அமேசான் அதிர போகுது.. 200 இன்ச்.. Auto கீஸ்டோன்.. ஆஃபரில் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர்.. எந்த மாடல்?
இந்தியாவில் ஸ்மார்ட் டிவிகளை விட ப்ரொஜெக்டர் மாடல்களுக்கு தற்போது அதிக வரவேற்பு உள்ளது. அதாவது 100 இன்ச் டிவிகளை விட பெரிய திரை அனுபவம் கொடுக்கும் ஸ்மார்ட் ப்ரொஜெக்டர் மாடல்களை தான் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அறிமுகம் செய்து வருகின்றன. இந்நிலையில் அமேசான் தளத்தில் ஒரு போர்ட்ரானிக்ஸ் ப்ரொஜெக்டர் (Portronics Projector) மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
தற்போது அமேசான் (amazon) தளத்தில் போர்ட்ரானிக்ஸ் பீம் 460 (Portronics Beem 460) ப்ரொஜெக்டர் மாடலுக்கு 52 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,299 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ப்ரொஜெக்டர் மாடலை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.13049 விலையில் இந்த சாதனத்தை வாங்கிவிட முடியும்.

போர்ட்ரானிக்ஸ் பீம் 460 ப்ரொஜெக்டர் அம்சங்கள் (Portronics Beem 460 Specifications): இது ஒரு எல்இடி (LED) சப்போர்ட் கொண்ட ப்ரொஜெக்டர் மாடல் ஆகும். 1080p ஃபுல்எச்டி (FHD) ரெசல்யூஷன் மற்றும் 4000 லுமன்ஸ் பிரைட்னஸ் (Lumens Brightness) போன்ற பல மேம்பட்ட அம்சங்கள் இந்த ப்ரொஜெக்டரில் உள்ளது.
அசத்தலான பிக்சர் குவாலிட்டி வழங்கும் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 460 ப்ரொஜெக்டர் மாடல். அதேபோல் இந்த போர்ட்ரானிக்ஸ் பீம் 400 ப்ரொஜெக்டர் மாடலில் 30,000 மணி நேர எல்இடி லேம்ப் லைஃப் (LED Lamp Life) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 16:9 அஸ்பெக்ட் ரேசியோ (Aspect Ratio) கிடைக்கிறது.
அதேபோல் போர்ட்ரானிக்ஸ் பீம் 460 புரொஜெக்டரில் 40 இன்ச் முதல் அதிகபட்சமாக 200 இன்ச் வரையில் புரோஜெக்சன் (Projection) செய்து கொள்ள முடியும். பின்பு 200 இன்ச் டிஸ்பிளே அளவு கிடைப்பதால் ஸ்மார்ட் டிவி பயன்படுத்த வேண்டிய அவசியமே இருக்காது. அதாவது பெரிய டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும் இந்த ப்ரொஜெக்டர்.
குறிப்பாக போர்ட்ரானிக்ஸ் பீம் 460 ப்ரொஜெக்டர் உடன் ஸ்மார்ட்போன் (Smartphones), லேப்டாப் (Laptops), யுஎஸ்பி டிரைவ் (USB Drive), செட்-டாப் பாக்ஸ் (Set-top Boxes), மைக்ரோஎஸ்டி (microSD) கார்டுகள் மற்றும் மல்டிபிள் போர்ட் (Multiple Ports) போன்றவற்றை கனெக்ட் செய்து கொள்ள முடியும். பின்பு ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம் மூலம் இயங்குகிறது இந்த சாதனம்.

மேலும் வயர்லெஸ் ஸ்கிரீன் மிரர்ரிங் (Wireless Screen Mirroring), ஆட்டோ ஃபோகஸ் (Auto Focus), ஆட்டோ கீஸ்டோன் (Auto Keystone) போன்ற அசத்தலான வசதிகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர கேமிங் கேமிங் கன்சோல் (gaming console), ஹார்டு டிரைவ் (Hard Drive) போன்றவற்றை கனெக்ட் இதில் செய்துகொள்ள முடியும்.
மேலும் ப்ளூடூத், வைஃபை, இரண்டு எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், ஒரு யுஎஸ்பி (USB) போர்ட் , ஒரு ஆடியோ அவுட் (Audio Out) போர்ட், ஏவி இன்புட் (AV Input) போர்ட், ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் வெளிவந்தது போர்ட்ரானிக்ஸ் பீம் 460 ப்ரொஜெக்டர் . பின்பு 10W ஸ்பீக்கர்கள் இதில் உள்ளது.


Click it and Unblock the Notifications








