55, 65-இன்ச் TV-க்கு டாட்டா.. HALF RATE-ல் 75-இன்ச் Google டிவி.. டர் கிளப்பும் Dolby ATMOS சவுண்ட்!
பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் கிராண்ட் ஹோம் அப்ளையன்ஸஸ் சேல் (Grand Home Appliances Sale) என்கிற சிறப்பு விற்பனை நடந்து வருகிறது. இன்று, பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் தொடங்கிய இந்த ஸ்பெஷல் சேல் ஆனது வருகிற பிப்ரவை 12 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.
இதன் கீழ் வாஷிங் மெஷின்கள், பிரிட்ஜ்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் மீது ஏகபோகமாக நேரடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. அதாவது எந்த பேங்க் கார்டு டிஸ்கவுண்ட் அல்லது எக்ஸ்சேன்ஜ் ஆபரும் சேர்க்கப்படாமலேயே நல்ல விலை குறைப்பு கிடைக்கிறது. அப்படிப்பட்ட ஒரு தரமான ஸ்மார்ட் டிவி ஆபரை தான் நாம் இங்கே பார்க்க உள்ளோம்.

43-இன்ச், 55-இன்ச் மற்றும் 65-இன்ச் டிவி மாடல்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் படியாக சோனி நிறுவனத்தின் 75-இன்ச் கூகுள் டிவி மாடல் ஒன்றின் மீது நேரடியாக 51% டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. என்ன மாடல்? அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? என்னென்ன முக்கிய அம்சங்கள்? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது - 75-இன்ச் சோனி பிராவியா 2 II அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷனை (75-inch SONY BRAVIA 2 II Ultra HD 4K LED Smart Google TV 2025 Edition) பற்றித்தான்!
அசல் விலை என்ன, ஆபர் விலை என்ன? சோனி நிறுவனத்தின் இந்த 75-இன்ச் பிராவியா 2 II அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி மாடலின் எம்ஆர்பி ரூ.2,20,900 ஆகும், இருப்பினும் இது பிளிப்கார்ட்டில் 51% டிஸ்கவுண்ட்டை பெற்று ரூ.1,07,990 க்கு வாங்க கிடைக்கிறது
முக்கிய அம்சங்கள்:
- 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான அல்ட்ரா எச்டி (4கே) எல்இடி டிஸ்பிளே
- 4கே ப்ராசஸர் எக்ஸ்1
- டால்பி அட்மோஸ் உடனான 20W டோட்டல் சவுண்ட் அவுட்புட்
- வாங்கிய நாளிலிருந்து சோனி பிராண்டால் வழங்கப்படும் தொழில்நுட்ப சிக்கலுக்கான 1 வருட விரிவான உத்தரவாதம் (ரிமோட் உட்பட).
ஒருவேளை நீங்கள் இன்னும் மலிவான விலைக்கு அல்லது 75-இன்ச் டிஸ்பிளேவை விட இன்னும் சிறிய எ , அளவிலான ஸ்க்ரீன் சைஸ் கொண்ட சோனி ஸ்மார்ட் டிவி மாடலை தேடினால் 50-இன்ச் சோனி பிராவியா 2 II அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி 2025 எடிஷனை (50-inch SONY BRAVIA 2 II Ultra HD 4K LED Smart Google TV 2025 Edition) வாங்கலாம்
இது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.51,990 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த மாடலில் அசல் விலை ரூ.72,900 ஆகும். அதாவது பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது இந்த 50-இன்ச் மாடலின் மீது நேரடியாக 28% டிஸ்கவுண்ட்டை வழங்குகிறது. உண்மையிலேயே இரண்டுமே நல்ல டீல் தான். உங்கள் பட்ஜெட்டிற்கு எது பெஸ்ட்-ஓ அதை தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications








