மொத்தமாக முடிச்சு விட்ட அமேசான்.. 200 இன்ச்.. ஆண்ட்ராய்டு OS.. ஆஃபரில் ஸ்மார்ட் புரொஜெக்டர்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் போர்ட்ரானிக்ஸ் பீம் 460 (Portronics Beem 460) புரொஜெக்டர் மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புரொஜெக்டர் ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone), ஆண்ட்ராய்டு இயங்குதளம், தரமான ஸ்பீக்கர்கள் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது போர்ட்ரானிக்ஸ் பீம் 460 மாடலுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அமேசான் சிறப்பு விற்பனையில் போர்ட்ரானிக்ஸ் பீம் 460 மாடலுக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட் வங்கி கார்டுகளை பயன்படுத்தி போர்ட்ரானிக்ஸ் பீம் 460 மாடலை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த புரொஜெக்டர் மாடலை ரூ.11999 விலையில் வாங்கிவிட முடியும்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 460 புரொஜெக்டர் அம்சங்கள் ( Portronics Beem 460 Specifications): எல்இடி (LED) சப்போர்ட் கொண்டுள்ளது இந்த புரொஜெக்டர் மாடல். அதேபோல் 1080p ஃபுல்எச்டி (FHD) ரெசல்யூஷன் மற்றும் 4000 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) ஆதரவு கொண்டுள்ளது இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டர் மாடல்.
மேம்பட்ட தரமான பிக்சர் குவாலிட்டி வழங்கும் இந்த பீம் 460 புரொஜெக்டர் மாடல். அதேபோல் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 புரொஜெக்டர் மாடலில் 30,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 16:9 அஸ்பெக்ட் ரேசியோ (Aspect Ratio) கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
போர்ட்ரானிக்ஸ் பீம் 460 புரொஜெக்டரில் 40 இன்ச் முதல் அதிகபட்சமாக 200 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். 200 இன்ச் டிஸ்பிளே அளவு கிடைப்பதால் ஸ்மார்ட் டிவி பயன்படுத்த வேண்டிய அவசியமே இருக்காது. மேலும் இந்த புரொஜெக்டர் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும். அதேசமயம் ஆண்ட்ராய்டு 9.0 ஓஎஸ் மூலம் இந்த சாதனம் இயங்குகிறது.
குறிப்பாக இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 460 புரொஜெக்டர் உடன் ஸ்மார்ட்போன் (Smartphones), லேப்டாப் (Laptops), யுஎஸ்பி டிரைவ் (USB Drive), செட்-டாப் பாக்ஸ் (Set-top Boxes), மைக்ரோஎஸ்டி (microSD) கார்டுகள் மற்றும் மல்டிபிள் போர்ட் (Multiple Ports) போன்றவற்றை
கனெக்ட் செய்து கொள்ள முடியும்.

வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் (Wireless Screen Mirroring), ஆட்டோ ஃபோகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) சப்போர்ட் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர கேமிங் கேமிங் கன்சோல் (gaming console), ஹார்டு டிரைவ் (Hard Drive) போன்றவற்றை கனெக்ட் இதில் செய்துகொள்ள முடியும்.
அதேபோல் ப்ளூடூத், வைஃபை, இரண்டு எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், ஒரு யுஎஸ்பி (USB) போர்ட் , ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், ஏவி இன்புட் (AV Input) போர்ட், ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளிவந்தது போர்ட்ரானிக்ஸ் பீம் 460 புரொஜெக்டர். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த புரொஜெக்டர் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








