Home
Gadgets

யாரும் இப்படி ஒரு சலுகை கொடுக்க மாட்டாங்க.. ரூ.19,999 பட்ஜெட்ல 50 இன்ச் 4K டிவி.. 16ஜிபி மெமரி.. எந்த மாடல்?

இந்தியாவில் 43 இன்ச், 40 இன்ச், 43 இன்ச் டிவிகளை விட 50 இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. எனவே தான் பல முன்னணி நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் 50 இன்ச் ஸ்மார்ட டிவிகளை அறிமுகம் செய்கின்றன. இந்நிலையில் தாம்சன் நிறுவனத்தின் 50 இன்ச ஸ்மார்ட் டிவி ஒன்று யாருமே எதிர்பார்க்காத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதாவது பிளிப்கார்ட் தளத்தில் 50OPMAXGT9020 என்ற மாடல் நம்பர் கொண்ட தாம்சன் ஒபி மேக்ஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவிக்கு (Thomson OP MAX 50 inch 4K Smart Google TV) 52 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.19,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. எனவே இந்த டிவியை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

யாரும் இப்படி ஒரு சலுகை கொடுக்க மாட்டாங்க.. ரூ.19999 பட்ஜெட்ல 4K டிவி!

தாம்சன் ஓபி மேக்ஸ் 50 இன்ச் டிவி அம்சங்கள் (50 inch Thomson OP MAX TV Specifications): இந்த டிவி கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த டிவி இயங்குகிறது. குவாட் கோட் மீடியாடெக் பிராசஸர் கொண்டுள்ளது தாம்சன் ஒபி மேக்ஸ் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த டிவிக்கு வழங்கப்பட்ட பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

மாலி 450 ஜிபியு (Mali 450 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இதுதவிர எம்இஎம்சி (MEMC) சப்போர்ட் கிடைக்கிறது. எனவே இந்த டிவியில் அனைத்து கேமிங் ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

50 இன்ச் தாம்சன் ஸ்மார்ட் டிவி ஆனது 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்கள், லூமினோசிட்டி என்ஹான்ஸ்மெண்ட், கட்டிங் எட்ஜ் பேக்லைட்னிங் மற்றும் டீப் கான்ட்ராஸ்ட் சப்போர்ட் கொடுக்க டிகியூஎல்இடி (TQLED) டெக்னாலஜி உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

மேலும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+), 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1 பில்லியன் கலர் டெப்த், 60Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 178 டிகிரி வியூ ஆங்கிள் உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்களும் இந்த டிவியில் உள்ளன. குறிப்பாக பெசல்-லெஸ் டிசைன் மற்றும் ஐபிஎஸ் பேனல் (IPS Panel)ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. எனவே இந்த டிவி மூலம் துல்லியமான 4கே வீடியோக்களை பார்க்க முடியும்.

2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி, இன்-பில்ட் குரோம்காஸ்ட் (In-built Chromecast), கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistan), கூகுள் டிவி கிட்ஸ் மோட் (Google TV Kids Mode), கூகுள் டியோ (Google Duo)போன்ற பல அசத்தலான அம்சங்கள் இந்த தாம்சன் ஓபி மேக்ஸ் டிவியில் உள்ளன.

யாரும் இப்படி ஒரு சலுகை கொடுக்க மாட்டாங்க.. ரூ.19999 பட்ஜெட்ல 4K டிவி!

தரமான டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus), டிடிஎஸ் ட்ரூசவுண்ட் (DTS TruSurround) போன்ற ஆடியோ அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. மேலும் இதில் 40W ஆடியோ அவுட் கொண்ட 2 பாக்ஸ் ஸ்பீக்கர்கள் பேக் செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி தரமான ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் ஓடிடி தளங்களின் ஷார்ட்கட் பட்டன்கள் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் இந்த டிவியுடன் வருகிறது. பின்பு வைஃபை, புளூடூத், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த தாம்சன் டிவியில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
52 percent discount on Thomson OP MAX 50 inch 4K Smart Google TV in Flipkart sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X