Home
Gadgets

வாங்காம விட மாட்டீங்க.. பாதிக்குப்பாதி விலை.. சாம்சங், சோனி 55 இன்ச் டிவிகள்.. அள்ளிக்கொடுக்கும் அமேசான்!

அமேசானில் (Amazon) பட்டையை கிளப்பும் 55 இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு பாதிக்குப்பாதி ஆஃபர் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் நியோ சீரிஸ், சோனி பிராவியா சீரிஸ், ரெட்மி எக்ஸ் சீரிஸ் டிவிகள் மட்டுமல்லாமல் எல்ஜி, எம்ஐ போன்ற விருப்பமான நிறுவனங்களின் டிவிகளும் ஆஃபர் விலையில் வந்திருக்கின்றன.

இந்த ஆஃபரில், எம்ஐ 55 இன்ச் எக்ஸ் சீரிஸ் 4கே ஆண்ட்ராய்டு டிவி (Mi 55-inch X-Series 4K Android TV), சாம்சங் 55 இன்ச் கிரிஸ்டல் 4கே நியோ எல்இடி டிவி (Samsung 55-inch Crustal 4K Neo LED TV) ஆகிய டிவிகளின் அம்சங்கள் மற்றும் விலையை பார்க்கப்போகிறோம்.

பாதிக்குப்பாதி விலை! சாம்சங், சோனி 55 இன்ச் டிவிகள்! அமேசான் அசத்தல்!

அதோடு சோனி 55 இன்ச் எக்ஸ்ஆர் சீரிஸ் ஓஎல்இடி கூகுள் டிவி (Sony 55-inch XR Series OLED Google TV), எல்ஜி 55 இன்ச் 4கே யூஎச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி (LG 55-inch 4K UHD Smart LED TV) மற்றும் ரெட்மி 55 இன்ச் 4கே யூஎச்டி டிவி (Redmi 55-inches 4K UHD TV) ஆகிவற்றின் விலையையும் தெரிந்து கொள்ளப்போகிறோம்.

எம்ஐ எக்ஸ் சீரிஸ் 55 இன்ச் டிவி விலை மற்றும் அம்சங்கள்: இதுவொரு 4K அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு டிவியாகும். கூகுள் அசிஸ்டென்ட் வசதி இருக்கிறது. 30W சவுண்ட் அவுட்புட் கிடைக்கும். 3 எச்டிஎம்ஐ போர்ட் கொடுக்கப்பட்டுள்ளன. 2 யுஎஸ்பி போர்ட் வருகின்றன. இந்த டிவியின் விலை ரூ.54,000 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இப்போது, அமேசானில் ரூ.37,000க்கு கிடைக்கிறது.

சாம்சங் 55 இன்ச் நியோ டிவி விலை மற்றும் அம்சங்கள்: இந்த டிவி 4K அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவியாகும். ஸ்மார்ட் ரிமோட் வருகிறது. 3 எச்டிஎம்ஐ மற்றும் 2 யுஎஸ்பி போர்ட் வருகிறது. 20W சவுண்ட் அவுட்புட் கிடைக்கிறது. 50Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. இந்த டிவியின் விலை ரூ.69,900ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அமேசானில் ரூ.45,990க்கு கிடைக்கிறது.

சோனி பிராவியா 55 இன்ச் கூகுள் டிவி விலை மற்றும் அம்சங்கள்: இதுவொரு 4K அல்ட்ரா எச்டி ஓஎல்இடி டிவியாகும். 30W சவுண்ட் அவுட்புட் கிடைக்கிறது. அதோடு ஸ்பீக்கர்கள் வருகின்றன. வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி இருக்கிறது. 4 எச்டிஎம்ஐ போர்ட் 2 யுஎஸ்பி போர்ட் வருகிறது. இந்த டிவியின் விலை ரூ.2,49,900ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் அமேசானில் ரூ.1,24,990க்கு விற்பனைக்கு வந்துள்ளது.

எல்ஜி 55 இன்ச் ஸ்மார்ட் டிவி விலை மற்றும் அம்சங்கள்: இதுவொரு 4K அல்ட்ரா எச்டி எல்இடி டிவியாகும். அன்லிமிடெட் ஓடிடி ஆப்ஸ் பயன்படுத்திக்கொள்ள முடியும். 2 யுஎஸ்பி மற்றும் 3 எச்டிஎம்ஐ போர்ட் வருகிறது. 20W சவுண்ட் அவுட்புட் வருகிறது. இந்த டிவியின் விலை ரூ.79,990ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அமேசானில் ரூ.45,990க்கு கிடைக்கிறது.

ரெட்மி 55 இன்ச் ஆண்ட்ராய்டு டிவி விலை மற்றும் அம்சங்கள்: இதுவொரு 4K அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு டிவியாகும். ஆண்ட்ராய்டு டிவி 10 சிப்செட் வருகிறது. ப்ளூடூத் சப்போர்ட் உள்ளது. 2 யுஎஸ்பி மற்றும் 3 எச்டிஎம்ஐ போர்ட் உள்ளது. டால்பி விஷன் சவுண்ட் குவாலிட்டி வருகிறது. இந்த டிவியின் விலை ரூ.54,999 ஆகும். இப்போது அமேசானில் ரூ.34,999க்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
50 Percent Offer On Sony Bravia 55 inch XR Series TV And Samsung, Mi, Redmi TV in Amazon Sale Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X