் (Google TV OS) மூலம்சியோமி எம்ஐ எக்ஸ் ப்ரோ 43 இன்ச் 4கே ஸமார்ட் கூகுள் டிவி இயங்குகிறது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். மேலும் யூடியூப் (YouTube),நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.
வைஃபை, ப்ளுடூத், ஏர்பிளே சப்போர்ட், எச்டிஎம்ஐ போரட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சியோமி எம்ஐ எக்ஸ் ப்ரோ 4கே ஸமார்ட் கூகுள் டிவியில் உள்ளது. அதேபோல் குரோம் காஸ்ட் (Chromecast) ஆதரவுடன் இந்த அசத்தலான டிவி வெளிவந்தது. மேலும் ஸ்மார்ட் ரிமோட் ஆதரவும் இந்த டிவியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட் 30W ஸ்பீக்கர்கள் இந்த சியோமி எம்ஐ எக்ஸ் ப்ரோ 43 இன்ச் 4கே ஸமார்ட் கூகுள் டிவியில் உள்ளது. இதுதவிர பல்வே சவுண்ட் மோட்கள் இந்த டிவியில் உள்ளது. அதேபோல் இந்த டிவி பெசல் லெஸ் டிசைன் கொண்டுள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த சியோமி எம்ஐ எக்ஸ் ப்ரோ 4கே ஸமார்ட் கூகுள் டிவி வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








