43 இன்ச் டிவி வாங்க இதுதான் சரியான சான்ஸ்.. ரூ.11,999 பட்ஜெட்ல பெசல் லெஸ் டிசைன்.. எந்த மாடல்?
டைவா (Daiwa) நிறுவனத்தின் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி ஒன்று பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த டிவி பெசல் லெஸ் டிசைன், குவாட் கோர் பிராசஸர், பாக்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டைவா டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் D43F1COC என்ற மாடல் நம்பர் கொண்ட டைவா 43 ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி (Daiwa 43 inch Full HD LED Smart Linux TV) மாடலுக்கு 53 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.11,999 விலையில் வாங்கிவிட முடியும்.

டைவா 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி அம்சங்கள் (Daiwa 43 inch Smart Linux TV Specifications): ஃபுல் எச்டி டிஸ்பிளே வசதியுடன இந்த டைவா ஸ்மார்ட் டிவி வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
அதேபோல் பெசல் லெஸ் டிசைன் உடன் இந்த டிவி வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் குவாட் கோர் பிராசஸர் (QUAD Core Processor) வசதியுடன் டைவா 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
குறிப்பாக 20W பாக்ஸ் ஸ்பீக்கர்கள்(Box Speaker) உடன் இந்த டைவா 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவி வெளிவந்தது. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். மேலும் 5 சவுண்ட் மோட்கள் (Sound Modes)இந்த டைவா ஸ்மார்ட் டிவியில் உள்ளன. அதேபோல் இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது டைவா நிறுவனம்.
கேமிங் பயனர்களை கவருக்கும் வகையில் MALI-G31 கிராபிக்ஸ் பிராசரஸர் இந்த டைவா 43 இன்ச் ஸ்மார்ட் டிவியில் உள்ளது. அதேபோல் 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி ஸ்டோரேஜ் வசதியும் இந்த டைவா 43 ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவியில் உள்ளது. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், யூடியூப், சோனி லிவ் உள்ளிட்ட பல்வேறு ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.
லினக்ஸ் (Linux) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த டைவா 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி வெளிவந்தது. மேலும் இந்த டிவி மிராகேஸ்ட் (Miracast), ஆப்பிள் ஏர்பிளே சப்போர்ட் (Apple Airplay support) போன்றவற்றை போன்றவற்றை ஆதரிக்கிறது. இந்த டிவியை உங்கள் ஸ்மார்ட்போன் (smartphone), லேப்டாப் (laptop) போன்ற சாதனங்களில் இருந்து ஸ்ட்ரீம் செய்துகொள்ளலாம்.
எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட், வைஃபை உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டைவா 43 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் லினக்ஸ் டிவியில் உள்ளன. இதுதவிர ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் இந்த டிவியுடன் வருகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications