பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.20,999 போதும்.. 43 இன்ச் QLED டிஸ்பிளே.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?
கியூஎல்இடி டிவி பிரியர்களை தட்டித் தூக்கும்படியான டிஸ்கவுண்ட் விலையில் 43 இன்ச் ரியல்மி டெக்லைஃப் சினிசோனிக் கியூஎல்இடி டிவி (Realme TechLife CineSonic QLED TV) இப்போது கிடைக்கிறது. பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) கிடைக்கும் இந்த 43 இன்ச் கியூஎல்இடி டிவியின் பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
வெறும் ரூ.15000 பட்ஜெட்டிலும் 43 இன்ச் டிவிகள் விற்பனைக்கு கிடைக்கின்றன. ஆனால், அந்த டிவிகளில் ஓஎஸ், ஆடியோ, டிஸ்பிளேவில் பீச்சர்கள் எதிர்பார்க்கும்படி இருக்காது. ஆகவே, குறைந்தது ரூ.25,000 பட்ஜெட்டில் கிடைக்கும் டிவிகளில் மட்டுமே பீச்சர்கள் சொல்லிக்கொள்ளும்படி இருக்கும். ஆனால், இந்த ரியல்மி டிவி பிரீமியமான பீச்சர்களை பேக் செய்துள்ளது.

ரியல்மி டெக்லைஃப் சினிசோனிக் கியூஎல்இடி டிவி அம்சங்கள் (Realme TechLife CineSonic QLED TV Specifications): இந்த ரியல்மி டிவியில் 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) கியூஎல்இடி டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 4K ரெசொலூஷன் மற்றும் எச்டிஆர்10 (HDR10) பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், 1.07 பில்லியன் கலர் டெப்த் பேக் செய்துள்ளது.
இந்த பீச்சர்களுடன் பெசல்-லெஸ் டிசைன் (Bezel-less Design) வியூவிங் அனுபவம் பிரீமியம் அவுட்புட் கொடுக்கும். அதேபோல கலர் அக்கியூரசி பட்டையை கிளப்பும்படி எதிர்பார்க்கலாம். மேலும், வழக்கமாக கிடைக்கும் ஸ்போர்ட்ஸ், மூவி, கேமிங் போன்ற பிக்சர் மோட்கள் கிடைக்கின்றன. இந்த டிஸ்பிளேவுக்கு ஏற்ப அவுட்புட் கொடுக்கும்படி ஆடியோ சிஸ்டம் இருக்கிறது.
ஆகவே, டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் டால்பி டிஜிட்டல் (Dolby Digital) சப்போர்ட் கொண்ட 40W ஸ்பீக்கர்கள் வருகின்றன. இது 2 பாக்ஸ் டைப் பாடியில் பேக் செய்யப்பட்டுள்ளன. ஸ்டீரியோ அவுட்புட் கொடுப்பதற்காக சினிமாடிக் சவுண்ட் சவுண்ட் (Cinematic Surround Sound) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. டால்பி விஷன் (Dolby Vision) பேக் செய்யப்பட்டுள்ளது.
ஆடியோவில் ஸ்டான்டர்ட் (Standard), மூவி (Movie), ஸ்போர்ட்ஸ் (Sport), மியூசிக் (Music) மற்றும் யூசர் (User) ஆகிய மோட்கள் கிடைக்கின்றன. இந்த ரியல்மி டெக்லைஃப் சினிசோனிக் கியூஎல்இடி டிவியில் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி வருகிறது. ஆகவே, பர்ஃபாமென்ஸ் மற்றும் ஸ்டோரேஜ் பக்காவாக இருக்கும். குவாட் கோர் (Qual Core) சிப்செட்டை கொடுக்கிறது.
கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மற்றும் மீடியாடெக் (MediaTek) ப்ராசஸர் கிடைக்கிறது. மேலும், பில்ட்-இன் கிராபிக்ஸ் யூனிட் உள்ளது. ஆகவே, கேமிங் அனுபவம் மீடியம் அவுட்புட் கொடுக்கும். இந்த கூகுள் ஓஎஸ் மூலம் பில்ட்-இன் குரோம்காஸ்ட் (Built-in Chromecast) மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் கிடைக்கிறது. அதேபோல ஆப்களும் வருகிறது.
இதில் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி ஆப்கள் முதல் டிஸ்பிளே ஷேரிங், ஆடியோ ஷேரிங் ஆப்களின் சப்போர்ட்டும் கிடைக்கிறது. மூன்று எச்டிஎம்ஐ போர்ட்கள், இரண்டு யுஎஸ்பி போர்ட்கள் மற்றும் மினி ஏவி மற்றும் ஆப்டிகல் கனெக்டிவிட்டி சப்போர்ட் கிடைக்கிறது. எல்ஏஎன் கனெக்டிவிட்டி, வை-பை மற்றும் ப்ளூடூத் சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த ரியல்மி டெக்லைஃப் சினிசோனிக் கியூஎல்இடி டிவியின் விலையானது 54 சதவீத டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.20,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலையில் வாங்க உங்களிடம் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் கேட்கப்படாது. நேரடியாக இந்த விலையிலேயே ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த ரியல்மி டிவிக்கு 1 வருட வாரண்டி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








