இதுதான் ஆஃபர்.. ரூ.13,999 பட்ஜெட்ல 43 இன்ச் டிவி.. கூகுள் டிவி OS.. டால்பி ஸ்பீக்கர்கள். எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் கேண்டி (CANDY) 43 இன்ச் 4கே அல்ட்ரடி எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி ஆனது மலிவு விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி டால்பி விஷன், டால்பி ஸ்பீக்கர்கள், 8ஜிபி மெமரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது CANDY ஸ்மார்ட் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் CA43C9UG என்ற மாடல் நம்பர் கொண்ட கேண்டி 43 இன்ச் 4கே அல்ட்ரடி எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி ( (CANDY 43 inch 4K Smart Google TV) மாடலுக்கு 51 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.13,999 விலையில் வாங்க முடியும்.

கேண்டி 43 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள் (CANDY 43 inch 4K Smart Google TV Specifications): 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வசதியுடன் இந்த CANDY 43 இன்ச் 4கே அல்ட்ரடி எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி வெளிவந்து. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
அதேபோல் டால்பி விஷன் (Dolby Vision), 16.07 மில்லியன் கலர்ஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. இதுதவிர பல்வேறு அசத்தலான டிஸ்பிளே அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. மேலும் இந்த டிவி உடன் ஸ்மார்ட் ரிமோட் ஒன்றும் கிடைக்கிறது.
குறிப்பாக கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த CANDY டிவி இயங்குகிறது.எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஜியோ ஹாட்ஸ்டார்(JioHotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.
மல்டிடாஸ்கிங் பிராசஸர் வசதி இந்த டிவியில் உள்ளது. மேலும் 1.5ஜிபி ரேம் மற்றும் ஜிபி மெமரி வசதியுடன் இந்த அசத்தலான CANDY 43 இன்ச் 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி வெளிவந்தது. எனவே இந்த டிவியில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
பெசல் லெஸ் டிசைன் உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 16W டால்பி ஆடியோ ஸ்பீக்கர்கள் இந்த டிவியில் உள்ளன. எனவே இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தைக் கொடுக்கும். அதேபோல் பல்வேறு ஆடியோ மோட்கள் மற்றும் பிக்சர் மோட் அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த டிவி.
எச்டிஎம்ஐ போர்ட்கள், யுஎஸ்பி போர்ட், வைஃபை, ஆப்டிகல் (Optical), ஆர்எப் (RF), ப்ளூடூத் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த டிவியில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








