போனா வராது.. 60W ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ்.. ஆஃபரில் 50 இன்ச் 4K ஸ்மார்ட் டிவி.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் (flipkart) தளத்தில் ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி (Blaupunkt Cybersound 50 inch Ultra HD 4K Smart Android TV) தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக டால்பி அட்மாஸ், 60W ஸ்பீக்கர்கள், எச்டிஆர், குவாட் கோர் பிராஸசர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி வெளிவந்தது. இப்போது ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் 50 இன்ச் டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் அம்சங்களைப் பார்க்கலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் 50 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவிக்கு (50CSA7007) 51 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.23,199 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.1250 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த டிவியை ரூ.21949 விலையில் வாங்கிவிட முடியும்.

ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் 50 இன்ச் 4கே டிவி அம்சங்கள் (Blaupunkt CyberSound 50 inch 4K TV Specifications): அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3840 x 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+) ஆதரவு, 500 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
மீடியாடெக் குவாட் கோர் (QUAD Core) பிராசஸர் உடன் இந்த அசத்தலான 50 இன்ச் ஸ்மார்ட் டிவி வெளிவந்தது. குறிப்பாக இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு மாலி ஜி52 எம்சி1 ஜிபியு(Mali G52 MC1 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த டிவியில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவியை நம்பி வாங்கலாம்.
அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் 50 இன்ச் டிவி வருகிறது. மேலும் ஆண்ட்ராய்டு டிவி 10 (Android TV 10) மூலம் இந்த டிவி இயங்குகிறது. குறிப்பாக மேம்பட்ட பல புதிய அம்சங்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும். பின்பு கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant), கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), குரோம் காஸ்ட் (Chromecast), ஏர்பிளே (AirPlay) போன்றவற்றையும் இதில் பயன்படுத்தலாம்.
யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம். எம்இஎம்சி (MEMC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் மோஷன் காம்பென்ஸேஷன் டெக்னாலஜி
(Motion compensation Technology) ஆதரவும் இந்த டிவியில் உள்ளது.
டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) மற்றும் டிடிஎஸ் ஆதரவு கொண்ட 60W ஸ்பீக்கர்கள் இந்த ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் 50 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவியில் உள்ளன. எனவே இந்த டிவி ஒரு தியேட்டர் அனுபவத்தை வழங்கும். மேலும் ஸ்டான்டர்ட் (Standard), மியூசிக் (Music), மூவிஸ் (Movie), ஸ்போர்ட்ஸ் (Sports) போன்ற ஆடியோ மோட்கள் இந்த டிவியில் உள்ளன.
2 யுஎஸ்பி போர்ட் (USB Port), 3 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI), ஈதெர்நெட் போர்ட் (Ethernet Port) மற்றும் ஆடியோ ஜாக் சப்போர்ட் கொண்டுள்ளது இந்த அசத்தலான டிவி. இதுதவிர ப்ளூடூத் (Bluetooth) மற்றும் வை-பை கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த டிவியில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி குறைந்த விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications