பொளக்குது விற்பனை.. வெறும் ரூ.18999 போதும்.. 200 இன்ச் புரொஜெக்டர்.. வயர்லெஸ் மிரரிங்.. டால்பி ஆடியோ!
32 இன்ச் டிவி வாங்கும் பட்ஜெட்டில் 200 இன்ச் எல்இடி புரொஜெக்டர் கிடைத்தால் எப்படி இருக்கும்? அதிலும் டால்பி ஆடியோ, 1080p ரெசொலூஷன், வயர்லெஸ் மிரரிங் சப்போர்ட் போன்ற பக்கா பிரீமியம் பீச்சர்கள் வந்தால், சொல்லவா வேண்டும், ஆர்டர் போட வேண்டியாதுதான்.
டிவியில் வீடியோ பார்த்து சலித்து போன பிறகு பலருக்கு புரொஜெக்டர்கள் மீது ஆர்வம் ஏற்படும். அதே நேரத்தில் வீட்டில் மினி தியேட்டர் அனுபவத்தில் படம் பார்க்கவும் புரொஜெக்டர்கள் வாங்க பலருக்கும் ஆசை இருக்கும். ஆகவே, மார்கெட்டில் ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்கும் மலிவான புரொஜெக்டர்களை வாங்குவார்கள்.

மலிவான விலைக்கு கிடைப்பதால், அதன் குவாலிட்டியானது, கஸ்டர்மர்களுக்கு திருப்தி கொடுக்ககாது. சரி, பக்கா குவாலிட்டியான புரொஜெக்டர்கள் வாங்கலாம் என்று பார்த்தால், அதன் விலை கியூஎல்இடி டிவிகளுக்கு நிகராக அதிகமாக இருக்கும். ஆகவே, பட்ஜெட்டிலும், மீடியம் குவாலிட்டியிலும் கிடைக்கும் புரொஜெக்டர்கள் போதும் என்றால், இந்த மாடலை தேர்ந்தெடுங்கள்.
ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 18 புரொஜெக்டர் (Zebronics ZEB PixaPlay 18 LED Projector) பட்ஜெட்டிலும் பக்கா அவுட்புட் குவாலிட்டி கொண்டிருக்கிறது. டால்பி ஆடியோ, ரிமோட் கன்ட்ரோல், ஓடிடி ஆப், 8 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், வயர்லெஸ் மிரரிங் சப்போர்ட் கிடைப்பதால், மார்கெட்டில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 18 அம்சங்கள் (Zebronics ZEB PixaPlay 18 Specifications): இதுவொரு எல்இடி (LED) புரொஜெக்டர் மாடலாகும். 200 இன்ச் (1920 x 1080 பிக்சல்கள்) ஃபுல்எச்டி (FHD) ஸ்கீன் அவுட்புட் கொண்டிருக்கிறது. 1080p ரெசொலூஷன் மற்றும் 3800 லூமென்ஸ் பிரைட்னஸ் கொண்டிருக்கிறது.

எலக்ட்ரானிக் போகஸ் பீச்சர் (Electronic-focus Feature) சப்போர்ட் வருகிறது. 1 ஜிபி ரேம் + 8 ஜிபி மெமரி கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு வெர்ஷன் 9.0 (Andriod 9.0) மற்றும் குவாட் கோர் (Quad Core) சிப்செட் வருகிறது. ஆகவே, ஆப் சப்போர்ட் (App Support) கிடைக்கிறது. ஓடிடி ஆப்களை பயன்படுத்த முடியும். இதற்காக ரிமோட் கன்ட்ரோல் சப்போர்ட் வருகிறது.
இந்த புரொஜெக்டரில் டூயல் பேண்ட் வை-பை (Dual Band Wi-Fi), ப்ளூடூத் வி5.1 (Bluethooth V5.1) கனெக்டிவிட்டி வருகிறது. அதுமட்டுமல்லாமல், வயர்லெஸ் ஸ்கிரீன் மிரரிங் (Wireless Screen Mirroring) சப்போர்ட் வருவதால், மொபைல், லேப்டாப் டிவைஸ்களில் இருந்து எளிதாக கனெக்ட் செய்து பயன்படுத்த முடியும்.
மேலும், யுஎஸ்பி போர்ட் (USB Port), எச்டிஎம்ஐ போர்ட் (HDMI Port) மற்றும் ஏயுஎக்ஸ் அவுட் (AUX Out) வருகிறது. ஐஆர் ரிசீவர் கொண்டிருக்கிறது. ஆடியோவை பொறுத்தவரை இன்-பில்ட் ஸ்பீக்கர் (In-built Speaker) வருகிறது. அதோடு டால்பி ஆடியோ (Dolby Audio) சப்போர்ட் வருவதால், கிரிஸ்டர் கிளியர் அவுட்புட் எதிர்பார்க்கலாம். விவிட் இமேஜ் (Vivid Image) சப்போர்ட் உள்ளது.
இந்த ஜெப்ரானிக்ஸ் ஜெப் பிக்சாபிளே 18 புரொஜெக்டருக்கு 1 வருட வாரண்டி வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.19,999ஆக இருக்கிறது. இருப்பினும், பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனைக்கு வந்துள்ளது. பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.
ஆகவே, இந்த பிக்சாபிளே 18 புரொஜெக்டரை வெறும் ரூ.18,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். மினி தியேட்டர் அனுபவம் கொடுக்கும் பட்ஜெட் விலை புரொஜெக்டரை தேடிக் கொண்டிருக்கும் கஸ்டமர்களுக்கு இந்த மாடல் நல்ல ஆப்ஷனாக இருக்கும். இந்த புரொஜெக்டர் அறிமுகம் செய்யப்பட்டபோது, இதன் விலை ரூ. 21,999ஆக இருந்தது.


Click it and Unblock the Notifications