பிளிப்கார்ட் பிச்சுக்கும் பாருங்க.. 8ஜிபி மெமரி.. டால்பி ஆடியோ.. ஆஃபரில் Redmi 4கே ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் தற்போது சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவிக்கு (Redmi 43 inch 4K Smart Fire Tv) தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களைப் பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் தற்போது ரெட்மி 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவிக்கு 51 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இஎம்ஐ முறையில் வாங்கினால் இந்த டிவியை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.19499 விலையில் வாங்கிவிட முடியும்.

ரெட்மி 43 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி அம்சங்கள் (Redmi 43 inch 4K Smart Fire Tv Specifications) : தரமான ஃபயர் ஓஎஸ் 7 (Fire TV OS 7) மூலம் இந்த ரெட்மி 43 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி இயங்குகிறதுபிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், டிஸ்னி+ஹாட்ஸ்டார் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 12,000க்கும் மேற்பட்ட ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.
இந்த ரெட்மி டிவி 4K டிஸ்பிளே, 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. HDR 10, விவிட் பிக்சர் இன்ஜின் (Vivid Picture Engine), ஆட்டோ லோவ் லேட்டன்சி மோட் (Auto Low Latency Mode), எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி (Motion compensation Technology) உள்ளிட்ட டிஸ்பிளே அம்சங்கள் டிவியில் உள்ளன.
குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ55 பிராசஸர் உடன் ரெட்மி 43 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி மாடல் வெளிவந்துள்ளது. இந்த பிராசஸர் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி மெமரி உடன் இந்த ரெட்மி 43 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி மாடல் வெளிவந்துள்ளது.
குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. ஸ்மார்ட் ரிமோட் உடன் இந்த டிவி வெளிவந்துள்ளது. அதன்படி வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் மியூசிக்கிற்கான ஷார்ட்கட் பட்டன்கள் கொண்டுள்ளது இந்த டிவியின் ரிமோட்.

வைஃபை 802.11 ஏசி, ஏர்ப்ளே, மிராகாஸ்ட், புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், ஈதர்நெட், ஆண்டெனா உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரெட்மி 43 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி மாடலில் உள்ளன.
டால்பி ஆடியோ (Dolby Audio), டிடிஎஸ்-எச்டி (DTS-HD) மற்றும் டிடிஎஸ்: விர்ச்சுவல் எக்ஸ் (DTS: Virtual X) போன்ற ஆடியோ அம்சங்களைக் கொண்டுள்ளன இந்த ரெட்மி 43 இன்ச் 4கே ஸ்மார்ட் ஃபயர் டிவி டிவி. மேலும் 24W ஸ்பீக்கர்கள் வசதியும் இந்த டிவியில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








