சிட்டாக பறக்கும் ஆர்டர்.. டால்பி அட்மோஸ்.. 24W ஸ்பீக்கர்கள்.. ஆஃபரில் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி..
ஹைசென்ஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஸ்மார்ட் டிவிகள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவருகின்றன. இந்நிலையில் அமேசானில் ஹைசென்ஸ் நிறுவனத்தின் 43-இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது அமேசான் தளத்தில் ஹைசென்ஸ் 43-இன்ச் பெசல்லெஸ் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி (Hisense Bezelless Series 4K Ultra HD Smart LED Google TV 43A6H) மாடலுக்கு தான் 51 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.21,999 விலையில் வாங்க முடியும்.

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை ஹைசென்ஸ் 43-இன்ச் டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும். எனவே இந்த தரமான 4கே அல்ட்ரா ஸ்மார்ட் டிவியை மிகவும் குறைவான விலையில் வாங்கிவிட முடியும். மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஹைசென்ஸ் 43-இன்ச் பெசல்லெஸ் சீரிஸ் டிவி அம்சங்கள்: 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே, 3840x2160 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் (Dolby Vision), 178 டிகிரி வியூ ஆங்கிள் (178 Degree wide viewing angle) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஹைசென்ஸ் டிவி. மேலும் இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் டிவி இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஹைசென்ஸ் 43-இன்ச் பெசல்லெஸ் சீரிஸ் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியில் அனைத்து ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த டிவியில் உள்ளன.
குறிப்பாக டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி டிஜிட்டல்ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உடன் இந்த ஹைசென்ஸ் 43-இன்ச் பெசல்லெஸ் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும். அதேபோல் இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹைசென்ஸ் நிறுவனம்.
நெட்ஃபிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஹங்காமா, ஜியோசினிமா, ஜீ5, ஈரோஸ் நவ் உள்ளிட்ட பல்வேறு ஓடிடி ஆப்ஸ்களை இந்த ஹைசென்ஸ் டிவியில் பயன்படுத்த முடியும் என நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இந்த டிவி 10 பிட் பேனல், டால்பி விஷன் டிகோடிங், எச்டிஆர், எச்எல்ஜி, 1 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன.

அதேபோல் வாய்ஸ்ட் கண்ட்ரோல் ஆதரவுடன் கூடிய ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் இதற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெட்ஃபிக்ஸ், யூடியூப், பிரைம் வீடியோ போன்ற ஷார்ட்கட் பட்டன்கள் இந்த ரிமோட்டில் உள்ளன. மேலும் கேமிங் பயனர்களுக்குத் தகுந்தபடி பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த டிவியில் கொடுக்கப்பட்டுள்ளன.
செட் டாப் பாக்ஸ், ப்ளூ ரே பிளேயர்கள், கேமிங் கன்சோலை இணைக்க 3 எச்டிஎம்ஐ போர்ட் உள்ளன. இதுதவிர இரண்டு யுஎஸ்பி போர்ட்கள், டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.1 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஹைசென்ஸ் 43-இன்ச் பெசல்லெஸ் சீரிஸ் 4கே அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் எல்இடி கூகுள் டிவி.


Click it and Unblock the Notifications








